search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவன் சாவு"

    • 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு பணியாற்றி வந்தார்
    • போலீசார் விசாரணை

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் பார்த்திபன் என்பவருக்கு சொந்தமாக ஊதுபத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது.

    அந்த தொழிற்சாலையில் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த தொழிற்சாலையில் இன்று வழக்கம் போல் காலை 10 மணி அளவில் பணிகள் தொடங்கியது.

    தொழிற்சாலையில் பணிபுரியும் காமராஜபுரம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கண்ணன் என்பவரின் 17 வயது மகன் மோகன் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு ஊதுபத்தி தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.

    ஊதுபத்தி மாவு கலக்கும் எந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது சிறுவனின் கை எந்திரத்தில் சிக்கியது.

    கண் இமைக்கும் நேரத்தில் சிறுவன் எந்திரத்தில் சிக்கிக்கொண்டான். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக தொழிலாளிகள் சிறுவனை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் பரிதாபமாக உயிரிழந்தான். தகவல் அறிந்த வாணியம்பாடி தாலுக்கா போலீசார் சிறுவனின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விளையாடி கொண்டிருந்தபோது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த அல்லனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி கவுசல்யா. தம்பதியினருக்கு கிஷோர் ( வயது 3) உள்பட 2 மகன்கள் உள்ளனர்.

    கவுசல்யா நேற்று முன்தினம் திருப்பத்தூர் அடுத்த அங்கநாதவலசை பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் வந்தார்.

    வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தபோது கிஷோர் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து மூழ்கினான்.

    இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் சிறுவனை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் கிஷோர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து பூமரம் பஸ் நிறுத்தம் அருகே வந்தார்.
    • அங்குள்ள ஒரு வளைவில் திரும்புபோது திடீரென்று சறுக்கி வண்டியில் இருந்து வினோத் கீழே விழுந்தார்.

    தருமபுரி,  

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே இருளப்பட்டி பீரங்கி நகரைச் சேர்ந்தவர் சேட்டு., இவரது மகன் வினோத் (வயது17). இந்த சிறுவன் பிளஸ்-1 வரை படித்து விட்டு கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த வாரம் சொந்த ஊருக்கு வந்த சிறுவன் மீண்டும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்த நிலையில் வினோத் நேற்று மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து பூமரம் பஸ் நிறுத்தம் அருகே வந்தார். அப்போது அங்குள்ள ஒரு வளைவில் திரும்புபோது திடீரென்று சறுக்கி வண்டியில் இருந்து வினோத் கீழே விழுந்தார்.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனே பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வினோத் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து ஏ.பள்ளிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றதாக பள்ளிகூடத்தில் தெரிவித்தனர்.
    • ஏரியில் நீரில் மூழ்கி இறந்து கிடப்பதாக தெரியவந்தது.

    தருமபுரி,

    தருமபுரி கம்பைநல்லூர் அருகே மல்லசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் சீனிவாசன் (வயது6). இந்த சிறுவன் அதே பகுதியில் அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். சம்பவத்தன்று அந்த சிறுவன் பள்ளிக்கு சென்றான். மாலை நீண்டநேரமாகியும் வீடு திரும்பாததால் மணிகண்டன் தனது மகனை தேடி சென்றார். அப்போது சிறுவன்

    தனது பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றதாக பள்ளிகூடத்தில் தெரிவித்தனர். பின்னர் மணிகண்டன் சிறுவனின் பாட்டி வீட்டில் விசாரித்தபோது அங்கு அவன் வரவில்லை என்பது தெரியவந்தது. உடனே மணிகண்டன் சிறுவனை மல்லசமுத்திரத்தில் பல்வேறு பகுதிகளில் தேடிபார்த்தபோது அங்குள்ள ஒரு ஏரியில் நீரில் மூழ்கி இறந்து கிடப்பதாக தெரியவந்தது. உடனே அங்கு சென்று தனது மகனின் உடலை பார்த்து அவர் கதறி அழுதார்.

    இந்த சம்பவம் குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவன் ஏரியில் தவறி விழுந்தானா? அல்லது வேறுயாராவது தள்ளிவிட்டனரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வண்டியில் பின்னால் அமர்ந்திருந்த பவன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே சவரபாதம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகண்டன் (வயது38). விவசாயி. இவரது மகன் பவன் (13). இவர் தனது உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த பரமேஸ் (28) என்பவருடன் நேற்று மோட்டார் சைக்கிளில் தளி வரை சென்றார். அப்போது அவர்கள் பாலதோட்டப்பள்ளி-தேன்கனிக்கோட்டை சாலை அருகே வந்தபோது அந்தவழியாக வந்த சரக்கு வேன் ஒன்று பரமேஸ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வண்டியில் பின்னால் அமர்ந்திருந்த பவன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து காயமடைந்த பரமேஸை சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த தளி போலீசார் உடனே அங்கு வந்து விபத்தில் இறந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.

