search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாபிஷேகம்"

    • திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிக்கு இன்று பட்டாபிஷேகம் நடந்தது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி பெருவிழா தொடங்கியது. சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க பல்லக்கு, மாலையில் தங்க மயில், தங்க குதிரை, வெள்ளி பூதம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    முக்கிய நிகழ்ச்சியாக பட்டாபிஷேகம் இன்று மாலை கோவிலில் உள்ள ஆறு கால் மண்டபத்தில் நடக்கிறது. இதையொட்டி சுப்பிரமணியர்- தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

    தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியர்- தெய்வானையுடன் ஆறு கால் மண்டபத்தில் எழுந்தருளுவார்கள். அங்கு வேத மந்திரங்கள் முழங்க சுப்ரமணிய சுவாமிக்கு செங்கோல், சேவல் கொடி சாற்றி பட்டாபிஷேகம் நடைபெறும்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை மீனாட்சி சுந்தரேசுவரர் முன்னிலையில் சுப்பிரமணியர்- தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெறும்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

    • இங்கு தான் ராகவேந்திர சுவாமிகள் சன்னியாசம் பெற்றார்.
    • புகழ்பெற்ற ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனத்தில் பட்டாபிஷேகம் மகோற்சவம் விழாவை முன்னிட்டு 108கலச பூஜைகள் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வட வாற்றங்கரை ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனம் மிகவும் பழைமையானது. இங்கு தான் ராகவேந்திர சுவாமிகள் சன்னியாசம் பெற்றார். மூல பிருந்தாவனம் செல்ல முடியாத பக்தர்கள் இந்த பிருந்தாவனத்தில் வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இத்தகைய புகழ்பெற்ற ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனத்தில் பட்டாபிஷேகம் மகோற்சவம் விழாவை முன்னிட்டு 108கலச பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் பட்டாபிஷேகம் மகோற்சவம் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • திருஏடு வாசிப்பு திருவிழா 7 நாட்கள் நடைபெற்றது.
    • அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனத்தில் எழுந்தருளினார்.

    திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் திருஏடு வாசிப்பு திருவிழா கடந்த 9-ந்தேதி தொடங்கி, 17 நாட்கள் நடைபெற்றது. விழா காலங்களில் தினசரி மாலை 3 மணிக்கு திருஏடு வாசிப்பு நடந்தது. கடந்த 23-ந்தேதி திருக்கல்யாணம் நடந்தது.

    விழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம் மாலையில் சிகர நிகழ்ச்சியான பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு திருவிழா நடந்தது. இதனை அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள்சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர் தொடங்கி வைத்தார். பின்னர் வைகுண்ட மகராஜன்மற்றும் ஆனந்த் குழுவினர் பட்டாபிஷேக திருஏடு வாசித்தனர். இரவில் அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனத்தில் எழுந்தருளி, பதியை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவில் பலர் கலந்து கொண்டனர்.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • பால், பழம், பன்னீர், தேங்காய், பூ ஆகியவற்றை சுருளாக வைத்து அய்யாவை வணங்கி சென்றனர்.

    கன்னியாகுமரி:

    சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமியின் தலைமைபதியில் திருஏடு வாசிப்பு திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. திருஏடுவாசிப்பு விழாவில் நாள்தோறும் மாலை 5 மணிக்கு திருஏடு வாசிப்பும் இரவு வாகன பவனியும், நடைபெற்றது.

    15-ம் நாள் விழாவான வெள்ளிக்கிழமை அய்யா வைகுண்ட சாமிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.திருக்கல்யாண வாசிப்பு நிகழ்ச்சியில் பெண்கள் அய்யா வைகுண்ட சுவாமிக்கு கல்யாண சீர் வரிசையாக இனிப்புகள், பலகாரங்கள், பூக்கள், பழங்கள், அடங்கிய சுருள் தட்டுகளை வழங்கி அய்யாவின் அருள் பெற்றுச் சென்றனர்.

    திருஏடு வாசிப்பு விழாவின் 17-ம் நாள் நிறைவு நாள் விழா நேற்று (18-ந் தேதி) நடைபெற்றது.மாலை அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும் இரவு 7 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பும் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. பட்டாபி ஷேக ஏடுவாசிப்பு நிகழ்ச்சி யில் தலைமைபதி குரு பால. ஜனாதிபதி அகிலத் திரட்டு பாராயண விளக்கவுரையாற்றினார்.குருமார்கள் பால. லோகாதிபதி, ஜனா .யுகேந்த், ஜனா.வைகுந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அதேபோல் நேற்று மார்கழி முதல் ஞாயிற்றுக் கிழமை என்பதால் குமரி, சென்னை, நெல்லை, தூத்துகுடி, தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான அய்யாவழி பக்தர்கள் பதிக்கு வந்தனர்.

    அவர்கள் முத்திரி கிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து பால், பழம், பன்னீர், தேங்காய், பூ ஆகிய வற்றை சுருளாக வைத்து அய்யாவை வணங்கி சென்றனர்.

    • திருஏடு வாசிப்பு திருவிழா கடந்த 2-ந்தேதி தொடங்கியது.
    • ஆயிரக்கணக்கான அய்யாவழி பக்தர்கள் பதிக்கு வந்தனர்.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமியின் தலைமைபதியில் திருஏடு வாசிப்பு திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. விழாவில் தினமும் மாலையில் திருஏடு வாசிப்பு, இரவு வாகன பவனி போன்றவை நடந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அய்யா வைகுண்ட சாமிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவின் நிறைவு நாளான நேற்று மாலையில் அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை, இரவு 7 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு, அன்னதானம் போன்றவை நடந்தன. நிகழ்ச்சியில் தலைமைபதி குரு பால. ஜனாதிபதி அகிலத்திரட்டு பாராயண விளக்கவுரையாற்றினார். குருமார்கள் பால. லோகாதிபதி, ஜனா.யுகேந்த், ஜனா.வைகுந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நேற்று மார்கழி முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் குமரி, சென்னை, நெல்லை, தூத்துகுடி, தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான அய்யாவழி பக்தர்கள் பதிக்கு வந்தனர்.

