search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயங்கர தீ விபத்து"

    • லட்சுமிபுரத்தில் தனியார் நாப்கின் மற்றும் முக கவசம் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு திடீரென தீப்பற்றியது.
    • ரூ.3.68 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் தனியார் நாப்கின் மற்றும் முக கவசம் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு திடீரென தீப்பற்றியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். தீயை அணைக்க முயன்றனர்.

    ஆனால் முடியவில்லை. மேலும் மளமளவென பரவி தொழிற்சாலை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இது குறித்து பெரியகுளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இருந்தபோதும் 18 எந்திரங்கள், உதிரி பாகங்கள், மூலப்பொருட்கள் உள்பட ரூ.3.68 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் இது குறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டீ கடையில் திடீரென தீ பிடித்து எரிந்தது.
    • இந்த தீ விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.

    டி.என்.பாளையம்:

    பங்களாப்புதூர் அருகே யுள்ள சத்திய மங்கலம் மெயின் ரோட்டில் புஞ்சை துறைய ம்பாளையம் ஊராட்சி பஸ் நிறுத்தம் அருகே மாரியப்பன் (49) என்பவர் டீ கடை வைத்து நடத்தி வருகிறார்.

    வேலை முடிந்ததும் வழக்கம் போல் இரவு கடையை பூட்டி சென்றார். இந்நிலையில் நள்ளிரவு சுமார் 2.30 மணியளவில் மாரியப்பன் டீ கடையில் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதை பார்த்த அந்த வழியாக சென்ற வர்கள் சத்தம் போட்டனர். இதையடுத்து மாரியப்பன் மற்றும் அவரது வீட்டில் தூங்கி கொண்டு இருந்தவர்களை எழுப்பி வெளியேற்றினர்.

    இது குறித்து கோபிசெட்டி பாளையம் தீயணைப்பு துறையினரு க்கு தகவல் கொடுக்கப்ப ட்டது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில் மாரியப்பனின் டீ கடை மற்றும் வீட்டின் மேற்கூரை முழுவதும் பற்றி எரிந்தது.

    தீயணைப்பு வீரர்கள் 2 சிலிண்டர்களை மீட்டனர். மேலும் டீ கடையில் இருந்த பொருட்கள் மற்றும் சில பாத்திரங்கள் சேதமடைந்தன.

    இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது இரவு டீ கடையில் வேலை முடிந்து செல்லும் போது விறகு கட்டையில் இருந்த தீயை சரி வர அணைக்காமல் கவனக்குறைவாக இருந்து தூங்க சென்றுள்ளதாக தெரியவந்தது.

    இதனால் காற்றின் வேகத்தில் தீ உருவாகி படிப்படியாக விறகில் பற்றிய தீ டீ கடை முழுவதும் பற்றி எரிந்து இருக்கும் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. நல்லவேளையாக இந்த தீ விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. கடையில் இருந்த 2 சிலிண்டர்கள் வெடித்து இருந்தால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டு இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    • பிரபாகர் (வயது 40). இவர் ஓலப்பாளையம் பகுதியில் நார்மில் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார்.
    • தேங்காய் நார் தொழிற்சாலையில் நேற்று மதியம் சுமார் 12 மணி அளவில் திடீரென்று தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பெரிய கரசப்பாளையத்தை சேர்ந்தவர் பிரபாகர் (வயது 40). இவர் ஓலப்பாளையம் பகுதியில் நார்மில் தொழி ற்சாலை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நார்மில் தொழிற்சா லையில் தேங்காய் மட்டை களில் இருந்து தனியாக தேங்காய் நார் பிரித்து எடுக்கப்பட்டு அதில் இருந்து எடுக்கப்படும் தேங்காய் நாரை கட்டிகளாக தயார் செய்தும், தேங்காய் நாரை தூளாக அரைத்தும் தனித்தனியாக வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த தேங்காய் நார் தொழிற்சாலையில் நேற்று மதியம் சுமார் 12 மணி அளவில் திடீரென்று தீப்பிடித்து எரிய ஆரம்பி த்தது.

    இதனை பார்த்த அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தேங்காய் நாரில் பிடித்த எரியும் தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடிய வில்லை.

    இது குறித்து உடனடியாக நாமக்கல்லில் உள்ள தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தேங்காய் நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து கட்டுப்படுத்தி அருகில் உள்ள பகுதிகளுக்கு பரவாமல் தடுத்தனர்.

    இருப்பினும் தேங்காய் நார் மஞ்சு தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்த 30- க்கும் மேற்பட்ட மின்மோட்டார்கள், கன்வேயர் பெல்ட்டுகள், தேங்காய் நாரை பில்டர் செய்யும் சல்லடைகள், மட்டை போடும் கூண்டுகள், தேங்காய் நார்கள் உட்பட அனைத்தும் எரிந்து நாசமானது.

    இதன் மதிப்பு சுமார் ரூ.80 லட்சம் வரை இருக்கலாம் என தேங்காய் நார் தொழிற்சாலையின் உரிமையாளர் பிரபாகர் தெரிவித்தார்.

    • கணவன்-மனைவி பலத்த காயம் அடைந்தனர்.
    • துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை கவுண்டம்பாளையம் அடுத்த இடையர்பாளையம் ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் ராஜன்(வயது 60). இவரது மனைவி சாந்தி(50).

    இவர்கள் தங்கள் வீட்டின் முன்பு சிறிய அளவில் மாலை நேரத்தில் டிபன் கடை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை 2 பேரும் வீட்டின் முன்பு கடை போடுவதற்காக பொருட்கள் அனைத்தையும் எடுத்து தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது கியாஸ் சிலிண்டரில் இருந்து கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை சாந்தி பார்த்து விட்டார். உடனடியாக அவர் கியாசை ஆப் செய்வதற்கு சென்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீடு முழுவதும் தீ பரவி பற்றி எரிந்தது.

    இந்த விபத்தில் சாந்தி, அவரது கணவர் ராஜன் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு கை, கால், முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இவர்களது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து 2 பேரை மீடடு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×