search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துணிவு"

    • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் 'துணிவு' விஜய்யின் 'வாரிசு' ஆகிய திரைப்படங்கள் வெளியானது.
    • ஒரே நாளில் 2 உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியானதால் இருவரது ரசிகர்களும் உற்சாகம் அடைந்து கொண்டாடினர்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் நடித்த 'துணிவு', நடிகர் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய திரைப்படங்கள் வெளியானது. ஒரே நாளில் 2 உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியானதால் இருவரது ரசிகர்களும் உற்சாகம் அடைந்தனர். படம் வெளியான தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் கட்-அவுட், பேனர் வைத்தும், கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

    இந்நிலையில் கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி வாரிசு, துணிவு பட சிறப்புக் காட்சிகளை வெளியிட்ட 8 திரையரங்குகளுக்கு கோவை கலெக்டர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    • துணிவு -வாரிசு திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
    • இவ்விரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் மற்றும் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வெகு விமர்சையாக கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைப்பிரபலங்களும் இந்த இரு படங்களையும் கொண்டாடி வருகின்றனர்.


    துணிவு - வாரிசு

    இரண்டு படங்களும் உலக அளவில் ரூ.150 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், துணிவு மற்றும் வாரிசு திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, துணிவு திரைப்படம் நெட்பிளிக் தளத்திலும் வாரிசு திரைப்படம் அமேசான் தளத்திலும் பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

    • மதுரை மாவட்டத்திலுள்ள 34 திரையரங்குகளுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
    • ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் 1955ன் படி திரையரங்கின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    மதுரை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11ம் தேதி விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு படங்கள் வெளியாகின.

    இந்நிலையில் 11, 12, 13 மற்றும் 18ம் தேதிகளில் காலை 9 மணிக்கு ஒரு சிறப்பு காட்சி நடத்துவதற்கு மட்டுமே அரசாணையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து 11ம் தேதியன்று நள்ளிரவு 1 மணி மற்றும் அதிகாலை 4 மணிக்கு திரைப்படங்களை திரையிட்டுள்ளதாக மதுரை மாவட்டத்தில் உள்ள 34 திரையரங்குகளுக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

    குறிப்பாணை கிடைத்த 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும், இல்லையென்றால் தமிழ்நாட்டின் திரையரங்கு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் 1955ன் படி திரையரங்கின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

    • துணிவு - வாரிசு திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி வெளியானது.
    • ரசிகர்கள் இந்த இரு படங்களையும் கொண்டாடி வருகின்றனர்.

    இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் மற்றும் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் வெகு விமர்சையாக கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைப்பிரபலங்களும் இந்த இரு படங்களையும் கொண்டாடி வருகின்றனர்.


    துணிவு - வாரிசு

    இதைத்தொடர்ந்து அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.


    லோகேஷ் கனகராஜ் - விக்னேஷ் சிவன்

    இந்நிலையில், ஏகே 62, தளபதி 67 படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த இரண்டு படங்களும் இந்த வருடம் தீபாவளியன்று மீண்டும் மோதவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘துணிவு’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    துணிவு

    போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டிலும் லைகா நிறுவனம் வெளிநாட்டிலும் வெளியிட்டது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர்.


    துணிவு

    இந்நிலையில், 'சீமராஜா', 'ரஜினிமுருகன்', 'டி.எஸ்.பி' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் 'துணிவு' திரைப்படத்தை பாராட்டி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "துணிவு செம்ம அஜித்குமார் சார் பெர்பாமென்ஸ் வேற லெவல். எச்.வினோத் ஸ்கேம் கான்செப்ட் சூப்பர். இது மக்களுக்கான விழிப்புணர்வு படம்னு சொல்லலாம். வாழ்த்துக்கள் துணிவு படக்குழு" என பதிவிட்டுள்ளார்.


    • அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளார்.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.


    ஏகே 62 அப்டேட்

    இந்நிலையில், ஏகே62 படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ஓடிடி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் ‘துணிவு’.
    • இப்படம் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    துணிவு

    போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டிலும் லைகா நிறுவனம் வெளிநாட்டிலும் வெளியிட்டது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர்.


    துணிவு

    இந்நிலையில், துணிவு திரைப்படம் வெளிநாடுகளில் வசூலில் உச்சம் தொட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அமெரிக்காவில் 7 கோடி வசூலையும் மலேசியாவில் 8 கோடி வசூலையும் கடந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • எச்.வினோத் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘துணிவு’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிட்டது.


    துணிவு போஸ்டர்

    வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர். மேலு, இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், 'துணிவு' படக்குழு பொங்கலை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் 'உலகளாவிய மிகப்பெரும் வெற்றி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


    • இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் ஏகே62 படத்தில் நடிக்கவுள்ளார்.
    • இவர் சபரிமலைக்கு யாத்திரை செய்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'துணிவு' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.


    விக்னேஷ் சிவன்

    இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் சபரிமலைக்கு யாத்திரை சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோவை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் இயக்குனர் எச். வினோத் சபரிமலையில் சாமி தரிசனம் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.


    • எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் 'துணிவு'.
    • இப்படத்தின் புதிய போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிட்டது.


    துணிவு போஸ்டர்

    வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், 'துணிவு' படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அஜித்தின் புகைப்படத்துடன் 'தி ரியல் வின்னர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வரும் ரசிகர்கள் இது 'துணிவு' பொங்கல் தான் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • எச்.வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது.
    • இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிட்டது.


    எச்.வினோத்

    வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், 'துணிவு' படத்தின் இயக்குனர் எச். வினோத் சபரிமலைக்கு யாத்திரை சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான திரைப்படம் ‘துணிவு’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிட்டது.


    அஜித் - மஞ்சுவாரியர்

    வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், நடிகை மஞ்சுவாரியர், அஜித்துடனான புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து 'நீங்கள் நீங்களாகவே இருந்ததற்கு நன்றி அஜித் சார்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.


    ×