நீரில் மூழ்கிய சிறுவன் சாவு

பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றதாக பள்ளிகூடத்தில் தெரிவித்தனர்.ஏரியில் நீரில் மூழ்கி இறந்து கிடப்பதாக தெரியவந்தது.
நீரில் மூழ்கிய சிறுவன் சாவு
Published on

தருமபுரி,

தருமபுரி கம்பைநல்லூர் அருகே மல்லசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் சீனிவாசன் (வயது6). இந்த சிறுவன் அதே பகுதியில் அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். சம்பவத்தன்று அந்த சிறுவன் பள்ளிக்கு சென்றான். மாலை நீண்டநேரமாகியும் வீடு திரும்பாததால் மணிகண்டன் தனது மகனை தேடி சென்றார். அப்போது சிறுவன்

தனது பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றதாக பள்ளிகூடத்தில் தெரிவித்தனர். பின்னர் மணிகண்டன் சிறுவனின் பாட்டி வீட்டில் விசாரித்தபோது அங்கு அவன் வரவில்லை என்பது தெரியவந்தது. உடனே மணிகண்டன் சிறுவனை மல்லசமுத்திரத்தில் பல்வேறு பகுதிகளில் தேடிபார்த்தபோது அங்குள்ள ஒரு ஏரியில் நீரில் மூழ்கி இறந்து கிடப்பதாக தெரியவந்தது. உடனே அங்கு சென்று தனது மகனின் உடலை பார்த்து அவர் கதறி அழுதார்.

இந்த சம்பவம் குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவன் ஏரியில் தவறி விழுந்தானா? அல்லது வேறுயாராவது தள்ளிவிட்டனரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com