search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் அறிவுறுத்தல்"

    • தீ தடுப்பு மற்றும் தொழிற்சாலைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது.
    • பாதுகாப்பான முறையில் வெடிபொருட்கள், பட்டாசுகளை வைத்து கையாள்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்ட தீ தடுப்பு மற்றும் தொழிற்சாலைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், இணை இயக்குனர்கள் (தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்) சரவணன், புகழேந்தி, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் அதிகாரி அப்பாஸ், துணை இயக்குனர்கள் ஜெயமுருகன், சுதாகர் மற்றும் வெடிபொருட்கள், பட்டாசு தொழிற்சாலைகள் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது, 'மாவட்டத்தில் வெடிபொருள் கிடங்குகள், பட்டாசு தொழிற்சாலைகள், பட்டாசு கடைகள் ஆகியவற்றில் பாதுகாப்பான முறையில் வெடிபொருட்கள், பட்டாசுகளை வைத்து கையாள்வதை உறுதிப்படுத்த வேண்டும். அவ்வப்போது தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மாவட்ட தீ தடுப்பு மற்றும் தொழிற்சாலைகள் பாதுகாப்பு குழு ஏற்படுத்தி, அதன் முதல் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பான முறையில் வெடிபொருட்கள் கையாள்வது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது' என்றார்.

    • புதுமைப்பெண் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • மாணவிகளின் விவரங்களைச் சேகரித்து அவர்களை புதுமைப் பெண் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என கூறினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசியதாவது, 

    புதுமைப் பெண் திட்டம் மாவட்ட சமூக நலத்துறை மூலமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 6- ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று, உயர்கல்வியில் சேர்ந்து பயிலும் மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எனவே, ஒவ்வொரு கல்வி நிறுவனமும் தகுதியான முதலாம் ஆண்டு மாணவிகளின் விவரங்களைச் சேகரித்து அவர்களை புதுமைப் பெண் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என கூறினார். மேலும் அந்தந்த கல்வி நிறுவன வளாகங்களில் புதுமைப்பெண் திட்டம் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏற்படுத்தி, துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்க வேண்டும். கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரி முதல்வர்கள், அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • காலை உணவுத் திட்டத்திற்கு பாத்திரங்கள் கொள்முதல் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • சுய உதவிக்குழுவினர்க்கு தரமான பாத்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு விரைவில் வழங்கப்படும் என கூறினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், முதல மைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு பாத்திரங்கள் கொள்முதல் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசினார் அப்போது அவர் பேசிய தாவது:- 1 முதல் 5-ம் வகுப்பு வரை அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் ஊட்டச்சத்து நிலை பாது காக்கும் பொருட்டு முதல மைச்சரின் காலை உணவு திட்டத்தினை தமிழக அரசு தொடங்கி வைத்தது.

    அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வரா யன்மலை வட்டத்திற் குட்பட்ட 8 ஊராட்சிகளில் உள்ள 15 அரசு தொடக்கப் பள்ளிகளில் முதல மைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கி செயல் படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 8 வட்டா ரங்களில் உள்ள ஊராட்சி, நகராட்சி மற்றும் பேருராட்சி களுக் குட்பட்ட 638 அரசுத் தொடக்கப்பள்ளியில் இத்திட்டம் செயல் படுத்தப் பட உள்ளது. முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினால் தொடக்கப் பள்ளி மாண வர்கள் ஆர்வமுடனும், ஆரோக்கிய முடனும் கல்வி கற்கும் சூழல் உருவாக்கப்பட உள்ளது. இத்திட்டம் செயல்படுத் தப்படவுள்ள பள்ளிகளில், காலை உணவு சமைத்து வழங்கும் பணி களில் ஈடுபடவுள்ள சுய உதவிக்குழுவினர்க்கு தரமான பாத்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு விரைவில் வழங்கப்படும் என கூறினார். இக்கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குநர் சுந்த ராஜன், உதவி இயக்குநர் ஊராட்சிகள் ரெத்தின மாலா மற்றும் அரசு அலு வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • வன்கொடுமை தடுப்புச்சட்டம் குறித்த மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.
    • மனித கழிவுகளை அகற்றும் பணியாளர்களின் மறுவாழ்வு குறித்தும், விவாதிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 2-ம் காலாண்டிற்கான ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடி யினர் வன்கொடுமை தடுப்புச்சட்டம் குறித்த மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசியதாவது,

    மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளின் விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, தவறுடையதாக கருதப்படும் வழக்குகளின் விசாரனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், தற்போது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நிலுவையிலுள்ள வழக்குகள், நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத வழக்குகள், நீதிமன்ற விசா ரணை நிலுவை வழக்குகள், பிழையுடையதாக கருதப்பட்ட வழக்குகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு விவாதிக்கப்பட்டது. அனைத்து வழக்குகளின் மீதும் விசாரணைகள் துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.

    மேலும், வன்கொடு மையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீருதவிகள் வழங்கப்பட்ட விவரங்கள் குறித்தும், ஆதிதிராவிட மக்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது தொடர்பாகவும், மனித கழிவுகளை அகற்றும் பணியாளர்களின் மறுவாழ்வு குறித்தும், விவாதிக்கப்பட்டது. எதிர்வரும் காலங்களில் வன்கொடுமை அதிக அளவில் நடைபெறும் கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்திடுமாறும், பட்டியலின மக்களின் கல்வி தரத்தை உயர்த்தும் நடவடி க்கைகள் மேற்கொள்ளவும், இக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தியதன்படி, நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்பு டைய அலுவலர்கள், காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கவியரசு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், திருக்கோவிலூர் கோட்டாட்சியர் யோகஜோதி, துணை காவல் கண்காணிப்பாளர்கள் ரமேஷ், மனோஜ்குமார், மகேஷ் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன், கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் நீர்நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
    • சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜீத் அறிவுறுத்தியுள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார்.

    வறட்சி நிவாரணம், நுண்ணீர் பாசன குழாய் மாற்றம், ஆழ்குழாய் கிணறு, வரத்துக்கால் மற்றும் வரத்துக்கண்மாய் தூர்வாரக் கோருதல், மிளகாயை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்கக் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டரிடம் விவசாயிகள் மனு விடுத்தனர்.

    இந்த கோரிக்கைகள் தொடர்பாக துறை அலுவலர்கள் களஆய்வுகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    பின்னர் கலெக்டர் ஆஷா அஜீத் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நீர் நிலையில் உள்ள ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். விவசாய நிலங்களை விலங்குகள் சேதப்படுத்தாமல் பாதுகாக்கவும், தேவையான நிலங்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்கவும், குறிப்பாக நீர்நிலைகளில் கருவேல மரங்கள் அகற்றுதல் போன்ற விவசா யிகளின் கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    நில அளவைத்துறையினர் விவசாயிகள் கோரும் அளவீட்டுப்பணியினை விரைந்து மேற்கொள்ளவும், விவசாயிகளுக்கான மின் விநியோகங்களை சீரான முறையில் வழங்கிடவும், தேவையான உரங்களை இருப்பு வைக்கவும், வங்கிகளின் மூலம் கடனுதவிகள் வழங்கி வேளாண் சார்ந்த புதிய தொழில் தொடங்கிட உறுதுணையாக இருக்கவும், கடனுக்குரிய மானியத்தொகையை தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கைகளை துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் தனபாலன், கால்நடைப் பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் நாகநாதன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கோவை மாவட்டம் கணியூரில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது.
    • 55 லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கோவை,

    உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது/ தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் பல்வேறு இடங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்ட்டுள்ளது உள்ளது.

    அதனை சரி செய்ய அரசு நிர்வகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள நிலையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் கணியூரில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. கணியூர் ஊராட்சி தலைவர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொதுமக்கள் மத்தியில் பேசினார். அவர் கூறியதாவது:-

    கோடைக்காலம் தொடங்கி விட்டதால் தண்ணீரின் தேவை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. தண்ணீர் கிடைக்கும் வழி, சேமிக்கும் விதம் ஆகியவற்றை தெரிந்து கொண்டால் மட்டுமே வருங்காலத்துக்கான தண்ணீரை நம்மால் சேமிக்கவும், பயன்படுத்தவும் முடியும்.