    அவர்கள் முத்திரிகிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து பால், பழம், பன்னீர், தேங்காய், பூ ஆகியவற்றை சுருளாக வைத்து அய்யாவை வணங்கினர்.

    • அக்னி வளர்க்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்கப்பட்டு பூஜை நடந்தது.
    • சுவாமிக்கும் அம்பாளுக்கும் தீப, தூப ஆராதனை நடந்தது.

    திருப்பரங்குன்றம் கோவிலில் நடைபெறக்கூடிய பங்குனிபெருவிழா, தெப்பத்திருவிழா மற்றும் திருக்கார்த்திகை திருவிழா ஆகிய 3 திருவிழாக்களிலும் கொடியேற்றத்துடன் நடப்பது போலவே இந்த 3 திருவிழாக்களிலும் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடப்பது தனிசிறப்பு.

    திருக்கார்த்திகை திருவிழாவான நேற்று வழக்கம்போல முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி கோவிலுக்குள் உள்ள 6 கால் மண்டபத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளினார். அங்கு அக்னி வளர்க்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்கப்பட்டு பூஜை நடந்தது.

    மேளதாளங்கள் முழங்க முருகப்பெருமானுக்கு சிரசில் தங்க கிரீடம் சாற்றப்பட்டது. மேலும் முருகப்பெருமானின் திருக்கரத்தில், நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட செங்கோல் சூடி பட்டாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. பட்டாபிஷேகத்தை தொடர்ந்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் தீப, தூப ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நாளை பட்டாபிஷேகம் நடக்கிறது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    திருப்பரங்குன்றம்,

    திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை மாதத்தில் தீபத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த நவம்பர் மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில், அன்னம், வெள்ளி பூதம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (5-ந் தேதி) மாலை 7 மணி அளவில் கோவில் ஆறுகால் மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. 6-ந்தேதி காலையில் கார்த்திகை தேரோட்டம் நடைபெறும்.

    இதையொட்டி சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் சிறிய வைர தேரில் எழுந்தருளுவார். பக்தர்கள் வடம் பிடிக்க சுவாமி ரத வீதிகள் வழியாக தேர் சுற்றி வந்து நிலைைய அடையும். தொடர்ந்து மாலை 6 மணி அளவில் கோவிலில் பாலதீபம் ஏற்றி மலை மேல் மகா தீபம் ஏற்றப்படும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • ஆவணி மூலப் பெருந்திருவிழாவில் இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாரைக்கு முக்தி கொடுத்த லீலை
    • மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் 2-ம் நாளான இன்று நாரைக்கு முக்தி கொடுக்கும் லீலையில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர்-மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத் திருவிழா நடந்து வருகிறது. இந்த விழாவில் சுவாமிக்கு பட்டாபிஷேகம் செய்யப்படும். இதனைத் தொடர்ந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர், 8 மாத காலம் ஆட்சி செய்வதாக பக்தர்கள் நம்பிக்கை. விழாவின்போது சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில், 12 லீலைகள் அரங்கேற்றம் செய்யப்படும். அதன்படி நேற்று சிவபெருமான் கருங்குயிலுக்கு உபதேசம் வழங்கிய லீலை நடந்தது. 2-ம் நாளான இன்று நாரைக்கு முக்தி கொடுத்த லீலை நடந்தது. மீனாட்சி அம்மன்- பிரியாவிடை சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் சப்பரங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். நாளை மாணிக்கம் விற்ற லீலை நடக்க உள்ளது.

    மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத் திருவிழா 9-ம் தேதி வரை நடக்க உள்ளது. மதுரையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆவணி மூல திருவிழா நடக்கவில்லை. இந்த நிலையில் பக்தர்களின் பங்களிப்புடன் ஆவணி மூலத் திருவிழா நடப்பாண்டு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • திருவிழாவின் முதல் நாளில் ராவண சம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இன்று ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெறுகிறது.

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் தல வரலாற்றை விளக்கும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. திருவிழாவின் முதல் நாளில் ராவண சம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவில் இரண்டாவது நாளான நேற்று விபீஷ்ணர் பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்காக கோவிலிலிருந்து ராமபிரான், சீதாதேவி, லெட்சுமணர் மற்றும் ஆஞ்சநேயருடன் தங்ககேடயத்திலும், விபீஷ்ணரும் தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ள கோதண்டராமர் கோவிலுக்கு எழுந்தருளினர். தொடர்ந்து பகல் 2 மணிக்கு மேல் ராமபிரான் இலங்கை மன்னராக விபீஷ்ணருக்கு பரிவட்டம் கட்டி பட்டாபிஷேகம் செய்து வைத்தார். பின்னர் ராமபிரான், சீதாதேவி, லட்சுமணர், ஆஞ்சநேயர் மற்றும் விபீஷ்ணருக்கும் சிறப்பு தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன.

    இந்த பட்டாபிஷேக நிகழ்ச்சியில் கோவிலின் துணை ஆணையர் மாரியப்பன், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், பேஷ்கார் கமலநாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று பகல் 12.30 மணிக்கு கோவிலில் உள்ள ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெறுகிறது. அதன் பின்னர் இரவு சுவாமி அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி கோவில் ரத வீதிகளை சுற்றி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    ×