search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒப்பந்த"

    • கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலை அமைப்பதற்கான ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டது.
    • ஒப்பந்தக்காரர் ஆன்லைன் முறையிலும் ஆப்லைன் முறையிலும் ஒப்பந்தத்தில் கலந்து கொண்டார்

    நாகர்கோவில்: 

    குமரி மாவட்டம் குழித்துறை நகராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. நகராட்சி நிதி மட்டுமல்லாமல் மாநில மத்திய அரசின் நிதிகளிலும் பல்வேறு ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலை அமைப்பதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டது.

    இதில் குறிப்பிட்ட ஒரு ஒப்பந்தக்காரர் ஆன்லைன் முறையிலும் ஆப்லைன் முறையிலும் ஒப்பந்தத்தில் கலந்து கொண்டார். இதில் அவர் பல விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் ஒப்பந்தத்தை அதிகாரிகள் ஏற்க மறுத்தனர். இதைத் தொடர்ந்து அவர் வழங்கிய ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டது.

    நகர்மன்ற கூட்டத்தில் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரை கருப்பு பட்டியலில் சேர்த்து அனைத்து கட்சி உறுப்பி னர்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் இன்று நடந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட அதே ஒப்பந்ததாரர் ஒப்பந்த புள்ளியை கோரி ஆப்லைன் முறையில் ஒப்பந்தம் அளித்துள்ளார்.

    இதை அறிந்த கவுன்சிலர்கள், கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ஏற்க கூடாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நகர்மன்ற தலைவர் பொன். ஆசைத்தம்பி உட்பட அனைத்து கட்சி கவுன்சிலர்களும் ஒப்பந்தத்தை ஏற்க கூடாது என கூறி கமிஷனர் அலுவலகத்தில் நகராட்சி ஆணையரின்அறையை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட் டத்தில் ஈடுபட்ட னர். அதிகாரிகள் தலையிட்டு உரிய தீர்வு ஏற்படும் வரை இந்த போராட்டம் தொடரும் என கவுன்சி லர்கள் அறிவித்துள்ளனர்,

    ×