search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதமாற்றம்"

    • இரு சமூக மக்களிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
    • ஒட்டு மொத்த பட்டியலின மக்களும் மத மாற்றம் செய்து கொள்வோம்

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள மேல் பாதியில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக் கோவிலுக்குள் பட்டியலின மக்கள் செல்ல க்கூடாது என மற்றொரு சமூகத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் இரு சமூக மக்களிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை தடுக்கும் வகையில் 145-வது சட்டப்பிரிவை பயன் படுத்தி பிரச்சினைக்குள்ளாாள திரவுபதி அம்மன் கோவிலை கடந்த மாதம் 7-ந் தேதி வருவாய் துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். கோவில் இருக்கும் இடம் தங்களுக்கு சொந்தமானது என இரு சமூக மக்களும் பரஸ்பரம் போட்டி போட்டு கொண்டிருக்கும் நிலையில் இது தொடர்பாக ஜூன் 9-ந் தேதி விழுப்புரத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இரு தரப்பினரிடையே வரு வாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார். இதில் சுமூக முடிவு எட்டப்படவில்லை.

    இதனை ெதாடர்ந்து 2-ம் கட்ட விசாரணை கடந்த 7-ந் தேதி விழுப் புரத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலு வலகத்தில் நடைபெற்றது. அப்போது ஒரு தரப்பை சேர்ந்த ஊர் முக்கி யஸ்தர்கள் 5 பேருக்கு மட்டும் சம்மன் அனுப்பி வரவழைக்கப்பட்டு அவர்களிடம் வருவாய் கோட்டாட்சியர் பிரவீனா குமாரி விசாரணை நடத்தி னார். இேதபோல் மற்றொரு தரப்பை சேர்ந்த முக்கியஸ்தர்கள் 5 பேரிட மும் வருவாய் கோட்டாட்சி யர் விசாரணை நடத்தி னார். அப்போது வருகிற 31-ந் தேதிக்குள் திரவுபதி அம்மன் கோவிலுக்குள் பட்டியலின மக்கள் சென்று வழிபாடு நடத்த சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    அவ்வாறு நடவடிக்கை எடுக்கா விட்டால் ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் மேல் பாதி கிராமத்தில் உள்ள பட்டியலின மக்களின் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபடுவோம். அதன் பிறகும் கோவி லுக்குள் செல்ல அனு மதி மறுக்கப்பட்டால் இந்து மதத்தில் இருந்து வெளியேறி ஒட்டு மொத்த பட்டியலின மக்களும் மத மாற்றம் செய்து கொள்வோம் என கோட்டாட்சியர் பிரவீனா குமாரியிடம் தெரிவித்த னர். இதனால் மேல்பாதி கிராமத்தில் மீண்டும் பதட்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    • பிரியங்கா நகரில் சுமார் 20க்கும் மேற்பட்ட இந்து மதம் குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.
    • எதிர் தரப்பினரிடம் முறையாக அனுமதி பெற்று ஆலயம் நடத்த அறிவுறுத்தினர்.

    வீரபாண்டி :

    திருப்பூர் மாவட்டம் தெற்குதாலுகாவிற்குட்பட்ட வீரபாண்டி 54வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பிரியங்கா நகரில் மத மாற்றத்தை தடை செய்ய வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- பிரியங்கா நகரில் சுமார் 20க்கும் மேற்பட்ட இந்து மதம் குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் ஒரு வீட்டில் மதம் மாற்றம் நடைபெறுவதை அறிந்து வீரபாண்டி காவல்நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தோம். அதற்கு அவர்கள் இரு தரப்பினரையும் அழைத்து பேசினர். எதிர் தரப்பினரிடம் முறையாக அனுமதி பெற்று ஆலயம் நடத்த அறிவுறுத்தினர். காவல் துறையிடம் மனு கொடுத்த அன்று இரவே எங்கள் பகுதியில் வாகனங்களை அதிவேகமாக இயக்கி எச்சரிக்கை செய்தனர். இதனால் எங்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    • மத அறப்பணிகள் என்பது மதமாற்றத்தை நோக்கமாக கொண்டிருக்கக் கூடாது என நீதிபதிகள் கருத்து
    • மாநிலங்களிடம் இருந்து விரிவான தகவல்களை பெற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

    புதுடெல்லி:

    மத மாற்றத்திற்கு எதிராக பாஜக தலைவர் அஷ்வினி குமார் உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். பணம், பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவற்றை அளித்து செய்யப்படும் மதமாற்றம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும் என அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி எம்ஆர் ஷா தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அஷ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எதிர்மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், முக்கிய கருத்துக்களை தெரிவித்தனர்.

