search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் பொது தேர்தல்"

    • பிரதமர் பதவியில் யார் அமர்வது என்பதில் இழுபறி நிலவுகிறது
    • 2 வருடங்கள் என்னை பிரதமராக்க ஆதரவு தருவதாக கூறினார்கள் என்றார் பூட்டோ

    பிப்ரவரி 8 அன்று பாகிஸ்தானில் பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.

    இத்தேர்தலில் பிலாவல்-பூட்டோ ஜர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP), முன்னாள் பிரதமரான இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-ஏ-இன்சாஃப் கட்சி (PTP) மற்றும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீஃபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (PML) ஆகிய கட்சிகள் களமிறங்கியதால் மும்முனை போட்டி நிலவியது.

    இதில் பாகிஸ்தான் தெஹ்ரிக்-ஏ-இன்சாஃப் (PTP) கட்சியை சேர்ந்த பல சுயேட்சை வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றனர். ஆனால், இத்தேர்தல் முடிவுகளில் எவருக்கும் முழு மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

    தற்போது வரை பிரதமர் பதவியில் யார் அமர்வது என்பதில் இழுபறி நிலவுகிறது.

    தேர்தலில் ஒருவரையொருவர் எதிர்த்து போட்டியிட்டு, தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு கூட்டணி அமைத்துள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிலாவல் பூட்டோ ஜர்தாரியும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் நவாஸ் ஷரீஃபும் ஆட்சியமைப்பது குறித்து தீவிரமாக கலந்தாலோசித்து வருகிறார்கள்.

    இந்நிலையில், சிந்து மாகாணத்தில், தட்டா நகரில் பிலாவல் பூட்டோ உரையாற்றினார்.

    அதில் அவர் தெரிவித்ததாவது:

    முதல் 3 வருடங்கள் அவர்கள் தரப்பில் பிரதமராக ஒத்து கொண்டால், மீதம் 2 வருடங்களுக்கு நான் பிரதமராக முடியும் என என்னிடம் தெரிவித்தனர்.

    ஆனால், இந்த திட்டத்திற்கு நான் சம்மதிக்கவில்லை.

    எனக்கு இவ்வாறு பிரதமர் ஆவதில் ஒப்புதல் இல்லை.

    நான் பிரதமராக வேண்டுமென்றால் பாகிஸ்தான் மக்கள் என்னை நேரடியாக தேர்வு செய்ய வேண்டும் என கூறி விட்டேன்.

    அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் தங்கள் நலனை மறந்து மக்கள் நலன் குறித்து சிந்திக்க வேண்டும்.

    இவ்வாறு பிலாவல் கூறினார்.

    தேர்தல் முறையாக நடைபெறவில்லை என இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது.
    • ஆட்சியை அமைக்கப்போவது யார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகளை எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த தேர்தலில் தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர்.

    முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சி 2-வது இடத்திலும், முன்னாள் வெளியுறவுத் துறை மந்திரி பிலாவல் புட்டோ ஜர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) 3-வது இடத்திலும் உள்ளன.

    மொத்தமுள்ள 266 இடங்களுக்கு சுமார் 200 இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பிடிஐ ஆதரவு சுயேச்சை வேட்பாளர்கள் சுமார் 70 இடங்களைக் கைப்பற்றினர். பிஎம்எல்-என் கட்சிக்கு 60 இடங்களும், பிபிபி கட்சிக்கு 40 இடங்களும் கிடைத்துள்ளன.

    இம்ரான்கானின் செல்வாக்கு அதிகம் நிறைந்த கைபர் பக்துன்கவா மாகாணத்தில்தான் அவரது பிடிஐ கட்சி ஆதரவு வேட்பாளர்களுக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன.

    பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தம் 336 இடங்கள் இருக்கின்றன. இதில் 266 இடங்கள் மட்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவை. எஞ்சிய 70 இடங்கள் வெற்றி பெற்ற கட்சிகளின் பெரும்பான்மைக்கு ஏற்ப பகிர்ந்தளிக்கப்படும். ஒட்டுமொத்தமாக 169 இடங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சி கட்டிலில் அமரும்.