    குழந்தைகளுக்கு தண்ணீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கிராமப்புறங் களில் ஒவ்வொரு வீட்டுக்கும் 55 லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    நீர்நிலைகளில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். நீர்நிலைகளில் கொட்டப்படும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளால் நிலத்தடி நீரை பாதுகாக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே வீட்டுக்கழிவுகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைத்து மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து கலெக்டர் கிராந்திகுமார் பாடி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தண்ணீர் சேமிப்பு, மழை நீர் சேமிப்பு, வீட்டை சுற்றிலும் சுத்தமாக வைப்பது குறித்து பேசப்பட்டது. கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் சிறுவாணி அணையில் தண்ணீர் குறைவாக உள்ளது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

    தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பில்லூர் மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள குளங்களில் வண்டல் மண் எடுக்க அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து விவசாயிகள் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் ஜெகதீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • துணிப்பைகளின் பழக்கத்தை பொதுமக்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சிவகங்கை கலெக்டர் அறிவுறுத்தினார்.
    • ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்குக்கு தடை விதித்து 1.1.2019 முதல் இந்த நடைமுறை அமலில் உள்ளது.

    சிவகங்கை

    பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையிலும், பாரம்பரிய துணிப்பைகளை பயன்படுத்தும் பழக்கத்தை மீண்டும் நடைமுறைப் படுத்தும் விதமாகவும், சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் மஞ்சப்பை தானியங்கி எந்திரம், நிறுவப்பட்டு உள்ளது.

    இதை கலெக்டர் மதுசூதன்ரெட்டி பொது மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    தமிழக அரசு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் சார்பில் வெளியிட்டுள்ள அரசாணையின்படி, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்குக்கு தடை விதித்து 1.1.2019 முதல் இந்த நடைமுறை அமலில் உள்ளது. வருங்கால சந்ததி யினர்களின் நலனுக்கா கவும், பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கப்பதற்கும், பாரம்பரிய துணிப்பைகளை பொதுமக்கள் பயன்படுத்தும் பழக்கத்தை மீண்டும் கொண்டு வரவும், தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 23.12.2021 அன்று "மீண்டும் மஞ்சப்பை" பிரசாரத்தை தொடங்கி வைத்தார். இந்த மஞ்சப்பை தானியங்கி எந்திரத்தில்10 ரூபாய் நாணயங்களாகவோ அல்லது இரண்டு 5 ரூபாய் நாணயங்களாகவோ அல்லது ஐந்து 2 ரூபாய் நாணயங்களாகவோ அல்லது பத்து 1 ரூபாய் நாணயங்களாகவோ செலுத்தி பொதுமக்கள் மஞ்சப்பை பெற்றுக் கொள்ளலாம்.

    இந்த எந்திரம் 24 மணி நேரமும் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும். இதனை பொதுமக்கள் பயன்படுத்தி அரசின் அறிவுரையின்படி, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதற்கு முழு ஒத்துழைப்பு அளித்து பாரம்பரிய வகையில் துணிப்பைகளின் பழக்கத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு பங்களிப்பை அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (கூடுதல் பொறுப்பு) ராஜராஜேஸ்வரி, உதவிப்பொறியாளர் சவுமியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட அளவிலான சிறுதா னியங்கள் விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
    • பல்வேறு கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், உணவுத் திருவிழாக்கள் போன்றவை நடத்தப்பட வேண்டும்.

