search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Safe Places"

    கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கடலூர் கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

    கடலூர்:

    காவிரி டெல்டா பகுதியில் அதிக கனமழை பெய்வதால் மேட்டூர் அணை நீர் மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து உபரி நீரினை காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்பட உள்ளது. இவ்வறிப்பினை தொடர்ந்து வெள்ளநீர் கொள்ளிடம் ஆற்றின் வழியாக வெளியேற் றப்பட்டு வருகிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் மற்றும் அதனை சார்ந்த தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியரின் உரிய அறிவுரைக்குப் பின் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும். மேலும், பொது மக்கள் உரிய பாதுகாப்பு ஏதுமின்றி கொள்ளிடம் ஆற்றில் குளித்தல், நீந்துதல், மீன் பிடித்தல், நீர்நிலைகளின் அருகே குழந்தைகளை அனுமதித்தல், கால்நடைகள் மேய்த்தல், பாதுகாப்பற்ற முறையில் புகைப்படங்களோ அல்லது செல்பி எடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் செய்திக் குறிப்பில் கூறியிருந்தார்.

    ×