    குறிப்பாக மத அறப்பணிகள் என்பது மதமாற்றத்தை நோக்கமாக கொண்டிருக்கக் கூடாது, பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் அளித்து செய்யும் மதமாற்றம் மிகவும் ஆபத்தானது, அரசியல் சாகனத்தின் அடிப்படைக்கு எதிரானது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    மேலும் மதமாற்ற தடுப்புச் சட்டம் தொடர்பாக மாநிலங்களிடம் இருந்து விரிவான தகவல்களை பெற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

    ஏற்கனவே இந்த வழக்கில் மத்திய அரசு ஒரு பதில் மனுவை தாக்கல் செய்திருந்தது. அதில், கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக மத்திய பிரதேசம், ஒடிசா மாநிலங்களில் இயற்றப்பட்டுள்ள சட்டத்தை ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததை குறிப்பிட்டிருந்தது.

    ஒடிசா, மத்திய பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், கர்நாடகம், அரியானா ஆகிய மாநிலங்களில் கட்டாய மதமாற்ற தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டுள்ளதையும் மத்திய அரசு தனது பதில் மனுவில் தெரிவித்த நிலையில், விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை திங்கட்கிழமைக்கு தள்ளி வைத்தனர். 

    • மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஆளுநரிடம் அறிக்கை தாக்கல்
    • இதன் பின்னணியில் மிகப்பெரிய சதி இருப்பதாக பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள மோனகன் பெண்கள் மேல்நிலை பள்ளியில் மதமாற்றம், விதிமீறல்கள் நடப்பதாக புகார் எழுந்த நிலையில், மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி மற்றும் உறுப்பினர்கள் கடந்த வாரம் நேரடியாக விசாரணை நடத்தினர். பள்ளி விடுதியில் ஆய்வு செய்த அவர்கள், விடுதியில் உள்ள மாணவிகளுக்கான வசதிகள் மற்றும் குறைகளைக் கேட்டறிந்தனர். மேலும் விடுதியில் உள்ள அடிப்படை வசதிகள் எந்தளவிற்கு உள்ளது என்பதையும், உணவு தயாரிக்கும் இடம், மாணவிகளின் கழிப்பறை உள்ளிட்டவற்றையும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மதமாற்றம் மற்றும் விதிமீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதுதொடர்பாக அவர்கள் ஆளுநரிடம் 85 பக்கம் கொண்ட அறிக்கையையும் வழங்கினர்.

    தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், இந்த பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்கும்படி, தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை இயக்குநருக்கு கடிதம் எழுதி இருந்தது. விடுதியில் மாணவிகளை 24 மணி நேரத்திற்குள் அங்கிருந்து பாதுகாப்பாக வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும் எனவும்; இளம் சிறார் பாதுகாப்புச்சட்டத்தின் அடிப்படையில் தவறு செய்த பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், பெண்கள் பள்ளியில், மாநில சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நேரடியாக விசாரணை நடத்தினார். மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பீட்டர் அல்போன்ஸ், பள்ளியில் மதமாற்றம் நடந்ததற்கான எந்தவித புகார்களும் இல்லை என்றார். மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்த அனைத்து குற்றச்சாட்டுகளும் தவறானவை என்றும், இதன் பின்னணியில் மிகப்பெரிய சதி இருப்பதாகவும் தெரிவித்தார்.

    யாரோ ஒரு சிலர் மாநில ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினரை இயக்குவதாக கூறிய அவர், இந்த விவகாரம் தொடர்பாக, மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார். இது தொடர்பாக விசாரணை அறிக்கையை முதல்வரிடம் வழங்க உள்ளதாகவும் பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.

    இதற்கிடையே 9 குழந்தைகளிடம் எழுத்துப்பூர்வ புகார்களை பெற்றிருப்பதாக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்து.

    ×