search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector Instruction"

    • புதுமைப்பெண் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • மாணவிகளின் விவரங்களைச் சேகரித்து அவர்களை புதுமைப் பெண் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என கூறினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசியதாவது, 

    புதுமைப் பெண் திட்டம் மாவட்ட சமூக நலத்துறை மூலமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 6- ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று, உயர்கல்வியில் சேர்ந்து பயிலும் மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எனவே, ஒவ்வொரு கல்வி நிறுவனமும் தகுதியான முதலாம் ஆண்டு மாணவிகளின் விவரங்களைச் சேகரித்து அவர்களை புதுமைப் பெண் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என கூறினார். மேலும் அந்தந்த கல்வி நிறுவன வளாகங்களில் புதுமைப்பெண் திட்டம் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏற்படுத்தி, துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்க வேண்டும். கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரி முதல்வர்கள், அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • காலை உணவுத் திட்டத்திற்கு பாத்திரங்கள் கொள்முதல் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • சுய உதவிக்குழுவினர்க்கு தரமான பாத்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு விரைவில் வழங்கப்படும் என கூறினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், முதல மைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு பாத்திரங்கள் கொள்முதல் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசினார் அப்போது அவர் பேசிய தாவது:- 1 முதல் 5-ம் வகுப்பு வரை அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் ஊட்டச்சத்து நிலை பாது காக்கும் பொருட்டு முதல மைச்சரின் காலை உணவு திட்டத்தினை தமிழக அரசு தொடங்கி வைத்தது.

    அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வரா யன்மலை வட்டத்திற் குட்பட்ட 8 ஊராட்சிகளில் உள்ள 15 அரசு தொடக்கப் பள்ளிகளில் முதல மைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கி செயல் படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 8 வட்டா ரங்களில் உள்ள ஊராட்சி, நகராட்சி மற்றும் பேருராட்சி களுக் குட்பட்ட 638 அரசுத் தொடக்கப்பள்ளியில் இத்திட்டம் செயல் படுத்தப் பட உள்ளது. முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினால் தொடக்கப் பள்ளி மாண வர்கள் ஆர்வமுடனும், ஆரோக்கிய முடனும் கல்வி கற்கும் சூழல் உருவாக்கப்பட உள்ளது. இத்திட்டம் செயல்படுத் தப்படவுள்ள பள்ளிகளில், காலை உணவு சமைத்து வழங்கும் பணி களில் ஈடுபடவுள்ள சுய உதவிக்குழுவினர்க்கு தரமான பாத்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு விரைவில் வழங்கப்படும் என கூறினார். இக்கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குநர் சுந்த ராஜன், உதவி இயக்குநர் ஊராட்சிகள் ரெத்தின மாலா மற்றும் அரசு அலு வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் நீர்நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
    • சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜீத் அறிவுறுத்தியுள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார்.

    வறட்சி நிவாரணம், நுண்ணீர் பாசன குழாய் மாற்றம், ஆழ்குழாய் கிணறு, வரத்துக்கால் மற்றும் வரத்துக்கண்மாய் தூர்வாரக் கோருதல், மிளகாயை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்கக் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டரிடம் விவசாயிகள் மனு விடுத்தனர்.

    இந்த கோரிக்கைகள் தொடர்பாக துறை அலுவலர்கள் களஆய்வுகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    பின்னர் கலெக்டர் ஆஷா அஜீத் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நீர் நிலையில் உள்ள ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். விவசாய நிலங்களை விலங்குகள் சேதப்படுத்தாமல் பாதுகாக்கவும், தேவையான நிலங்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்கவும், குறிப்பாக நீர்நிலைகளில் கருவேல மரங்கள் அகற்றுதல் போன்ற விவசா யிகளின் கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    நில அளவைத்துறையினர் விவசாயிகள் கோரும் அளவீட்டுப்பணியினை விரைந்து மேற்கொள்ளவும், விவசாயிகளுக்கான மின் விநியோகங்களை சீரான முறையில் வழங்கிடவும், தேவையான உரங்களை இருப்பு வைக்கவும், வங்கிகளின் மூலம் கடனுதவிகள் வழங்கி வேளாண் சார்ந்த புதிய தொழில் தொடங்கிட உறுதுணையாக இருக்கவும், கடனுக்குரிய மானியத்தொகையை தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கைகளை துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் தனபாலன், கால்நடைப் பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் நாகநாதன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவை இல்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர்.
    • போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதால் காற்று மாசுபாடு ஏற்படுவதோடு இதனால் வெளிப்படும் நச்சு வாய்களால் மூச்சு திணறல் கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவை இல்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர்.