    இதனிடையே முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரீப் மற்றும் பிபிபி கட்சியின் இணைத்தலைவர் ஆசிப் அலி ஜர்தாரி ஆகியோர் நேற்று லாகூரில் ஒரு சந்திப்பை நடத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன

    இந்நிலையில், வடமேற்கின் ஷாங்லா பகுதியில் தேர்தல் தொடர்பாக ஏற்பட்ட வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டனர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரக்காரர்களை கலைத்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    மிகப் பெரிய கட்சிகளின் தலைவர்கள் தாங்களே வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளதால், அங்கு அடுத்த ஆட்சியை அமைக்கப் போவது யார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 37 இடங்களுக்கான முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நவாஸ் ஷெரீப் கட்சி 14 இடங்களில் வெற்றி.
    • இம்ரான் கான் கட்சி 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    பாகிஸ்தானில் நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த கையோடு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பாதுகாப்பை நிலைமை கருத்தில் கொண்டு இணைய தள சேவைகள் முடக்கப்பட்டிருந்தன.

    தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி, பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி ஆகியவை இடையே போட்டி நிலவுகிறது.

    வாக்கி எண்ணிக்கை தொடங்கி நீண்ட நேரமாகியும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இதனால் இம்ரான் கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையம் மீது குற்றஞ்சாட்டினர். மேலும், முடிவுகள் தாமதம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தனர்.

    அதன்பிறகு இன்று அதிகாலை 3 மணிக்கு முதற்கட்ட முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்பின் ஒன்றன்பின் ஒன்றாக வெற்றி பெற்ற இடங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

    பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் என்.ஏ.-130 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அவர் ஒரு லட்சத்து 71 அயிரத்து 024 வாக்குகள் பெற்றுள்ளார்.

    இதுவரை 37 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள. இதில் நவாஷ் ஷெரீப் கட்சி 14 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இம்ரான் கான் கட்சி 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 9 இடங்கிளல் வெற்றி பெற்றுள்ளது.

    265 தொகுதிகளை கொண்ட பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 133 இடங்களை தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே முடிவுகள் தாமதம் ஆவதற்கு தகவல்தொடர்பு குறைபாடுதான் காரணம் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இம்ரான கான் கட்சியின் கோஹர் அலி கான் என்.ஏ.10 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

    நவாஸ் ஷெரீப் கட்சியின் ஹம்சா ஷெபாஸ் லாகூரில் உள்ள என்.எ.118 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். 

    • தேர்தல் முடிந்த கையோடு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
    • தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    பாகிஸ்தானில் நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த கையோடு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி, பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி ஆகியவை இடையே போட்டி நிலவுகிறது.

    இம்ரான் கான் கட்சியின் சின்னம் முடக்கப்பட்டதால் அக்கட்சியின் வேட்பாளர்கள் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டனர். இதனால் இம்ரான் கான் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் எனக் கருதப்படுகின்றனர்.

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் இம்ரான் கான் கட்சியின் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் முன்னிலை பெற்றதாக தெரிகிறது. நவாஸ் ஷெரீப் கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்படுவதாக தகவல் வெளியானது.

    இதனால் இம்ரான் கான் கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையம் மீது சந்தேகம் எழுப்பியுள்ளனர். இந்த நிலையில் அதிகாலை 3 மணிக்கு தேர்தல் ஆணையத்தின் சிறப்பு செயலாளர் ஜபர இப்பால் முதல் முடிவை வெளியிட்டார்.

    அதன்படி இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் மூன்று பேர் வெற்றி பெற்றுள்ளனர். கைபர் பக்துன்கா மாகாணத்தில் உள்ள பிகே-76 தொகுதியில் சமியுலலா கான் 18 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மற்றொரு வேட்பாளர் பஜல ஹக்கீம் கான் பிகே-6 தொகுதியில் 25330 வாக்குகள் பெற்று பெற்று பெற்றுள்ளார். அதேபோல் அலிகான் பிகே-4 தொகுதியில் 30022 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இம்ரான் கான் ஆட்சியமைக்கும் அளவிற்கு போதுமான இடங்களை பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், தேர்தல் ஆணையம் முடிவுகளை அறிவிக்காமல் தாமதப்படுத்துகிறது. தேர்தல் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளது என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

    நவாஸ் ஷெரீப் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் கட்சி அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டு சென்றதாக தெரிகிறது.

