மதமாற்றம் செய்வதை தடுக்க கோரிக்கை

பிரியங்கா நகரில் சுமார் 20க்கும் மேற்பட்ட இந்து மதம் குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.எதிர் தரப்பினரிடம் முறையாக அனுமதி பெற்று ஆலயம் நடத்த அறிவுறுத்தினர்.
மதமாற்றம் செய்வதை தடுக்க கோரிக்கை
Published on

வீரபாண்டி :

திருப்பூர் மாவட்டம் தெற்குதாலுகாவிற்குட்பட்ட வீரபாண்டி 54வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பிரியங்கா நகரில் மத மாற்றத்தை தடை செய்ய வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- பிரியங்கா நகரில் சுமார் 20க்கும் மேற்பட்ட இந்து மதம் குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் ஒரு வீட்டில் மதம் மாற்றம் நடைபெறுவதை அறிந்து வீரபாண்டி காவல்நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தோம். அதற்கு அவர்கள் இரு தரப்பினரையும் அழைத்து பேசினர். எதிர் தரப்பினரிடம் முறையாக அனுமதி பெற்று ஆலயம் நடத்த அறிவுறுத்தினர். காவல் துறையிடம் மனு கொடுத்த அன்று இரவே எங்கள் பகுதியில் வாகனங்களை அதிவேகமாக இயக்கி எச்சரிக்கை செய்தனர். இதனால் எங்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com