search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி சாவு"

    • மின்விளக்கு அலங்காரம் செய்தபோது பரிதாபம்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி வாவத்துறை கடற்கரை பகுதியில் குருசடி உள்ளது. இங்கு திருவிழாவை யொட்டி கோபுரத்தின் உச்சியில் மின்விளக்கு அலங்காரம் செய்யும் பணி நடந்தது.

    இந்த பணியில் ஆரல்வாய்மொழியை சேர்ந்த ஆபிரகாம் (வயது 45) என்பவர் ஈடுபட்டுகொண்டிருந்தார். அப்போது அவர் கோபுரத்தின் உச்சியில் இருந்து கால் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரி பள்ளத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் ஆபிரகாம் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆபிரகாம் உடல் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    • மதுபோதையில் அருகில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் குளித்தார்.
    • அப்போது நீரில் முழ்கி அவர் உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்து உள்ள தியாகரசன பள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. கூலி தொழிலாளியான இவர் நேற்று மதுபோதையில் அருகில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் குளித்தார்.

    அப்போது நீரில் முழ்கி அவர் உயிரிழந்தார். இது குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (40) வெள்ளி பட்டறை தொழிலாளி.
    • இவர் குடும்ப பிரச்சினையால் மனமுடைந்த வெள்ளிக்கு பயன்படுத்தும் சல்பர் ஆசிட்டை குடித்து மயங்கி கிடந்தார்.

    சேலம்:

    சேலம் அழகாபுரம் மதுரா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (40) வெள்ளி பட்டறை தொழிலாளி. இவர் குடும்ப பிரச்சினையால் மனமுடைந்த வெள்ளிக்கு பயன்படுத்தும் சல்பர் ஆசிட்டை குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதமாக இறந்தார். இதுகுறித்து அழகாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    • இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
    • மனமுடைந்து காணப்பட்ட அன்பு நேற்று தோட்டத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்து கிடந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அடுத்துள்ள பெரமாண்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அன்பு (வயது55). இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

    இதனால் மனமுடைந்து காணப்பட்ட அன்பு நேற்று தோட்டத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்து கிடந்தார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மொரப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அன்பு பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சின்னமனூர் மெயின் ரோடு அருகே வந்து கொண்டு இருந்தபோது எதிரே வந்த ஆம்புலன்ஸ் மோதி விபத்து ஏற்பட்டது.
    • படுகாயமடைந்த அர்ஜூனன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே அம்மாபட்டியைச் சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 33). இவர் தனது உறவினர் மாறன் (57) என்பவருடன் வேலை நிமித்தமாக சென்று மீண்டும் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.

    சின்னமனூர் மெயின் ரோடு அருகே வந்து கொண்டு இருந்தபோது எதிரே வந்த ஆம்புலன்ஸ் மோதி விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த அர்ஜூனன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் உச்சம் பாறையிலிருந்து துவரங்காட்டிற்கு சென்றார்
    • பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ஆண்டித்தோப்பு உச்சம் பாறை பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 62), தொழிலாளி.

    இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் உச்சம் பாறையிலிருந்து துவரங்காட்டிற்கு சென்றார். அப்போது பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பெருமாள், பலத்த காயம் அடைந்தார்.

    சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே பெருமாள் பரிதாபமாக இறந்தார். இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

    இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் விசாரணை நடத்தி காரை ஒட்டி வந்த திடல் ரெத்தினபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (48) என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • வெங்கடேஷ் (வயது 45). இவர் சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார்.
    • அப்போது காய்கறி வெட்டும் எந்திரத்தை ஆன் செய்தபோது திடீரென அவரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது.

    சேலம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருணைபள்ளி உருளை தொட்டி பகுதியைச் சேர்ந்த வர் வெங்கடேஷ் (வயது 45). இவர் சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். இன்று காலை காய்கறி வெட்டும் தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

    அப்போது காய்கறி வெட்டும் எந்திரத்தை ஆன் செய்தபோது திடீரென அவரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. இதனை பார்த்த உடன் வேலை பார்த்தவர்கள் அதிர்ச்சி யடைந்தனர். பின்னர் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அரசு ஆஸ்பத்தி ரியில் பரிசோதித்த டாக்டர் கள் , அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த உறவினர்கள் சேலம் விரைந்துள்ளனர்.

    இந்த சம்பவம் ஓட்டல் ஊழியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து சேலம் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பம்புசெட்டை அகற்றும் பணியில் ஈடுபட்ட போது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆம்பலூர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன், விவசாயி. இவருக்கு அதே பகுதியில் சொந்தமான விவசாய நிலம், பம்புசெட் உள்ளது.

    பழுதடைந்து காணப்பட்ட பம்புசெட்டை அகற்றிவிட்டு, கட்டிடத்தை புதுப்பிக்க முடிவு செய்தார்.

    அதன்படி இன்று காலை அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் பம்புசெட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழுந்தது. அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 25) கட்டிட இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே உள்ள கதவாலம் ஊராட்சி சேர்ந்த அப்துல் சலீம் (வயது 45) கூலி தொழிலாளி.

    இவரை கடந்த 3 நாட்களுக்கு முன்பு விஷப் பாம்பு கடித்தது. ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

    சிகிச்சை பெற்று வந்த அவர் அதிகாலை இறந்தார். இது குறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று மது போதையில் இருந்த குண சேகரன் அவருடைய மனைவி ராஜேஸ்வரியிடம் வெளியில் செல்ல வேண்டி இருப்பதாக கூறி கார் சாவியை கேட்டுள்ளார்.
    • மது போதையில் இருந்த கணவரிடம் கார் சாவியை தர மறுத்ததால் இருவருக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் கிருஷணாபுரம் அருகே உள்ள எஸ்.கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 35).இவர் பெங்களுரில் டிடிஎன் லேயவுட் பகுதியில் தங்கி அங்கு சைக்கிள் சாப் வைத்து நடத்தி வந்தார்.

    இந்நிலையில் கர்த்தானூரில் உள்ள அவரது மாமியார் வீட்டிற்கு குடும்பத்துடன் காரில் வந்தனர். இவருக்கு நீண்ட நாட்களாக மது பழக்கம் இருந்து வந்துள்ளது.

    சம்பவத்தன்று மது போதையில் இருந்த குண சேகரன் அவருடைய மனைவி ராஜேஸ்வரியிடம் வெளியில் செல்ல வேண்டி இருப்பதாக கூறி கார் சாவியை கேட்டுள்ளார்.

    மது போதையில் இருந்த கணவரிடம் கார் சாவியை தர மறுத்ததால் இருவருக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் மனமுடைந்த குணசேகரன் அதே பகுதியில் கிழங்கு ேதாட்டம் அருகே உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாதையன் பால் சீலிங் வேலை செய்து வந்தார்.
    • எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இதில் பலத்த காயங்களுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே எம்.பெருமாபாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் மாதையன் (வயது 42). பால் சீலிங் வேலை செய்து வந்தார். இவர் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் சாலையில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 26-ந்தேதி வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இதில் பலத்த காயங்களுடன் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்து போனார். இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நேற்று வீட்டின் மேல் இருந்து தவறி விழுந்தார்.
    • அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாதேஸ் உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள தென்னமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ் (வயது45).

    இவரது வீடு ஒன்றை கட்டி வருகிறார். நேற்று வீட்டின் மேல் இருந்து தவறி விழுந்தார்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாதேஸ் உயிரிழந்தார்.

    இது குறித்து தளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×