search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீட்டர் அல்போன்ஸ்"

    • இந்தியா இனிமேல் பாரத் என பெயர் மாற்றம் அடையலாம் என தகவல்
    • துக்ளக் தர்பார் என்று சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்லமுடியும்?- அல்போன்ஸ்

    இந்தியா பெயரை பாரத் என மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஆளுங்கட்சி சார்பிலும், எதிர்க்கட்சி சார்பிலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்தியா கூட்டணி மீதான பயத்தால் மோடி நாட்டின் பெயரை பாரத் என மாற்றுகிறார் என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ''அடுத்து Reserve Bank of India என்று அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களெல்லாம் செல்லாது என ஒன்றிய அரசு அறிவிக்குமா?

    "துக்ளக் தர்பார்" என்று சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்லமுடியும்?'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்தியாவில் குஜராத்தை போல தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்தை மாற்ற பா.ஜ.க. முயற்சி செய்கிறது.
    • கொங்கு மண்டலத்தில் சமூக பதட்டத்தை உண்டாக்கினால் தொழில் முடங்கப்படும்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உலகம் முழுவதும் தமிழ் மொழியின் தொன்மையை தெரியப்படுத்தியதில் சிறுபான்மை மக்களின் பங்கு மகத்தானது. உதாரணமாக திருவாசகத்தை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த பெருமை ஜி.யு.போப் என்று சொல்லக்கூடிய அந்த மிகப்பெரிய தமிழ் அறிஞரைசாரும். திருக்குறளை மொழிபெயர்த்த பெருமை அவர்களை சாரும். சர்தார் வல்லபாய் பட்டேலுக்கும், டாக்டர்.அம்பேத்காருக்கும் பா.ஜ.க.வுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

    இதேப்போல் தமிழ் மொழிக்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும், தமிழினத்திற்கும் பா.ஜ.க.வுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வல்லபாய் பட்டேல், அம்பேத்கரை தங்களுக்கு நெருக்கமானவர்கள் என்று தங்களை காட்டிக் கொள்வதற்கும், தமிழ் மொழி தங்களுக்கு நெருக்கமான மொழி என்று அடையாளம் படுத்துவதன் மூலமாக அவர்கள் (பா.ஜ.க) தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கிறார்கள்.

    ஆனால் நம் தமிழர்கள் விழித்து கொண்டார்கள். தமிழர்களை அவர்களால் ஏமாற்ற முடியாது.

    இங்கே இருக்கின்ற சில கட்சிகள் அதிலும் அ.தி.மு.க. தனது திராவிட என்ற அடையாளத்தை தொலைத்து விட்டு தங்கள் இருப்புக்கான நியாயத்தை தொலைத்து விட்டு பா.ஜ.க.விடம் அடகு வைத்து விட்டது. ஜெயலலிதா அவர்கள் சில கொள்கையில் உறுதியாக இருந்தார். அதையெல்லாம் தொலைத்து விட்டு இன்று ஒட்டு மொத்தமாக பா.ஜ.க.வுக்கு விலை போய் இருக்கிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவில் குஜராத்தை போல தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்தை மாற்ற பா.ஜ.க. முயற்சி செய்கிறது. கொங்கு மண்டலத்தில் சமூக பதட்டத்தை உண்டாக்கினால் தொழில் முடங்கப்படும். அதனால் தமிழ்நாடு பின்னுக்கு தள்ளப்படும். அதன் மூலம் வருகின்ற அரசியல் ஆதாயத்தை வைத்து சட்ட ஒழுங்கு கெட்டு விட்டது என்று கிளப்ப நினைக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உள்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஆளுநரிடம் அறிக்கை தாக்கல்
    • இதன் பின்னணியில் மிகப்பெரிய சதி இருப்பதாக பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள மோனகன் பெண்கள் மேல்நிலை பள்ளியில் மதமாற்றம், விதிமீறல்கள் நடப்பதாக புகார் எழுந்த நிலையில், மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி மற்றும் உறுப்பினர்கள் கடந்த வாரம் நேரடியாக விசாரணை நடத்தினர். பள்ளி விடுதியில் ஆய்வு செய்த அவர்கள், விடுதியில் உள்ள மாணவிகளுக்கான வசதிகள் மற்றும் குறைகளைக் கேட்டறிந்தனர். மேலும் விடுதியில் உள்ள அடிப்படை வசதிகள் எந்தளவிற்கு உள்ளது என்பதையும், உணவு தயாரிக்கும் இடம், மாணவிகளின் கழிப்பறை உள்ளிட்டவற்றையும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மதமாற்றம் மற்றும் விதிமீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதுதொடர்பாக அவர்கள் ஆளுநரிடம் 85 பக்கம் கொண்ட அறிக்கையையும் வழங்கினர்.

    தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், இந்த பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்கும்படி, தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை இயக்குநருக்கு கடிதம் எழுதி இருந்தது. விடுதியில் மாணவிகளை 24 மணி நேரத்திற்குள் அங்கிருந்து பாதுகாப்பாக வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும் எனவும்; இளம் சிறார் பாதுகாப்புச்சட்டத்தின் அடிப்படையில் தவறு செய்த பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், பெண்கள் பள்ளியில், மாநில சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நேரடியாக விசாரணை நடத்தினார். மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பீட்டர் அல்போன்ஸ், பள்ளியில் மதமாற்றம் நடந்ததற்கான எந்தவித புகார்களும் இல்லை என்றார். மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்த அனைத்து குற்றச்சாட்டுகளும் தவறானவை என்றும், இதன் பின்னணியில் மிகப்பெரிய சதி இருப்பதாகவும் தெரிவித்தார்.

    யாரோ ஒரு சிலர் மாநில ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினரை இயக்குவதாக கூறிய அவர், இந்த விவகாரம் தொடர்பாக, மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார். இது தொடர்பாக விசாரணை அறிக்கையை முதல்வரிடம் வழங்க உள்ளதாகவும் பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.

    இதற்கிடையே 9 குழந்தைகளிடம் எழுத்துப்பூர்வ புகார்களை பெற்றிருப்பதாக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்து.

    ×