search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் பட்டாபிஷேக திருவிழா
    X

    தலைமைப்பதியில் நடந்த விழாவில் பங்கேற்ற பக்தர்கள்.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் பட்டாபிஷேக திருவிழா

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • பால், பழம், பன்னீர், தேங்காய், பூ ஆகியவற்றை சுருளாக வைத்து அய்யாவை வணங்கி சென்றனர்.

    கன்னியாகுமரி:

    சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமியின் தலைமைபதியில் திருஏடு வாசிப்பு திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. திருஏடுவாசிப்பு விழாவில் நாள்தோறும் மாலை 5 மணிக்கு திருஏடு வாசிப்பும் இரவு வாகன பவனியும், நடைபெற்றது.

    15-ம் நாள் விழாவான வெள்ளிக்கிழமை அய்யா வைகுண்ட சாமிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.திருக்கல்யாண வாசிப்பு நிகழ்ச்சியில் பெண்கள் அய்யா வைகுண்ட சுவாமிக்கு கல்யாண சீர் வரிசையாக இனிப்புகள், பலகாரங்கள், பூக்கள், பழங்கள், அடங்கிய சுருள் தட்டுகளை வழங்கி அய்யாவின் அருள் பெற்றுச் சென்றனர்.

    திருஏடு வாசிப்பு விழாவின் 17-ம் நாள் நிறைவு நாள் விழா நேற்று (18-ந் தேதி) நடைபெற்றது.மாலை அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும் இரவு 7 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பும் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. பட்டாபி ஷேக ஏடுவாசிப்பு நிகழ்ச்சி யில் தலைமைபதி குரு பால. ஜனாதிபதி அகிலத் திரட்டு பாராயண விளக்கவுரையாற்றினார்.குருமார்கள் பால. லோகாதிபதி, ஜனா .யுகேந்த், ஜனா.வைகுந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அதேபோல் நேற்று மார்கழி முதல் ஞாயிற்றுக் கிழமை என்பதால் குமரி, சென்னை, நெல்லை, தூத்துகுடி, தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான அய்யாவழி பக்தர்கள் பதிக்கு வந்தனர்.

    அவர்கள் முத்திரி கிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து பால், பழம், பன்னீர், தேங்காய், பூ ஆகிய வற்றை சுருளாக வைத்து அய்யாவை வணங்கி சென்றனர்.

    Next Story
    ×