search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுமைப்பெண் திட்டத்தில்  3,257 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை
    X

    கோப்புபடம்.

    புதுமைப்பெண் திட்டத்தில் 3,257 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை

    • உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.
    • கல்வித்துறை மற்றும் வங்கியில் இருந்து ஒப்புதல் பெற்றவுடன் மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதுபோல் தனியார் பள்ளியில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படித்து பின்னர் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும்.

    இளநிலை கல்வி பெறும் அனைத்து மாணவிகளும், தொழிற்கல்வி, மருத்துவக்கல்வி படிக்கும் 2-ம் ஆண்டு முதல் 5-ம் ஆண்டு வரை படிக்கும் மாணவிகளும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்காக http://penkalvi.tn.gov.in வழியாக விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். திருப்பூர் மாவட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதி - திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    முதல்கட்டமாக மாவட்டத்தில் 2022-23-ம் ஆண்டில் 40 கல்லூரிகளில் இருந்து 3 ஆயிரத்து 257 மாணவிகளுக்கு படிப்பு முடியும் வரை மாதம் ரூ.1,000 வீதம் வருடத்துக்கு மொத்தம் ரூ.3 கோடியே 90 லட்சத்து 84 ஆயிரம் அவரவர் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.

    இரண்டாவது கட்டமாக மாவட்டத்தில் 68 கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் 3 ஆயிரத்து 91 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 பெற அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்கள் மூலமாக விண்ணப்பித்துள்ளனர். கல்வித்துறை மற்றும் வங்கியில் இருந்து ஒப்புதல் பெற்றவுடன் மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×