search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஞ்சர்"

    மகாராஷ்டிரா மாநிலத்தின் தானேவில் மோடியின் ஆட்சி குறித்து பேசிய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம், 3 டயர்கள் பஞ்சர் ஆன காரை போல இந்திய பொருளாதாரத்தின் நிலை உள்ளதாக தெரிவித்துள்ளார். #Chidambaram #modi
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதிமந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    ‘இந்தியாவில் தனியார் முதலீடு, தனியார் கொள்முதல், ஏற்றுமதி, அரசின் செலவுகள் ஆகியவை மிக முக்கியமான 4 அமைப்புகள் ஆகும். அது காரின் 4 சக்கரங்களை போன்றது. ஆனால், தற்போது பா.ஜ.க ஆட்சியில் தனியார் முதலீடு, தனியார் கொள்முதல், ஏற்றுமதி ஆகியவை நலிவடைந்து உள்ளது. 3 சக்கரங்கள் பஞ்சர் ஆன காரைபோல இந்திய பொருளாதாரம் மாறியுள்ளது.

    சரியான முறையில் அரசின் செலவுகள் மட்டுமே இயங்குகிறது. அரசின் செலவுகளை ஈடுசெய்ய பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற வரிச்சுமைகள் மக்களின் மீது ஏற்றப்படுகிறது. மற்ற அனைத்து நாடுகளிலும் ஜி.எஸ்.டி வரி நாடு முழுவதும் ஒரே வரியாக விதிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் மட்டுமே 5 அடுக்கு ஜி.எஸ்.டி வரி உள்ளது.

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் இருந்தும் சமீப காலமாக நாம் எவ்வித லாபமும் பெறுவதில்லை. மத்திய பா.ஜ.க அரசின் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் மூலம் ஆரம்பத்தொகையாக தனி நபருக்கு 43 ஆயிரம் ரூபாய் அளிக்கப்படுகிறது. இதனை வைத்துக்கொண்டு பிரதமர் மோடி கூறியது போல் பக்கோடா கடை மட்டுமே போட முடியும்.

    ஆனால், பா.ஜ.க ஆட்சியில் சமூகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்க்கும்போது பொருளாதார பாதிப்பு சரிசெய்யக்கூடியது ஆகும். பா.ஜ.க அரசு ஒரு சில சமூகத்தினரை 2-ம் தர குடிமகன்களாக அறிவித்தது. மக்களின் உணவு பழக்கங்கள் மீதும் கலாச்சார பழக்கவழக்கங்கள் மீதும் இந்த அரசு அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது.’

    இவ்வாறு அவர் பேசியுள்ளார். #Chidambaram #modi
    ×