விக்கிரவாண்டியில் கொத்தனாரை வழிமறித்து செல்போன் பணம் கொள்ளை

விக்கிரவாண்டியில் கொத்தனாரை வழிமறித்து செல்போன் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
விக்கிரவாண்டியில் கொத்தனாரை வழிமறித்து செல்போன் பணம் கொள்ளை
Published on

விழுப்புரம்:

விக்கிரவாண்டி உஸ்மான் நகரை சேர்ந்தவர் சேக் உசேன் ( வயது54). கொத்தனராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு வேலை செய்துவிட்டு தனது டிவிஎஸ் மோட்டார் சைக்கிளில் விக்கிரவாண்டி நோக்கிவந்து கொண்டிருந்தார். விக்கிரவாண்டி சுங்க ச்சாவடி கடந்து சுடுகாடு ரோட்டில் வந்து கொண்டி ருந்தபோது ற்றுப் பாலத்தில் அருகே இவருக்கு பின்னால் வந்த அடை யாளம் தெரியாத 3 நபர்கள் இவரை திடீரென வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி இவரிடம் இருந்து பணம் ஆயிரம் ரூபாய், செல்போன் ,மோட்டார் சைக்கிள் மூன்றும் பிடுங்கிக் கொண்டு இவரை பள்ளத்தை தள்ளிவிட்டு ஓடிவிட்டனர். இதுகுறித்து அவர் விக்கிரவாணடி போலீசில் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com