மோட்டார் சைக்கிளில் தவறி விழுந்த சிறுவன் சாவு

மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து பூமரம் பஸ் நிறுத்தம் அருகே வந்தார்.அங்குள்ள ஒரு வளைவில் திரும்புபோது திடீரென்று சறுக்கி வண்டியில் இருந்து வினோத் கீழே விழுந்தார்.
மோட்டார் சைக்கிளில்  தவறி விழுந்த சிறுவன் சாவு
Published on

தருமபுரி,  

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே இருளப்பட்டி பீரங்கி நகரைச் சேர்ந்தவர் சேட்டு., இவரது மகன் வினோத் (வயது17). இந்த சிறுவன் பிளஸ்-1 வரை படித்து விட்டு கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் கடந்த வாரம் சொந்த ஊருக்கு வந்த சிறுவன் மீண்டும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்த நிலையில் வினோத் நேற்று மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து பூமரம் பஸ் நிறுத்தம் அருகே வந்தார். அப்போது அங்குள்ள ஒரு வளைவில் திரும்புபோது திடீரென்று சறுக்கி வண்டியில் இருந்து வினோத் கீழே விழுந்தார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனே பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வினோத் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஏ.பள்ளிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com