search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாம்பு கடித்து"

    • சம்பவத்தன்று இரவு வழக்கம் போல வேலை முடித்து வீட்டில் தனது குழந்தைகளுடன் தரையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.
    • நள்ளிரவு தனது குழந்தை பாம்பு பாம்பு என்று அலறியது. உடனடியாக முகுல்காசி எழுந்து பார்த்தபோது வீட்டிற்குள் கிடந்த துணிக்குள் பாம்பு இருந்துள்ளது.

    பெருந்துறை:

    மேற்குவங்க மாநிலம், பர்கானா மாவட்டம் உதர்பகுண்டி பகுதியை சேர்ந்தவர் முகுல்காசி. இவர் தனது மனைவி பஜீலா காத்தூன், மகன் பர்கன்காசி (வயது 2) ஆகியோருடன் பெருந்து றையை அடுத்துள்ள பணிக்கம்பாளையம் பகுதியில் குடியிருந்து வருகிறார்.

    முகுல்காசி பெருந்துறை பகுதியில் கட்டிட கூலி வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம் போல வேலை முடித்து வீட்டில் தனது குழந்தைகளுடன் தரையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.

    நள்ளிரவு தனது குழந்தை பாம்பு பாம்பு என்று அலறியது. உடனடியாக முகுல்காசி எழுந்து பார்த்தபோது வீட்டிற்குள் கிடந்த துணிக்குள் பாம்பு இருந்துள்ளது.

    அவரது குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் அவனை பார்கையில் முதுகில் பாம்பு கடித்த காயம் இருந்துள்ளது. உடனடியாக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பர்கன்காசி பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • வாழை தோட்டத்தில்,வேலை செய்து கொண்டிருந்த போது எதிர் எதிர்பாராத விதமாக பாம்பு ஒன்று கடித்து விட்டதாக தெரிகிறது.
    • சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார், இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பரமத்தி வேலூர்:

    திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் வடக்கு முத்துராஜா தெருவை சேர்ந்தவர், கணேசன். இவரது மனைவி பானுமதி ( 47) .இவர் மோகனூர் அடுத்த ஒருவந்தூர் புதூரில் ஒரு வாழை தோட்டத்தில்,வேலை செய்து கொண்டிருந்த போது எதிர் எதிர்பாராத விதமாக பாம்பு ஒன்று கடித்து விட்டதாக தெரிகிறது.

    அருகில் இருந்தவர்கள் அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்து காட்டுப்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி பெற்று நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பியுள்ளனர். தொடர்ந்து நாமக்கலில் இருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார், இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுகுறித்து அவரது மகன் மணிகண்டன் ( 27) மோகனூர் போலிசில் கொடுத்த புகாரின் பேரில், மோகனூர் இன்ஸ்பெக்டர் தங்கவேல், மற்றும் சிறப்பு சப்-இ ன்ஸ்பெக்டர், தமிழ ழகன், ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்கள்.

    • பழைய பொருட்களை மழையில் நனையாமல் இருப்பதற்காக கண்ணம்மாள் வீட்டுக்குள் எடுத்த போது பாம்பு ஒன்று அவரை கடித்து விட்டது.
    • இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் அடுத்த கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கண்ணம்மாள் (60).

    சம்பவத்தன்று அதிகாலை 3.30 மணி அளவில் மழை பெய்து கொண்டு இருந்ததால் வீட்டின் வெளியே கிடந்த பழைய பொருட்களை மழையில் நனையாமல் இருப்பதற்காக கண்ணம்மாள் வீட்டுக்குள் எடுத்து வைத்தார்.

    அப்போது அதன் இடையில் இருந்த பாம்பு ஒன்று அவரை கடித்து விட்டது. இதையடுத்து சிறிது நேரத்தில் கண்ணம்மாள் மயங்கினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபி அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணம்மாள் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டு காம்பவுண்டில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்த இளம்பெண்ணை 4 அடி நீளமுள்ள நாகப்பாம்பு கடித்தது.
    • அப்போது அந்த கோதுமை நாக பாம்பு படம் எடுத்து ஆடியது.

    சூரம்பட்டி:

    ஈரோடு அருகே உள்ள பஞ்சலிங்கபுரத்தை சேர்ந்தவர் ரகுநாதன். கரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி திவ்யபாரதி (வயது 26). இவர்களுக்கு திருமணம் ஆகி 4 வருடம் ஆகிறது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளான்.

    இந்நிலையில் இன்று காலை திவ்ய பாரதி வீட்டு காம்பவுண்டில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு பதுங்கி இருந்த 4 அடி நீளமுள்ள கோதுமை நாகப்பாம்பு அவரை கடித்தது.

    தன்னை பாம்பு கடித்தது என்று திவ்ய பாரதிக்கு தெரிய வில்லை. பூரான் பூச்சி கடித்திருக்கும் என்று நினைத்து அவர் தனது கணவர் மற்றும் உறவினர்களிடம் கூறினார்.

    இதைதொடர்ந்து அவர்கள் திவ்ய பாரதியை அருகே உள்ள ஒருவரது வீட்டுக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் பாம்பின் விஷம் அவரது உடல் முழுவதும் பரவியது.

    இதனால் அவர் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த திவ்யபாரதியின் கணவர் மற்றும் உறவினர்கள் அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். அவரை பரிசோ தனை செய்த டாக்டர் திவ்ய பாரதி இறந்து விட்டதாக கூறினார்.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த திவ்ய பாரதியின் கணவர் ரகுநாதன் மற்றும் மாமியார் அங்கேயே மயங்கி விழுந்தனர். அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருமணமாகி 4 வருடமே ஆவதால் ஈரோடு ஆர்.டி.ஓ விசார ணை நடந்து வருகிறது. இது குறித்து மொடக்கு றிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதனையடுத்து திவ்ய பாரதியை பாம்பு தான் கடித்த என்ற தகவல் கிடைத்ததும் பாம்பு பிடி வீரர் யுவராஜ் சம்பவ இடத்துக்கு சென்றார். அங்கு பதுங்கி இருந்த பாம்பை அவர் லாவகமாக பிடித்தார்.

    அப்போது அந்த கோதுமை நாக பாம்பு படம் எடுத்து ஆடியது. இதை பார்த்த திவ்ய பாரதியின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இளம் பெண்ணை கடித்த நாகப்பாம்பு படம் எடுத்து ஆடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஒலகடம் சந்தை பகுதியில் உட்கார்ந்திருந்தார். அப்போது விஷ பாம்பு ஒன்று கார்த்தியை கடித்தது.
    • இதுகுறித்து வெள்ளிதிருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    பவானி அடுத்த ஒலகடம் ராஜகுமாரனூரை சேர்ந்தவர் கார்த்தி (38). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி, கருத்து வேறுபாட்டின் காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார்.

    கார்த்தி அவரது தந்தை சண்முகத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் கார்த்தி கடந்த 8-ந் தேதி ஒலகடம் சந்தை பகுதியில் உட்கார்ந்திருந்தார். அப்போது விஷ பாம்பு ஒன்று கார்த்தியை கடித்தது.

    இதனால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு கார்த்தி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து வெள்ளிதிருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×