    ஆனால் தற்பொழுது போகி பண்டிகையின் போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இலைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப்,காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசுபாடு ஏற்படுவதோடு இதனால் வெளிப்படும் நச்சு வாய்களால் மூச்சு திணறல் கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது.

    வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாகிறது. எனவே தென்காசி மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் போகிப் பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
    • ஒரு மாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் 165 மனுக்கள் மாவட்ட பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலை யில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

    மேலும் இன்று பெறப்பட்ட மனுக்களில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனி நபர் வீடு வழங்கும் திட்டம் குறித்த மனுக்களே அதிகளவு வரப் பெற்றன. மேலும் மாவட்ட கலெக்டர் தெரிவிக்கையில், ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒரு மாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும்.

    தீர்வு வழங்க முடியாத மனுக்கள் குறித்து மனுதாரர்களிடம் உரிய காரணம் குறித்து எடுத்துரைக்க வேண்டும், அப்பொழுதுதான் அது போன்ற மனுக்கள் திரும்பத் திரும்ப வராது. எனவே பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறை அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கிஸ் தெரிவித்தார்.

    • பிளாஸ்டிக் பைகளை வடிகால் வாய்க்காலில் போடுபவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கள்ளக்குறிச்சி கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
    • கள்ளக்குறிச்சி பேருந்து நிலைய பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி நகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் நடைபெற்ற தூய்மைப் பணிகளையும், கா.மாமனந்தல்சாலையில் தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிப்பதையும் ஆய்வு செய்தார். பின்னர், கா.மாமனந்தல் சாலையில் டெங்கு கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுவரும் களப்பணியாளர்களின் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது வீடு வீடாக சென்று, டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு கொசு புழு ஒழிப்பு பணியாளர்களை மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே உள்ள வடிகால் வாய்க்கால், கள்ளக்குறிச்சி பேருந்து நிலைய பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேருந்து நிலையத்தை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரித்திடவும், வடிகால் வாய்க்கால்களில் நெகிழிப் பைகளை போடுபவர்களை கண்டறிந்து போதிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்திட வேண்டும் என மாவட்ட கலெக்டர் நகராட்சி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். தொடர்ந்து கள்ளக்குறிச்சி நகராட்சி சார்பில் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பசுமை உரப்பூங்கா, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை மறுசுழற்சி செய்தல் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டு, அன்றாடம் சேகரிக்கும் குப்பைகளை அன்றே தரம் பிரித்து உரம் தயாரித்தல், மறுசுழற்சி செய்யும் பணிகளை மேற்கொள்ளவும் நகராட்சி பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். ஆய்வின்போது நகரமன்ற தலைவர் சுப்புராயலு, நகராட்சி ஆணையாளர் குமரன், நகராட்சி பொறியாளர் முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கடலூர் கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

    கடலூர்:

    காவிரி டெல்டா பகுதியில் அதிக கனமழை பெய்வதால் மேட்டூர் அணை நீர் மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து உபரி நீரினை காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்பட உள்ளது. இவ்வறிப்பினை தொடர்ந்து வெள்ளநீர் கொள்ளிடம் ஆற்றின் வழியாக வெளியேற் றப்பட்டு வருகிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் மற்றும் அதனை சார்ந்த தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியரின் உரிய அறிவுரைக்குப் பின் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும். மேலும், பொது மக்கள் உரிய பாதுகாப்பு ஏதுமின்றி கொள்ளிடம் ஆற்றில் குளித்தல், நீந்துதல், மீன் பிடித்தல், நீர்நிலைகளின் அருகே குழந்தைகளை அனுமதித்தல், கால்நடைகள் மேய்த்தல், பாதுகாப்பற்ற முறையில் புகைப்படங்களோ அல்லது செல்பி எடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் செய்திக் குறிப்பில் கூறியிருந்தார்.

    ×