search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பார்க்கிங் வசதி"

    • கடந்த ஒரு வாரமாக மாநகரின் முக்கிய சாலைகள், கடைவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
    • கே.என்.கே சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் ஓரிரு நாளில் அகற்றப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கடை வீதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் செயல்படும் வணிக நிறுவனங்கள், கடைகளில் வாகன பார்க்கிங் வசதி இல்லாமல் உள்ளது. இதனால் இங்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்தி செல்கின்றனர். இதனால் சாலைகளில் பிற வாகனங்கள் செல்ல இடையூறு ஏற்பட்டு வாகன நெரிசலும் ஏற்பட்டு வந்தது.

    மேலும் சாலையோர ஆக்கிரமிப்புகளால் பிரச்சனை நீடித்து வந்தது. இந்நிலையில் ஈரோடு கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர், எஸ்.பி ஆகியோர் உத்தரவின் பேரில் கடந்த ஒரு வாரமாக மாநகரின் முக்கிய சாலைகள், கடைவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

    இதன் காரணமாக தற்போது சாலைகள் ஆக்கிரமிப்பின்றி விஸ்தாரமாக காட்சியளிக்கிறது. மாநகரில் சாலை ஆக்கிரமிப்புகளை தடுக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், முக்கிய சாலைகள், கடைவீதி சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க வாகன பார்க்கிங் வசதி செய்து தரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இது குறித்து ஈரோடு வடக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரண்யா கூறியதாவது:-ஈரோடு மாநகரில் சாலை ஆக்கிரமிப்புகள் உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டு வருகிறது. மேலும் கே.என்.கே சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் ஓரிரு நாளில் அகற்றப்படும்.

    முக்கியசாலைகள், கடைவீதிகளில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்தி செல்வதாக புகார் வந்தது. அந்த இடங்களில் நோ பார்க்கிங் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு போக்குவரத்து விதிகளின்படி அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.

    சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க முக்கியமான சாலைகள், கடைவீதிகளில் 3 இடங்களில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கு மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    • மீன் மார்க்கெட்டிற்கு வந்து செல்ல அம்மா உணவகம் வழியாக வந்து செல்லும் பாதை மட்டும் உள்ளது.
    • வாடிக்கையாளர்கள் மற்றும் எங்களது வாகனங்களை நிறுத்தி கொள்ளவும் அனுமதி தர வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் மாநகராட்சி ஆணையாளரிடம் அளித்துள்ள மனுவில் கூறி யிருப்பதாவது:-

    ஸ்மார்ட் சிட்டி திட்ட த்தின் கீழ் கட்ட ப்பட்டுள்ள தென்னம்பா ளையம் மீன் மார்க்கெட்டிற்கு வந்து செல்ல அம்மா உண வகம் வழியாக வந்து செல்லும் பாதை மட்டும் உள்ளது. அதிலும் நிறைய ஆக்கிரமிப்புகள் உள்ளன. ஆகையால் அந்த ஆக்கிரமி ப்புகளை அகற்றி தருவதோடு குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டும் இடத்தில் உள்ள மண்களை அப்புறப்படுத்தி மற்றொரு வழித்தடத்தை ஏற்படுத்தி தருமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் தற்போது உள்ள தற்காலிக மீன் மார்க்கெ ட்டில் வாடிக்கை யாளர்கள் மற்றும்எங்களது வாகனங்களை நிறுத்தி கொள்ளவும் அனுமதி தர வேண்டும். அதே போல் எங்களை நம்பி 200க்கும் மேற்பட்டமீன் வெட்டும் தொழிலாளர்கள் அங்கு மீன் வெட்டும் தொழில் செய்து வருகின்றனர் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.   

    • நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தகவல்
    • போக்குவரத்து நெருக்கடியை குறைக்க நடவடிக்கை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மூவேந்தர் நகரில் ரூ. 13 லட்சம் மதிப்பிலான சாலை பணியை மேயர் மகேஷ் இன்று தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஒயிட் ஹவுஸ் தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகர்கோவில் நகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்கும் வகையில் பார்க்கிங் இடங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.‌ ஏற்கனவே டதி பள்ளி பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது .இதை ஒழுங்குப்படுத்தும் வகையில் ஒயிட் ஹவுஸ் தெருவில் பார்க்கிங் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கான முதல் கட்ட ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

    கோட்டார் சவேரியார் ஆலய பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் இன்னும் ஒரு வார காலத்திற்குள் முடிக்கப்பட்டு வழக்கம் போல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது ஆணையர் ஆனந்த மோகன் என்ஜினீயர் பாலசுப்பிரமணியன், மண்டல தலைவர் ஜவகர், மாநகர செயலாளர் ஆனந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×