search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பளுகல்"

    • வாழைக்கு தெளிப்பதற்கு வைத்திருந்த விஷத்தை குடித்து விட்டு தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
    • பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் பளுகல் அருகே உள்ள பூம்பள்ளி கோணம் மேல்பாலை பகுதியை சேர்ந்தவர் வினுகுமார்(வயது46), விவசாயி.

    இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. இதனால் சரிவர வேலைக்கு செல்வ தில்லை. சம்பவத்தன்று வினுகுமார் வீட்டில் இருந்து மது குடித்து உள்ளார்.

    இதனை அவரது மனைவி கண்டித்து உள்ளார். ஆனால் அதனை வினுகுமார் கேட்கவில்லை. இதனால் அவரது மனைவி கோபித்துக் கொண்டு தனது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றார்.

    இதனால் மனமுடைந்த வினுகுமார் வாழைக்கு தெளிப்பதற்கு வைத்திருந்த விஷத்தை குடித்து விட்டு தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    அவர்கள் விரைந்து வந்து கார் மூலம் வினுகுமாரை காரக்கோணம் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வினு குமார் இன்று பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வினுகுமாரின் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு பின் பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • பளுகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கேரள மாநிலம் தனுவச்சபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 56). இவரது மகள் ரேஷ்மா. இவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.

    சுரேஷ்குமார் நேற்று இரவு தனக்கு சொந்த மான இருசக்கர வாகனத்தில் பளுகல் அருகே பண்டா ரக்கோணம் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி தனது வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார். பளுகல் அருகே மத்தம்பாலை பகுதியில் வந்த போது எதிரே அதி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது.

    இதில் சுரேஷ்குமார்நிலை தடுமாறி சாலையில் தூக்கி வீசப்பட்டு பின் பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சாலையில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாறசாலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் சுரேஷ் குமார் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தார்.

    இது குறித்து சுரேஷ்கு மாரின் மகள் ரோஷ்மா கொடுத்த புகாரின் அடிப்படையில் பளுகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மர்ம நபர்கள் கைவரிசை
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை

    கன்னியாகுமரி:

    பளுகல் அருகே குழி விளாகம் மத்தம்பாலை பகுதியை சார்ந்தவர் அருண். இவர், பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார்.

    இப்போது இவர் ஊரில் உள்ளார். இவருடைய மனைவி செலின்மலர் இவர்கள் குடும்பத்துடன் மத்தம்பாலை பகுதியில் வசித்து வருகின்றனர். அருண் இன்று பெங்களூருக்கு செல்வதால் நேற்று இவர்கள் குடும்பத்துடன் பரக்குன்று பகுதியில் உள்ள செலின்மலரின் தாய் விட்டிற்கு சென்றுள்ளனர்.

    அங்கு தங்கி விட்டு இன்று அதிகாலை அருண் பெங்களூருக்கு கொண்டு செல்வதற்கு பொருட்கள் எடுக்க வீட்டிற்கு சென் றுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அருண் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அறை கதவு உடைக்கப்பட்டு துணி மணிகள் சிதறி கிடந்தன. பக்கத்தில் சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 2 தங்க வளையல்கள் மற்றும் 3 கோல்ட் வாட்சுகள் போன்ற வற்றை ஏதோ மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து பளுகல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பளுகல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற் கொண்டு பின்னர் கை ரேகை நிபூனர்கள் வரவ ழைத்து அவர்களும் விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • போலீசார் விசாரணை செய்தனர்
    • வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    களியக்காவிளையை அடுத்த பிளாங்காலை பகுதியை சேர்ந்தவர் அனில்குமார். டெம்போ ஓட்டுநர் இவரது மனைவி சுனிதா. இவர்களுக்கு சிவலட்சுமி என்ற ஒரு மகள் உள்ளார். அனில்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார்.

    இதனால் மன வருத்தத்தில் அனில்குமார் இருந்துள்ளார்.இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி அனில் குமார் வீட்டை விட்டு சென்றுள்ளார் பின்னர் வீடு திரும்பவில்லை தனது கணவர் வேலைக்கு சென்று இருப்பதாக சுனிதா நினைத்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் வாலிபர் ஒருவர் அழகிய நிலையில் சடலமாக கிடப்பதாக தகவல் பரவியது. அங்கு சென்று சுனிதா பார்த்தபோது பிணமாக கிடந்தது தனது கணவர் அனில்குமார் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து பளுகல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அனில்குமார் உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    பளுகல் அருகே உள்ள பருசுவைக்கல் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் குமார் (வயது 33). இவருக்கும் மனைவிக்கும் குடும்ப பிரச்சனை இருந்தது. இதில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த அனீஷ்மோன்(26) தலையிட்டதால் இருவருக்கும் விரோதம் ஏற்பட்டது.

    இந்த முன்விரோதத்தில் நேற்று அனீஷ்மோன் இரும்பு கம்பியால் தாக்கியதோடு இரு சக்கர வாகனத்தை சேதப்படுத்திவிட்டு கொலைமிரட்டல் விடுத்ததாக சதீஷ்குமார் பளுகல் போலீசில் புகார் கொடுத்தார்.

    இதேபோல் சதீஷ்குமார் தாக்கியதில் பலத்த காயமடைந்து பறசாலை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசில் அனீஷ்மோன் புகார் கொடுத்துள்ளார். இந்த புகார்களின் அடிப்படையில் பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×