    இம்ரான் கான் கட்சியின் வெற்றியை தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையம் மோசடி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் முடிவுகள் அறிவிக்கப்படும் என பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    • பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதால் நாடு முழுவதும் இணைய சேவை நிறுத்தம்
    • நவாஸ் ஷெரீப் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    பாகிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.

    வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 வரை நடைபெற்றது.வாக்குச்சாவடிக்கு வாக்காளர்கள் வந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.

    தேர்தலில் பல்வேறு கட்சிகள் களம் இறங்கி இருந்தாலும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி,பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, இம்ரான்கா னின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி ஆகியவை இடையே போட்டி நிலவுகிறது.

    இதில் நவாஸ் ஷெரீப் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவரது கட்சி 115 முதல் 132 இடங்களை பிடிக்கும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையே, பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதால் நாடு முழுவதும் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்ததும் விரைவில் எண்ணும் பணி தொடங்கும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

    அதன்படி, வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    • பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றது.
    • மக்கள் வாக்களிக்க ஏதுவாக அங்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    லாகூர்:

    பாகிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. வாக்குச்சாவடிக்கு வாக்காளர்கள் வந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி மொத்தம் 12 கோடியே 85 லட்சத்து 85 ஆயிரத்து 760 பேர் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என தெரிகிறது. இவர்கள் வாக்களிக்க நாடுமுழுவதும் 9 லட்சத்து 7 ஆயிரத்து 675 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் எந்தவித இடையூறும் இன்றி வாக்களிக்க ஏதுவாக பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்தலில் பல்வேறு கட்சிகள் களம் இறங்கி இருந்தாலும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி,பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, இம்ரான்கா னின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி ஆகி யவை இடையே போட்டி நிலவுகிறது.

    இதில் நவாஸ் ஷெரீப் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவரது கட்சி 115 முதல் 132 இடங்களை பிடிக்கும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், லாகூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

    பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதால் நாடு முழுவதும் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்ததும் விரைவில் எண்ணும் பணி தொடங்கும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    தேர்தலையொட்டி போலீசார், சிறப்பு ஆயுதப்படை வீரர்கள், ராணுவ வீரர்கள் என சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • பிரதமராக பதவி வகித்த 3 ஆட்சிக்காலங்களிலும் ராணுவத்தினரால் வீட்டிற்கு அனுப்பப்பட்டேன்.
    • தங்களது சொல்பேச்சு கேட்கும் அரசை ராணுவம் கொண்டு வந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. பொருளாதார சிக்கலில் தவித்து வரும் நிலையிலும், பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையிலும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சொந்த நாடு திரும்பினார்.

    இந்நிலையில், பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் செய்தவர்களுடன் நவாஸ் ஷெரீப் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:

    பிரதமராக நான் பதவி வகித்த 3 ஆட்சிக்காலங்களிலும் ராணுவத்தினர் தலையீட்டால் வீட்டிற்கு அனுப்பப்பட்டேன்.

    பாகிஸ்தானின் பொருளாதாரம் இந்தளவுக்கு சீரழிய காரணம் இந்தியா அல்ல. ஏன் அமெரிக்காவோ, ஆப்கன் கூடஅல்ல.

    நமது காலில் நாமே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டோம். 2018-ல் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை அகற்றிவிட்டு, தங்களது சொல்பேச்சு கேட்கும் அரசை, ராணுவம் கொண்டு வந்ததால், மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    அரசியல் சாசனத்தை ராணுவம் மீறியபோது அதனை நீதிபதிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பிரதமர் என வரும்போது பதவி நீக்கத்திற்கு ஒப்புதல் கொடுத்தனர். பாராளுமன்றத்தைக் கலைக்கும் செயலுக்கு ஒப்புதல் அளித்தனர் என தெரிவித்தார்.

    ×