search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம் கொள்ளை"

    • பூமிநாதன் மோட்டார் சைக்கிள் டயர் திடீரென பஞ்சர் ஆனது.
    • பூமிநாதன் பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்த பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த ராமஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பூமிநாதன்(34). இவர் திருவள்ளூர் உழவர் சந்தை அருகில் உள்ள வங்கியில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் எடுத்துக்கொண்டு காக்களூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிளின் டயர் பஞ்சர் ஆனது.

    இதையடுத்து அவர் காக்களூர் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு கடையில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு டயர் பஞ்சரை சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென பூமிநாதனின் மோட்டார் சைக்கிளின் முன்பகுதி கவரில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர். சிறிது நேரம் கழித்து பூமிநாதன் பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்த பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்தது முதல் கொள்ளையர்கள் பூமிநாதனை பின் தொடர்ந்து வந்து கைவரிசை காட்டி இருக்கலாம் என்று தெரிகிறது.

    இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • தங்கநகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.
    • கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த கவர்கல்பட்டி பி.என்.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி மனைவி ராணி (வயது 71). தினந்தோ றும் இவரது மகன்கள் இருவரும் வேலைக்கு சென்று விடுவதால், இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். நேற்று பகல் 2 மணியளவில் இவரது வீட்டிற்கு சென்ற மர்ம நபர்கள் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி ராணியை சேலையால் கட்டிப்போட்டு விட்டு, வீட்டில் இருந்து ஆறரை சவரன் தங்கநகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.

    மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து வாழப்பாடி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீஸார், பட்டப்பகலில் வீடு புகுந்து கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,

    இரு தினத்திற்கு முன் மூதாட்டி வீட்டிற்கு, வேலைக்கு ஆள் வேண்டுமா எனக் கேட்டு பெண் ஒருவர் வந்து சென்றது தெரிய வந்துள்ளது. இதனால், வீட்டில் மூதாட்டி தனியாக இருப்பதை உளவு பார்த்து மர்ம கும்பல் இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியானதால், இந்த கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பீரோவில் இருந்த நகை-பணம் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது.
    • நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு சீனிவாசா நகரை சேர்ந்தவர் நகுனி.இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சென்றார்.

    பின்னர் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த நகை-பணம் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • காற்றாலை மின் உற்பத்தி நிலைய இயக்குனராக உள்ளார்.
    • வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார்.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி அருகே உள்ள மகாலிங்கபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். காற்றாலை மின் உற்பத்தி நிலைய இயக்குனராக உள்ளார்.

    சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு கோவை ராமநாதபுரத்தில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது ரவிச்சந்திரன் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 10 பவுன் தங்க நகைகள், ரூ.9 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    வீட்டிற்கு திரும்பிய ரவிச்சந்திரன் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அறையில் பீரோவில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.9 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து அவர் மகாலிங்கபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    ஆச்சிப்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (74). கணக்காளர். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். இவரது மனைவி மாசாணியம்மன் கோவிலுக்கு சென்று இருந்தார்.

    அப்போது இவர்களது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து

    உள்ளே நுைழந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 4½ பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    இது குறித்து பாலகிருஷ்ணன் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • விக்கிரவாண்டியில் கொத்தனாரை வழிமறித்து செல்போன் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி உஸ்மான் நகரை சேர்ந்தவர் சேக் உசேன் ( வயது54). கொத்தனராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு வேலை செய்துவிட்டு தனது டிவிஎஸ் மோட்டார் சைக்கிளில் விக்கிரவாண்டி நோக்கிவந்து கொண்டிருந்தார். விக்கிரவாண்டி சுங்க ச்சாவடி கடந்து சுடுகாடு ரோட்டில் வந்து கொண்டி ருந்தபோது ற்றுப் பாலத்தில் அருகே இவருக்கு பின்னால் வந்த அடை யாளம் தெரியாத 3 நபர்கள் இவரை திடீரென வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி இவரிடம் இருந்து பணம் ஆயிரம் ரூபாய், செல்போன் ,மோட்டார் சைக்கிள் மூன்றும் பிடுங்கிக் கொண்டு இவரை பள்ளத்தை தள்ளிவிட்டு ஓடிவிட்டனர். இதுகுறித்து அவர் விக்கிரவாணடி போலீசில் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×