'துணிவு' வெற்றி.. சபரிமலைக்கு யாத்திரை சென்ற எச்.வினோத்..

எச்.வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது.இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
எச்.வினோத்
எச்.வினோத்
Published on

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிட்டது.

எச்.வினோத்

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், 'துணிவு' படத்தின் இயக்குனர் எச். வினோத் சபரிமலைக்கு யாத்திரை சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com