பைக்கில் தவறி விழுந்த சிறுவன் சாவு

ஓசூர் சாலையில் சைக்கிளில் சென்ற சித்தார்த் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்சிகிச்சை பலனின்றி சித்தார்த் பரிதாபமாக உயிரிழந்தார்.
பைக்கில் தவறி விழுந்த சிறுவன் சாவு
Published on

கிருஷ்ணகிரி,

ஆந்திரா மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், பூமிகா கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஷ். இவரது மகன் சித்தார்த் (வயது11). இவர் ஓசூரில் தங்கி அங்குள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று ஓசூர் சாலையில் சைக்கிளில் சென்ற சித்தார்த் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த இவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி சித்தார்த் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com