    • ஓசூர் சாலையில் சைக்கிளில் சென்ற சித்தார்த் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்
    • சிகிச்சை பலனின்றி சித்தார்த் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    ஆந்திரா மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், பூமிகா கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஷ். இவரது மகன் சித்தார்த் (வயது11). இவர் ஓசூரில் தங்கி அங்குள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று ஓசூர் சாலையில் சைக்கிளில் சென்ற சித்தார்த் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த இவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி சித்தார்த் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வேலூரைச் சேர்ந்தவர்
    • ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்ற போது பரிதாபம்

    ஜோலார்பேட்டை

    வேலூர் அடுத்த செதுவாலை புதுமனை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாண்டிலியன் (வயது 37). இவர் மனைவி, மகன் ஹரிஹரன் ( 7) மற்றும் உறவினர்களுடன் வேலூரில் இருந்து நேற்று காலை ஆட்டோவில் ஏலகிரி மலைக்கு சுற்றுலா செல்ல புறப்பட்டனர். ஆட்டோவை சாண்டிலியன் ஓட்டிச் சென்றார்.

    இந்த நிலையில் பொன்னேரி அடுத்த மண்டலவாடி கூட்டு ரோடு அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்தது. ஆட்டோவில் இருந்து திடீரென ஹரிஹரன் தவறி கீழே விழுந்தார்.

    இதில் சிறுவனுக்கு படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக சிறுவனை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஹரிஹரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சிறுவனின் தந்தை ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று இரவு வழக்கம் போல வேலை முடித்து வீட்டில் தனது குழந்தைகளுடன் தரையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.
    • நள்ளிரவு தனது குழந்தை பாம்பு பாம்பு என்று அலறியது. உடனடியாக முகுல்காசி எழுந்து பார்த்தபோது வீட்டிற்குள் கிடந்த துணிக்குள் பாம்பு இருந்துள்ளது.

    பெருந்துறை:

    மேற்குவங்க மாநிலம், பர்கானா மாவட்டம் உதர்பகுண்டி பகுதியை சேர்ந்தவர் முகுல்காசி. இவர் தனது மனைவி பஜீலா காத்தூன், மகன் பர்கன்காசி (வயது 2) ஆகியோருடன் பெருந்து றையை அடுத்துள்ள பணிக்கம்பாளையம் பகுதியில் குடியிருந்து வருகிறார்.

    முகுல்காசி பெருந்துறை பகுதியில் கட்டிட கூலி வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம் போல வேலை முடித்து வீட்டில் தனது குழந்தைகளுடன் தரையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.

    நள்ளிரவு தனது குழந்தை பாம்பு பாம்பு என்று அலறியது. உடனடியாக முகுல்காசி எழுந்து பார்த்தபோது வீட்டிற்குள் கிடந்த துணிக்குள் பாம்பு இருந்துள்ளது.

    அவரது குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் அவனை பார்கையில் முதுகில் பாம்பு கடித்த காயம் இருந்துள்ளது. உடனடியாக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பர்கன்காசி பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • மதுரை அருகே கயிறு கழுத்தை இறுக்கி 5 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
    • இது தொடர்பாக சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை பழங்காநத்தம், அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி. இவர்களின் மகன் விசாகன் (வயது 10). இவர் அங்குள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்த நிலையில் விசாகன் நேற்று இரவு வீட்டின் அருகே விளையாடி கொண்டு இருந்தான். அப்போது துணி காயப்போடும் கொடியை கழுத்தில் மாட்டிக்கொண்டு விசாகன் நண்பர்களுடன் விளையாடினான். அப்போது எதிர்பாராத விதமாக கயிறு சிறுவனின் கழுத்தை இறுக்கியது. இதில் மூச்சுத் திணறிய விசாகன், மயங்கினான்.

    இதை பார்த்து அதிர்ச்சி யடைந்த உறவினர்கள் விசாகனை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக இறந்தான். இது தொடர்பாக சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிறுவனின் உடலை பார்த்து அவரது தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    துரைப்பாண்டி- லட்சுமி தம்பதிக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு விசாகன் பிறந்தான். நேற்று இரவு தந்தை துரைப்பாண்டியுடன் செல்போனில் பேசி உள்ளார். அப்போது தீபாவளிக்கு என்னென்ன பட்டாசு வாங்க வேண்டும்? என்ற பட்டியலையும் தெரிவித்து உள்ளார். இந்த நிலையில் விசாகன் துணி காய போடும் கயிறு இறுக்கி பரிதாபமாக இறந்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

    • மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு
    • எதிர்பாராதவிதமாக மின்வேலியில் சிக்கினார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் குவாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 55) செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். இரவு நேரங்களில் ஆடுகளை நாய்கள் கடித்து விடுவதால் ஆட்டுக் கொட்டகையைச் சுற்றி மின்வேலி அமைப்பது வழக்கம் எனக்கூறப்படுகிறது.

    இந்நிலையில் அவரிடம் வேலை பார்த்து வந்த கீழ குவாகம் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் மகன் அருண்குமார் (17) நேற்று அதிகாலை எதிர்பாராதவிதமாக மின்வேலியில் சிக்கி அதே இடத்தில் உயிரிழந்தார். தகவலறிந்து குவாகம் போலீசார் சென்று அருண்குமார் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    ×