    தருமபுரி,

    2023-ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக இந்தியாவின் கோரிக்கை ஏற்று ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளதைத் தொடர்ந்து தருமபுரி மாவட்ட அளவிலான சிறுதா னியங்கள் விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் மத்திய அரசினால் தருமபுரி மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் சிறுதானிய மாவட்டங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் சிறுதானியங்கள் சாகுபடி மற்றும் சிறுதானிய உணவுகள் அன்றாடம் எடுத்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் 2023ஆம் ஆண்டு முழுமைக்கும் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மேற்கொள்ள வேண்டிய சிறுதானியங்கள் தொடர்பான பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    தருமபுரி மாவட்டத்தில் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் அனைத்திலும் 2023ஆம் ஆண்டு முழுமைக்கும் சிறுதானிய தொடர்பான பல்வேறு கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், உணவுத் திருவிழாக்கள் போன்றவை நடத்தப்பட வேண்டும்.

    அனைத்து கல்லூரி மற்றும் பள்ளி விடுதிகளில் வாரத்தில் ஒரு முறையாவது சிறுதானிய உணவு அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    தொழில்முறை சமையற்கலைஞர்களை அழைத்து அவர்கள் சமையல் செய்யும் திருமண விழாக்களில் சிறுதானிய உணவு பண்டங்கள் வழங்க உரிய பயிற்சி வழங்க வேண்டும்.

    மேலும் சிறுதானியங்கள் சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டு விளைப்பொருட்கள் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு தருமபுரி வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்புக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் விஜயா, கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் சாமிநாதன், தோட்டக்கலை துணை இயக்குநர் மாலினி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது, பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணை ப்பாளர் வெண்ணிலா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், நேர்முக உதவியாளர் (வேளாண்மை) குணசேகரன் மற்றும் மாவட்ட அளவிலான இதர துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

    • மனநல சேவை 14416 விரிவாக்க மருத்துவ சேவை தொடக்க விழா நடந்தது.
    • நெருக்கடியை எதிர்கொள்ளும் போது, எதிர்மறை எண்ணங்கள் தோன்றலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி போலுப்பள்ளி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மனநல நல்லாதரவு மன்றம் மற்றும் நட்புடன் உங்களோடு மனநல சேவை 14416 விரிவாக்க மருத்துவ சேவை தொடக்க விழா நடந்தது.

    இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, மதியழகன் எம்.எல்.ஏ. பங்கேற்றனர். இது குறித்து கலெக்டர் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மனநல நல்லாதரவு மன்றம் "மனம்" மற்றும் நட்புடன் உங்களோடு மனநல சேவை எண்ணாக 14416 அறிவித்து தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரியில் மனம் என்று அழைக்கப்படும் மனநல நல்லாதரவு மன்றம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    கல்லூரி மாணவர்கள் கல்வி மற்றும் வாழ்க்கை சார்ந்த பல்வேறு சவால்களை எதிர்கொண்ட சமாளித்து வெற்றி பெறுகின்றனர். சிலருக்கு அவர்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் நெருக்கடியை எதிர்கொள்ளும் போது, எதிர்மறை எண்ணங்கள் தோன்றலாம்.

    இந்த வகையில் அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவர்களின் மனநலத்தை அறிவியல் அடிப்படையில் பாதுகாப்பதும், மேம்படுத்துவதும் கூடுதலான நற்பயனை தரும்.

    உளவியல் ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தயக்கமின்றி உடனடியாக மனநல மருத்துவரை தொடர்பு கொள்ளும் வகையில் "மனம்" என்ற செல்போன் எண்.6379793630 பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், நட்புடன் உங்களோடு மனநல சேவை எண்ணாக 14416 என்ற எண் மூலம் அனைவரும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    • சமூக நலத்துறை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கினை மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.
    • அனைத்து பிரசவங்களும் மருத்துவராலும், மருத்து வரின் கண்காணிப்பில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரியில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், ன்ற கருப்பொருளை மையமாக கொண்ட மருத்துவம் மற்றும் சமூக நலத்துறை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கினை மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் பெண்குழந்தைகளின் பாலின விகிதம் குறைவாக உள்ளது.

    பச்சிளம் குழந்தைகளின் இறப்பினை தடுத்திட மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனை களில் 24 மணிநேரமும் குழந்தைகள் நல மருத்துவர் பணியமர்த்தப ்பட்டுள்ளனர்.

