search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாதுகாப்பான முறையில்  வெடிபொருட்கள்- பட்டாசுகள் கையாள்வதை உறுதிப்படுத்த வேண்டும் -  கலெக்டர் அறிவுறுத்தல்
    X

    பாதுகாப்புக்குழு கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்ற காட்சி.

    பாதுகாப்பான முறையில் வெடிபொருட்கள்- பட்டாசுகள் கையாள்வதை உறுதிப்படுத்த வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்

    • தீ தடுப்பு மற்றும் தொழிற்சாலைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது.
    • பாதுகாப்பான முறையில் வெடிபொருட்கள், பட்டாசுகளை வைத்து கையாள்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட தீ தடுப்பு மற்றும் தொழிற்சாலைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், இணை இயக்குனர்கள் (தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்) சரவணன், புகழேந்தி, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் அதிகாரி அப்பாஸ், துணை இயக்குனர்கள் ஜெயமுருகன், சுதாகர் மற்றும் வெடிபொருட்கள், பட்டாசு தொழிற்சாலைகள் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது, 'மாவட்டத்தில் வெடிபொருள் கிடங்குகள், பட்டாசு தொழிற்சாலைகள், பட்டாசு கடைகள் ஆகியவற்றில் பாதுகாப்பான முறையில் வெடிபொருட்கள், பட்டாசுகளை வைத்து கையாள்வதை உறுதிப்படுத்த வேண்டும். அவ்வப்போது தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மாவட்ட தீ தடுப்பு மற்றும் தொழிற்சாலைகள் பாதுகாப்பு குழு ஏற்படுத்தி, அதன் முதல் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பான முறையில் வெடிபொருட்கள் கையாள்வது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது' என்றார்.

    Next Story
    ×