search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பல்வேறு"

    • கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலை அமைப்பதற்கான ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டது.
    • ஒப்பந்தக்காரர் ஆன்லைன் முறையிலும் ஆப்லைன் முறையிலும் ஒப்பந்தத்தில் கலந்து கொண்டார்

    நாகர்கோவில்: 

    குமரி மாவட்டம் குழித்துறை நகராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. நகராட்சி நிதி மட்டுமல்லாமல் மாநில மத்திய அரசின் நிதிகளிலும் பல்வேறு ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலை அமைப்பதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டது.

    இதில் குறிப்பிட்ட ஒரு ஒப்பந்தக்காரர் ஆன்லைன் முறையிலும் ஆப்லைன் முறையிலும் ஒப்பந்தத்தில் கலந்து கொண்டார். இதில் அவர் பல விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் ஒப்பந்தத்தை அதிகாரிகள் ஏற்க மறுத்தனர். இதைத் தொடர்ந்து அவர் வழங்கிய ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டது.

    நகர்மன்ற கூட்டத்தில் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரை கருப்பு பட்டியலில் சேர்த்து அனைத்து கட்சி உறுப்பி னர்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் இன்று நடந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட அதே ஒப்பந்ததாரர் ஒப்பந்த புள்ளியை கோரி ஆப்லைன் முறையில் ஒப்பந்தம் அளித்துள்ளார்.

    இதை அறிந்த கவுன்சிலர்கள், கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ஏற்க கூடாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நகர்மன்ற தலைவர் பொன். ஆசைத்தம்பி உட்பட அனைத்து கட்சி கவுன்சிலர்களும் ஒப்பந்தத்தை ஏற்க கூடாது என கூறி கமிஷனர் அலுவலகத்தில் நகராட்சி ஆணையரின்அறையை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட் டத்தில் ஈடுபட்ட னர். அதிகாரிகள் தலையிட்டு உரிய தீர்வு ஏற்படும் வரை இந்த போராட்டம் தொடரும் என கவுன்சி லர்கள் அறிவித்துள்ளனர்,

    • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
    • அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    குறிப்பாக மேட்டூர், ஓமலூரில் நேற்று சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது . இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கிது. மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நீர் , நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக மேட்டூரில் 9.8.மி.மீ. மழை பெய்தது. ஓ மலூர் 8.4, சங்ககிரி 4.2, எடப்பாடி 2.4, சேலம் 0.1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 24.9 மி.மீ. மழை பெய்துள்ளது.

    • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
    • இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்தது.

    குறிப்பாக கரியகோவில், மேட்டூர் பகுதியில் கன மழை பெய்தது . இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் நீர் நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக கரியகோவிலில் 11 மி.மீ. மழை பெய்துள்ளது. மேட்டூர் 8 , ஆனைமடுவு 5, ஆத்தூர் 4.8, ஏற்காடு 4.4. மி.மீ. என மாவட்டம் முழுவதும் 33.20 மி.மீ. மழை பெய்துள்ளது குறிப்பிடதக்கது. இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது .  

    • ஈரோடு மாவட்டத்தில் பல திட்டங்கள் நிறை வேற்றுவதற்கு அரசின் அனுமதி வழங்கப்பட்டு ள்ளது. அதனை சிறப்பாக செயல்படுத்துகின்ற சூழ்நிலையினை தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஏற்படுத்தி கொடுத்து ள்ளார்கள்.
    • தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி பொதுமக்களிடமிருந்து அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வேண்டுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியங்க ளுக்குட்பட்ட பகுதிகளில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில், அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. முன்னிலையில், அமைச்சர் சு.முத்துசாமி ரூ.3.23 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய வளர்ச்சி திட்டப்பணியினை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி நிருப ர்களிடம் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் பல திட்டங்கள் நிறை வேற்றுவதற்கு அரசின் அனுமதி வழங்கப்பட்டு ள்ளது. அதனை சிறப்பாக செயல்படுத்துகின்ற சூழ்நிலையினை தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஏற்படுத்தி கொடுத்து ள்ளார்கள்.

    இந்த ஓராண்டு காலகட்டத்தில் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அத்திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் பல திட்டங்களின் பணிகள் நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியம், மணியகாரன்புதூரில் உள்ள அரசு உயர்நிலைப்ப ள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் ரூ.36.46 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிவியல் ஆய்வகம் மற்றும் நூலக கட்டிடம்,

    சிறுவலூர் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் மற்றும் ஊராட்சி ஒன்றிய பொதுநிதியாக ரூ.10.75 லட்சம் என ரூ.70.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம்,

    கொளப்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட வார்டு எண்.8 நம்பியூர் சாலை பகுதியில் 15-வது நிதிக்குழுமானியத் திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறுவர் பூங்கா மற்றும் கோபிசெட்டி பாளையம் நகராட்சி வார்டு எண்.2 ராமர்விரிவாக்க பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா என மொத்தம் ரூ.1.66 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற புதிய திட்டப்பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், கூச்சிக்கல்லூர் குறிச்சிபிரிவு அருகில் தனியார் இடத்தில் புதிய கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் தொடங்கி வைக்க ப்பட்டுள்ளது. மேலும், பூனாச்சி ஊராட்சி செம்படாம் பாளையம் சாலை முதல் நத்தமேடு சாலை வரை சித்தார் ஓடைபள்ளம் குறுக்கே நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.57 கோடி மதிப்பீட்டில் மேல்மட்ட பாலம் அமைக்கும் பணியினை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி பொதுமக்களிடமிருந்து அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வேண்டுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில்,கோபி செட்டிபாளையம் நகர்மன்றதலைவர் நாகராஜ், கொளப்பலூர் பேரூராட்சி தலைவர் அன்பரசு, கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) சுந்தரமூர்த்தி, நகராட்சி பொறியாளர் சுப்பிரமணி, கொளப்பலூர் பேரூராட்சி செயல் அலுவலர் மஞ்சுநாத், தாசில்தார்கள் ஆயிஷா (கோபிசெட்டிபாளையம்), விஜயகுமார் (அந்தியூர்), முத்துகிருஷ்ணன் (பவானி) மற்றும் கோபிசெட்டி பாளையம் மற்றும் அம்மா பேட்டைவட்டார வளர்ச்சி அலவலர்கள் உள்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் தொடர்புடையதுறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×