search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "completed"

    • நீர்நிலைகளில் தேங்கியுள்ள மண்னை விவசாயிகள் எடுத்துக்கொள்ள அறிவிப்பு வெளியிடப்பட்டது.
    • 29 விவசாயிகள் 24 ஆயிரம் கன மீட்டர் மண் எடுத்துள்ளனர்.

    உடுமலை :

    விவசாய நிலங்களை வளமாக்கும் வகையிலும் நீர் நிலைகளை தூர்வாரி கூடுதல் மழை நீர் சேமிக்கும் வகையிலும் திருப்பூர் மாவட்டத்தில், பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டிலுள்ள, நீர்நிலைகளில் தேங்கியுள்ள வண்டல் மண், மண் ஆகியவற்றை விவசாயிகள் இலவசமாக எடுத்துக்கொள்ள கடந்த மே மாதம் 5-ந் தேதி மாவட்ட அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    எடுக்கப்படும் வண்டல் மண்விவசாய பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். நஞ்சை நிலத்திற்கு ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டர் அல்லது 75 டிராக்டர் லோடு மற்றும் புஞ்சை நிலத்திற்கு ஒரு ஏக்கருக்கு 90 கன மீட்டர் அல்லது 30 டிராக்டர் லோடு மண் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. உடுமலை தாலுகாவில் 9 குளம், குட்டைகளில், விவசாயிகள் மண் எடுக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் திருமூர்த்தி அணையிலும் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.அதன் அடிப்படையில் நடப்பாண்டு திருமூர்த்தி அணையில் 34 ஆயிரத்து 100 கன மீட்டர் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்று நிலத்தின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது. கடந்த ஆகஸ்டு 18 முதல் திருமூர்த்தி அணையிலிருந்து வண்டல் மண் எடுக்கப்பட்டு வந்தது.

    தற்போது வரை 29 விவசாயிகள் 24 ஆயிரம் கன மீட்டர் மண் எடுத்துள்ளனர். பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்க திருமூர்த்தி அணையில் நீர் சேகரிக்கும் பணி நடந்து வருவதால் மண் எடுக்கும் அனுமதி நிறைவு செய்யப்பட்டது.அதிகாரிகள் கூறுகையில், அணையின் நீர் தேங்கும் பரப்பில் மேடான பகுதியிலிருந்து 24 ஆயிரம் கனமீட்டர் மண் விவசாயிகள் எடுத்து விளை நிலங்களுக்கு பயன்படுத்தியுள்ளனர். அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதாலும் அணை நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாலும் மண் எடுக்கும் பணி நிறைவு செய்யப்பட்டது என்றனர்.

    • ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்திற்கான நில எடுப்பு முன்னறிவிப்பு ஆணையை விவசாயிகளுக்கு வழங்கும் விழா நடைபெற்றது.
    • திமுக தென்காசி தெற்கு மாவட்டசெயலாளர் சிவபத்மநாதன் உதவி செயற்பொறியாளர் முத்து மாணிக்கம் ஆகியோர் விவசாயிகளிடம் நில எடுப்பு கான முன்னறிவிப்பு ஆணையை வழங்கினர்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்திற்கான நில எடுப்பு முன்னறிவிப்பு ஆணையை விவசாயிகளுக்கு வழங்கும் விழா நடைபெற்றது. கடையம் பெரும்பத்து பஞ்சாயத்து தலைவர் பொன்ஷீலா பரமசிவன் வரவேற்றார் .கடையம் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் மாயவன் தலைமை தாங்கினார். கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், ராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்ட செயல்பாட்டுக்குழு அமைப்பாளர் ராம.உதயசூரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக தென்காசி தெற்கு மாவட்டசெயலாளர் சிவபத்மநாதன் உதவி செயற்பொறியாளர் முத்து மாணிக்கம் ஆகியோர் விவசாயிகளிடம் நில எடுப்பு கான முன்னறிவிப்பு ஆணையை வழங்கினர்.

    பின்னர் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் பேசுகையில், 6 மாதத்திற்குள் ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.

