தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் சாவு

விளையாடி கொண்டிருந்தபோது விபரீதம் போலீசார் விசாரணை
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் சாவு
Published on

திருப்பத்தூர்:

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த அல்லனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி கவுசல்யா. தம்பதியினருக்கு கிஷோர் ( வயது 3) உள்பட 2 மகன்கள் உள்ளனர்.

கவுசல்யா நேற்று முன்தினம் திருப்பத்தூர் அடுத்த அங்கநாதவலசை பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் வந்தார்.

வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தபோது கிஷோர் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து மூழ்கினான்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் சிறுவனை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் கிஷோர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com