என் மலர்
இந்தியா

உ.பி: கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. வீடியோவை காட்டி பிளாக்மெயில் - மதமாற்றம் அம்பலம்!
- அதை வீடியோ பதிவு செய்த அன்சாரி பெண்ணை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.
- இஸ்லாம் மதத்திற்கு மாறி தன்னை திருமணம் செய்துகொள்ள அப்பெண்ணை அன்சாரி வற்புறுத்தியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து திருமணம் செய்ய வற்புறுத்தி மதமாற்றம் செய்ய முயன்றதாக இளைஞர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் சிக்கந்தர்பூர் பகுதியில் ஹர்தியா ஜாமின் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசாத் அன்சாரி (23 வயது).
இவர் பாலியா பகுதியை சேர்ந்த முதலாமாண்டு பயின்று வரும் 19 வயது கல்லூரி மாணவியை வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி கடந்த டிசம்பர் 17 அன்று ஹோட்டல் அறைக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அதை வீடியோ பதிவு செய்த அன்சாரி பெண்ணை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் 11 ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண் தனது தேர்வு ரிசல்ட்டை பார்க்க சென்றுகொண்டிருந்தபோது அன்சாரி அவரை மிரட்டி மும்பைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு இஸ்லாம் மதத்திற்கு மாறி தன்னை திருமணம் செய்துகொள்ள அப்பெண்ணை அன்சாரி வற்புறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அப்பெண் உத்தரப் பிரதேச போலீசில் அளித்த புகாரை அடுத்து நேற்று அன்சாரி மீது பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் உத்தரபிரதேச சட்டவிரோத மதமாற்ற தடைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பபட்டதாகவும், மருத்தவ அறிக்கையை பொறுத்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உ.பி. போலீஸ் தெரிவித்துள்ளது.






