என் மலர்
உள்ளூர் செய்திகள்

பளுகல் அருகே தோட்டத்தில் பிணமாக கிடந்த டெம்போ டிரைவர்
- போலீசார் விசாரணை செய்தனர்
- வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
களியக்காவிளையை அடுத்த பிளாங்காலை பகுதியை சேர்ந்தவர் அனில்குமார். டெம்போ ஓட்டுநர் இவரது மனைவி சுனிதா. இவர்களுக்கு சிவலட்சுமி என்ற ஒரு மகள் உள்ளார். அனில்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார்.
இதனால் மன வருத்தத்தில் அனில்குமார் இருந்துள்ளார்.இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி அனில் குமார் வீட்டை விட்டு சென்றுள்ளார் பின்னர் வீடு திரும்பவில்லை தனது கணவர் வேலைக்கு சென்று இருப்பதாக சுனிதா நினைத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் வாலிபர் ஒருவர் அழகிய நிலையில் சடலமாக கிடப்பதாக தகவல் பரவியது. அங்கு சென்று சுனிதா பார்த்தபோது பிணமாக கிடந்தது தனது கணவர் அனில்குமார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து பளுகல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அனில்குமார் உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






