எச். வினோத்தைத் தொடர்ந்து சபரிமலை யாத்திரை செய்த விக்னேஷ் சிவன்

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் ஏகே62 படத்தில் நடிக்கவுள்ளார். இவர் சபரிமலைக்கு யாத்திரை செய்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன்
Published on

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'துணிவு' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

விக்னேஷ் சிவன்

இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் சபரிமலைக்கு யாத்திரை சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோவை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் இயக்குனர் எச். வினோத் சபரிமலையில் சாமி தரிசனம் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com