search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமூர்த்தி அணையில் வண்டல் மண் எடுக்கும் பணி நிறைவு
    X

    கோப்புபடம்.

    திருமூர்த்தி அணையில் வண்டல் மண் எடுக்கும் பணி நிறைவு

    • நீர்நிலைகளில் தேங்கியுள்ள மண்னை விவசாயிகள் எடுத்துக்கொள்ள அறிவிப்பு வெளியிடப்பட்டது.
    • 29 விவசாயிகள் 24 ஆயிரம் கன மீட்டர் மண் எடுத்துள்ளனர்.

    உடுமலை :

    விவசாய நிலங்களை வளமாக்கும் வகையிலும் நீர் நிலைகளை தூர்வாரி கூடுதல் மழை நீர் சேமிக்கும் வகையிலும் திருப்பூர் மாவட்டத்தில், பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டிலுள்ள, நீர்நிலைகளில் தேங்கியுள்ள வண்டல் மண், மண் ஆகியவற்றை விவசாயிகள் இலவசமாக எடுத்துக்கொள்ள கடந்த மே மாதம் 5-ந் தேதி மாவட்ட அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    எடுக்கப்படும் வண்டல் மண்விவசாய பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். நஞ்சை நிலத்திற்கு ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டர் அல்லது 75 டிராக்டர் லோடு மற்றும் புஞ்சை நிலத்திற்கு ஒரு ஏக்கருக்கு 90 கன மீட்டர் அல்லது 30 டிராக்டர் லோடு மண் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. உடுமலை தாலுகாவில் 9 குளம், குட்டைகளில், விவசாயிகள் மண் எடுக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் திருமூர்த்தி அணையிலும் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.அதன் அடிப்படையில் நடப்பாண்டு திருமூர்த்தி அணையில் 34 ஆயிரத்து 100 கன மீட்டர் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்று நிலத்தின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது. கடந்த ஆகஸ்டு 18 முதல் திருமூர்த்தி அணையிலிருந்து வண்டல் மண் எடுக்கப்பட்டு வந்தது.

    தற்போது வரை 29 விவசாயிகள் 24 ஆயிரம் கன மீட்டர் மண் எடுத்துள்ளனர். பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்க திருமூர்த்தி அணையில் நீர் சேகரிக்கும் பணி நடந்து வருவதால் மண் எடுக்கும் அனுமதி நிறைவு செய்யப்பட்டது.அதிகாரிகள் கூறுகையில், அணையின் நீர் தேங்கும் பரப்பில் மேடான பகுதியிலிருந்து 24 ஆயிரம் கனமீட்டர் மண் விவசாயிகள் எடுத்து விளை நிலங்களுக்கு பயன்படுத்தியுள்ளனர். அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதாலும் அணை நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாலும் மண் எடுக்கும் பணி நிறைவு செய்யப்பட்டது என்றனர்.

    Next Story
    ×