    நிகழ்ச்சியில் நில எடுப்பு சிறப்பு வருவாய் ஆய்வாளர் சுடலைமுத்து கிராம நிர்வாக அலுவலர்கள் அரிகரன், அண்ணாமலை உதவியாளர்கள் பவுன்ராஜ் சுடலை கனி மற்றும் திமுக நிர்வாகிகள் கீழப்பாவூர் பேரூர் செயலாளர் ஜெகதீசன் மற்றும் ஒன்றிய அவைத்தலைவர் ரவி, ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கர், தர்மராஜ்,ரம்யா,ஆவுடை கோமதி மற்றும் கடையம் பெரும்பத்து நிர்வாகி பரமசிவன்,ஆம்பூர் மாரியப்பன் ,கிளை செயலாளர் சாமுவேல் முருகன், ராம்ராஜ், ஞானராஜ்,ராஜேஷ்,மோசை,ராம்குமார், தளபதி மணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • ஈரோடு மாவட்ட மலைவாழ் மக்களின் 70 ஆண்டு கால கோரிக்கையினை ஏற்று கத்திரிமலை பகுதியில் சாலை அமைக்க முடிவு வெசய்யப்பட்டது.
    • இச்சாலைப் பணி இன்னும் 4 மாதங்களில் நிறைவு பெற்று பொது மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கத்திரி பட்டி மலை கிராமம் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3500 அடிஉயரத்தில் கத்திரிபட்டி மலை உள்ளது.

    இங்கு மாதம்பட்டி, மலையம்பட்டி என 2 பகுதிகள் உள்ளது. இதில் 76 குடும்பங்களும், சுமார் 279 மக்களும் வசிக்கின்றனர். இந்த மலைப்பகுதி 45 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது.

    இந்த பகுதிக்கு செல்வதற்கு ரோடு வசதி இல்லாமல் இருந்தது. இதையடுத்து கத்திரிபட்டி கிராமத்துக்கு ரோடு அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்ட மலைவாழ் மக்களின் 70 ஆண்டு கால கோரிக்கையினை ஏற்று அந்த பகுதியில் சாலை அமைக்க முடிவு வெசய்யப்பட்டது.

    இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி மாதம் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் கத்திரிப்பட்டி வன எல்லை முதல் ஈசலாங்காடு வரை கப்பி சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

    அதனைத் தொடர்ந்து கடந்த 27.4.2022 அன்று ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் கத்திரி மலைப்பகுதி சாலையின் இரு புறங்களிலும் அமைந்துள்ள பாறைகளை முழுமையாக அகற்றி சாலை சமன் செய்யப்பட்டது.

    ஆரம்ப நிலைப் பணிைய கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு சாலை அமைக்கும் பணியினை விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இச்சாலை 8.10 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்படுகிறது.

    கலெக்டர் உத்தரவுப்படி கத்திரிபட்டி முதல் கத்திரி மலை சாலை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தற்போது மண்சாலை மேம்பாடு பணிகள் முடிந்துள்ளது. கரடு முரடான பாறைகள் உடைத்து மக்கள் சிரம மின்றி சாலையில் பயணம் செய்வதற்கு ஏதுவாக சீர் செய்யப்பட்டுள்ளது.

    கான்கிரீட் பணிகள் மற்றும் அடித்தளம் பொருட்கள் சேகாரம் நடைபெற்று வருகிறது. இச்சாலைப் பணி இன்னும் 4 மாதங்களில் நிறைவு பெற்று பொது மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் கத்திரிமலை ப்பகுதியில் 8 ஆட்டு கொட்டகை அமைக்க ப்பட்டுள்ளது. 18 மாட்டு கொட்டகை அமைக்கும் பணியும், சூரிய மின் சக்தியுடன் கூடிய 20 பசுமை வீடுகள் மற்றும் பிரதான் மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 7 வீடுகள் அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகிறது.

    அதனைத் தொடர்ந்து கத்திரிப்பட்டி வன எல்லை முதல் ஈசலாங்காடு வரை கப்பி சாலை அமைக்கும் பணியை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின் போது, அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவசங்கர், உதவி செயற்பொறியாளர் சிவபிரசாத் உள்பட அலுவலர்கள் பலர் உடனி ருந்தனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் பல திட்டங்கள் நிறை வேற்றுவதற்கு அரசின் அனுமதி வழங்கப்பட்டு ள்ளது. அதனை சிறப்பாக செயல்படுத்துகின்ற சூழ்நிலையினை தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஏற்படுத்தி கொடுத்து ள்ளார்கள்.
    • தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி பொதுமக்களிடமிருந்து அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வேண்டுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியங்க ளுக்குட்பட்ட பகுதிகளில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில், அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. முன்னிலையில், அமைச்சர் சு.முத்துசாமி ரூ.3.23 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய வளர்ச்சி திட்டப்பணியினை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி நிருப ர்களிடம் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் பல திட்டங்கள் நிறை வேற்றுவதற்கு அரசின் அனுமதி வழங்கப்பட்டு ள்ளது. அதனை சிறப்பாக செயல்படுத்துகின்ற சூழ்நிலையினை தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஏற்படுத்தி கொடுத்து ள்ளார்கள்.