    தனியார் மருத்துவம னைகளில் பிறக்கும் கு ழந்தைகளில் குறைபாடுள்ள குழந்தைகளை தேவைப்படின் உயர் சிகிச்சைக்காக பரிந்துரை செய்ய வேண்டும். அனைத்து பிரசவங்களும் மருத்துவராலும், மருத்து வரின் கண்காணிப்பில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.

    தனியார் மருத்துவம னைகளில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு பச்சிளம் குழந்தைகளின் பராமரிப்பு குறித்தும், தாய்ப்பாலின் அவசியம் குறித்து தாய்மார்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    மருத்துவர்கள் கருத்தரி த்துள்ள தாய்மார்களுக்கு குடும்ப கட்டுபாடு முறையின் அவசியத்தை எடுத்துக்கூறி உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்.

    தருமபுரி மாவட்டத்தில் ஸ்கேன் கருவியின் உதவியுடன் கருவின் பாலினத்தை தெரிவிக்கும் ஸ்கேன் மையங்கள், பாலினத்தை அறிந்து கருக்கலைப்பு செய்யும் மருத்துவமனைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    எனவே, பொதுமக்கள் மற்றும் மருத்துவர்கள் அனைவரும் தங்களுக்கு உள்ள பொறுப்புகளையும், சமூக கடமைகளையும் அறிந்து தருமபுரி மாவட்டம் மருத்துவம் மற்றும் சுகாதார குறியீட்டில் முன்னேற்றம் அடைய ஒத்துழைப்பினை வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கருத்தரங்கில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் சாந்தி, அரசு தருமபுரி மருத்துவக்கல்லுரி மருத்துவமனை முதல்வர் அமுதவல்லி, துணை இயக்குநர் சுகாதாரப்ப ணிகள் சவுண்ட ம்மாள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மகப்பேறு தலைமை மருத்துவர் மலர்விழி, மாவட்ட சமூக நல அலுவலர் ஜான்சிராணி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

    • சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருள்களை பயன்படுத்தி பட்டாசு தயாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    • தீபாவளி நாளன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தீபாவளி திருநாளை விபத்து, ஒலி, மாசு இல்லாத தீபாவளியாக கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தீபாவளி பண்டிகையை யொட்டி மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்வர். பட்டாசு வெடிப்பதால் நிலம், நீர், காற்று மாசடைகிறது. மேலும் பட்டாசு ஒலி, மாசு காரணமாக குழந்தைகள், பெரியவர், நோய் பாதித்தோர் பெரும் பாதிப்புக்கும் ஆளாக நேரிடுகிறது.

    எனவே சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருள்களை பயன்படுத்தி பட்டாசு தயாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தீபாவளி நாளன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தவிர குறைந்த ஒலி, குறைந்த அளவில் காற்றை மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசு களை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், திறந்த வெளியில் பொதுமக்கள் கூடி கூட்டாக பட்டாசு வெடிக்க முயற்சிக்கலாம்.

    அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கும் சரவெடிகளையும் தவிர்க்க வேண்டும். மருத்துவமனை, வழிபாட்டு தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிக்க வேண்டாம். குடிசை பகுதி, எளிதில் தீப்பற்றும் இடங்களிலும் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
    • ஒரு மாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் 165 மனுக்கள் மாவட்ட பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலை யில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

    மேலும் இன்று பெறப்பட்ட மனுக்களில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனி நபர் வீடு வழங்கும் திட்டம் குறித்த மனுக்களே அதிகளவு வரப் பெற்றன. மேலும் மாவட்ட கலெக்டர் தெரிவிக்கையில், ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒரு மாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும்.

    தீர்வு வழங்க முடியாத மனுக்கள் குறித்து மனுதாரர்களிடம் உரிய காரணம் குறித்து எடுத்துரைக்க வேண்டும், அப்பொழுதுதான் அது போன்ற மனுக்கள் திரும்பத் திரும்ப வராது. எனவே பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறை அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கிஸ் தெரிவித்தார்.

    ×