கயிறு கழுத்தை இறுக்கி 5 வயது சிறுவன் சாவு

மதுரை அருகே கயிறு கழுத்தை இறுக்கி 5 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான். இது தொடர்பாக சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாகன் 
விசாகன் 
Published on

மதுரை பழங்காநத்தம், அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி. இவர்களின் மகன் விசாகன் (வயது 10). இவர் அங்குள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் விசாகன் நேற்று இரவு வீட்டின் அருகே விளையாடி கொண்டு இருந்தான். அப்போது துணி காயப்போடும் கொடியை கழுத்தில் மாட்டிக்கொண்டு விசாகன் நண்பர்களுடன் விளையாடினான். அப்போது எதிர்பாராத விதமாக கயிறு சிறுவனின் கழுத்தை இறுக்கியது. இதில் மூச்சுத் திணறிய விசாகன், மயங்கினான்.

இதை பார்த்து அதிர்ச்சி யடைந்த உறவினர்கள் விசாகனை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக இறந்தான். இது தொடர்பாக சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுவனின் உடலை பார்த்து அவரது தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

துரைப்பாண்டி- லட்சுமி தம்பதிக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு விசாகன் பிறந்தான். நேற்று இரவு தந்தை துரைப்பாண்டியுடன் செல்போனில் பேசி உள்ளார். அப்போது தீபாவளிக்கு என்னென்ன பட்டாசு வாங்க வேண்டும்? என்ற பட்டியலையும் தெரிவித்து உள்ளார். இந்த நிலையில் விசாகன் துணி காய போடும் கயிறு இறுக்கி பரிதாபமாக இறந்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com