    இந்த ஓராண்டு காலகட்டத்தில் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அத்திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் பல திட்டங்களின் பணிகள் நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியம், மணியகாரன்புதூரில் உள்ள அரசு உயர்நிலைப்ப ள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் ரூ.36.46 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிவியல் ஆய்வகம் மற்றும் நூலக கட்டிடம்,

    சிறுவலூர் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் மற்றும் ஊராட்சி ஒன்றிய பொதுநிதியாக ரூ.10.75 லட்சம் என ரூ.70.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம்,

    கொளப்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட வார்டு எண்.8 நம்பியூர் சாலை பகுதியில் 15-வது நிதிக்குழுமானியத் திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறுவர் பூங்கா மற்றும் கோபிசெட்டி பாளையம் நகராட்சி வார்டு எண்.2 ராமர்விரிவாக்க பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா என மொத்தம் ரூ.1.66 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற புதிய திட்டப்பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், கூச்சிக்கல்லூர் குறிச்சிபிரிவு அருகில் தனியார் இடத்தில் புதிய கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் தொடங்கி வைக்க ப்பட்டுள்ளது. மேலும், பூனாச்சி ஊராட்சி செம்படாம் பாளையம் சாலை முதல் நத்தமேடு சாலை வரை சித்தார் ஓடைபள்ளம் குறுக்கே நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.57 கோடி மதிப்பீட்டில் மேல்மட்ட பாலம் அமைக்கும் பணியினை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி பொதுமக்களிடமிருந்து அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வேண்டுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில்,கோபி செட்டிபாளையம் நகர்மன்றதலைவர் நாகராஜ், கொளப்பலூர் பேரூராட்சி தலைவர் அன்பரசு, கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) சுந்தரமூர்த்தி, நகராட்சி பொறியாளர் சுப்பிரமணி, கொளப்பலூர் பேரூராட்சி செயல் அலுவலர் மஞ்சுநாத், தாசில்தார்கள் ஆயிஷா (கோபிசெட்டிபாளையம்), விஜயகுமார் (அந்தியூர்), முத்துகிருஷ்ணன் (பவானி) மற்றும் கோபிசெட்டி பாளையம் மற்றும் அம்மா பேட்டைவட்டார வளர்ச்சி அலவலர்கள் உள்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் தொடர்புடையதுறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி அணையில் புதிய ஷட்டரில் வெல்டிங் பணிகள் நிறைவடைந்தன.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அணையில் பிரதான முதல் மதகில் உள்ள ஷட்டரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29-ந் தேதி உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து ரூ.30 லட்சம் மதிப்பில், 12 அடி உயரத்திற்கு தற்காலிக ஷட்டர் அமைக்கப்பட்டு, ‘சீல்’ வைக்கப்பட்டது. இதையடுத்து புதிய ஷட்டர் அமைக்க அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, தற்காலிக ஷட்டர் அகற்றும் பணிகள் கடந்த மாதம் 8-ந் தேதி தொடங்கி, 10-ந் தேதி நிறைவடைந்தது.

    இதைத்தொடர்ந்து ரூ.3 கோடி மதிப்பில் புதிய ஷட்டர் அமைக்கும் பணிகள் தொடங்கியது. இதில் முதற்கட்டமாக, 40 அடி அகலத்திற்கு 20 அடி உயரத்திற்கு தகடுகள், ரோலர்கள், இணைப்பு சங்கிலி, பக்கவாட்டு சுவர் சீரமைப்பு பணிகள் கடந்த 7-ந் தேதி நிறைவு பெற்றது. இதையடுத்து மதகில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு தளவாடங்களை கியாஸ் வெல்டிங் மூலம் இணைக்கும் பணிகள் நடந்தன. இதில் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 24 மணி நேரம் சுழற்சி முறையில் ஈடுபட்டனர். இந்த பணிகள் நேற்றுடன் முடிந்தன.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் வெல்டிங் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. அந்த பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து, வெல்டிங் வைக்கப்பட்ட இடத்தில் கிரைன் செய்யும் பணிகள் நடக்கிறது. ஒரிரு நாட்களில் அப்பணிகள் முடிவடையும். தொடர்ந்து ஷட்டரில் வர்ணம் பூசும் பணிகள் நடக்கும்.

    இந்த மாத இறுதிக்குள் முழுமையாக பணிகள் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும். தற்போது கிருஷ்ணகிரி அணையில் இருந்து இடது மற்றும் வலதுபுறக்கால்வாய் மூலம் முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 
    கோலாலம்பூரில் இருந்து பீஜிங் செல்லும் வழியில் 239 பயணிகளுடன் நான்காண்டுகளுக்கு முன்னர் மாயமான மலேசிய விமானத்தை தேடும் ஓசியன் இன்பினிட்டி நிறுவனத்தின் வேட்டையும் தோல்வியில் முடிந்தது. #MH370huntends #OceanInfinity
    கோலாலம்பூர்:

    மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் இருந்து சீன நாட்டின் தலைநகரான பீஜிங் நகருக்கு 8-3-2014 அன்று 227 பயணிகள் மற்றும் விமானிகள் உள்ளிட்ட 12 பணியாளர் என மொத்தம் 239 பேருடன் புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக விமானம் (எம்.ஹெச்.370) இந்திய பெருங்கடலுக்குள் (தெற்கு) விழுந்தது.



    இதையடுத்து, அந்த விமானத்தை தேடும் பணியில் விமானங்கள், கப்பல்கள் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன. ஆஸ்திரேலியக் கடற்படை கப்பல் ‘ஓஷன் ஷீல்ட்’ மற்றும் எச்.எம்.எஸ் ‘எக்கோ’ என்ற இரண்டு கப்பல்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இதுதவிர மேலும் பல தனியார் நிறுவனங்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.

    ஆனால், 1046 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற தேடுதல் வேட்டையில் எந்த பலனும் கிடைக்காத நிலையில் தேடும் பணியை நிறுத்தி கொள்வதாக மலேசியா, சீனா மற்றும் ஆஸ்திரேலிய அரசுகள் கடந்த ஆண்டு அறிவித்தன.

    இதற்கிடையில், அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் ‘கண்டுபிடித்தால் பணம் - இல்லாவிட்டால் சேவை இலவசம்’ என்னும் ஒப்பந்த அடிப்படையில் இந்திய பெருங்கடல் பகுதியில் மாயமான அந்த விமானத்தை தேட முன்வந்து விருப்பம் தெரிவித்தது. இந்த பணிக்காக ‘ஓசியன் இன்பினிட்டி’ என்னும் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான அதிநவீன கப்பல் தென்னாப்பிரிக்காவில் உள்ள டர்பன் நகரில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த பணிக்கு மலேசிய போக்குவரத்து துறை மந்திரி லியோவ் டியாங் கடந்த 6-1-2018 அன்று அனுமதி அளித்தார்.



    ஆஸ்திரேலிய கடல் எல்லைக்கு உட்பட்ட ஆழ்கடல் பகுதியில் 8 நீர்மூழ்கி கப்பல்களை பயன்படுத்தி சுமார் 80 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இரவு-பகலாக தேடும் பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால், இதுவரை எந்த நல்ல செய்தியும் கிடைக்கவில்லை.

    இந்த தேடுதல் வேட்டையை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என மலேசிய அரசு கெடு விதித்திருந்தது. அந்த கெடுக்காலம் முடிவடைந்ததாலும், தற்போது கடல் பகுதியில் தேடுதல் பணிக்கேற்ற பருவநிலை இல்லாததாலும் நான்காண்டுகளுக்கு முன்னர் மாயமான மலேசிய விமானத்தை தேடும் ஓசியன் இன்பினிட்டி நிறுவனத்தின் பணிகள் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமானத்தை பற்றிய மிகச்சிறிய தடயம் கிடைத்திருந்தாலும் ‘ஓசியன் இன்பினிட்டி’ நிறுவனத்துக்கு 7 கோடி அமெரிக்க டாலர்கள் கிடைத்திருக்கும். ஆனால், இந்த தேடுதல் வேட்டை தோல்வியில் முடிந்ததால் அந்நிறுவனம் வெறுங்கையுடன் திரும்ப நேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #MH370huntends #OceanInfinity

    ×