search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருட்டு வழக்கு"

    • ஆட்டோவை திருட முயன்ற வழக்கில் யுவராஜ் என்ற டேனியை போலீசார் கைது செய்தனர்.
    • திருவள்ளூர் முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் செய்தனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பாகல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்(வயது36). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டு வாசலில் ஆட்டோவை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். அப்பொழுது நாய் கத்தியதால் வெளியே வந்து பார்த்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த ஆட்டோவை தள்ளிக் கொண்டு சென்றதைப் பார்த்து திருடன்! திருடன்! என்று கூச்சலிட்டார். இதனால் அந்த மர்ம நபர் ஆட்டோவை நடுரோட்டில் விட்டுவிட்டு தப்பி சென்றார். இந்த சம்பவம் குறித்து குறித்து வினோத் வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் அந்த நபரை தேடி வந்தனர்.

    இந்நிலையில், ஆட்டோவை திருட வந்தவர் மாகரல் கிராமம், எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்ற டேனி(வயது28) என்பது தெரியவந்தது. எனவே, போலீசார் அந்த வாலிபரை கைது செய்து வெங்கல் காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில் யுவராஜ் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 24 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. எனவே,அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் செய்தனர்.

    நேற்று இரவு மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் குற்றவாளியை போலீசார் புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர். சிறைச்சாலை அருகே சென்றபோது யுவராஜ் தான் இரண்டு உடைந்த பிளேடுகளை விழுங்கி விட்டதாக போலீசாரிடம் கூறினார். இதனால் போலீசார் உடனடியாக அவரை சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் ஜோதி மாரியப்பனை போலீசார் கைது செய்தனர்.
    • தப்பிக்க முயன்ற கைதியை சுற்றி வளைத்து பிடித்த போலீசார் சிறைக்கு கொண்டு சென்றனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூரை சேர்ந்தவர் பொன்னுச்சாமி பாண்டியன். இவரது மகன் கார்த்திக். இவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருவள்ளுவர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார்.

    சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்து அவர் டவுன் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மோட்டார் சைக்கிளை திருடியதாக ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ஜோதி மாரியப்பனை கைது செய்தனர்.

    பின்னர் அவரை சங்கரன்கோவில் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது அவர் அங்கிருந்த மின்விளக்கை உடைத்து விட்டு அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றதாக கூறப்படுகிறது. உடனே அங்கு நின்று கொண்டிருந்த போலீசார், ஜோதி மாரியப்பனை சுற்றி வளைத்து பிடித்தனர். இதைத்தொடர்ந்து அவர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    • திருட்டு வழக்கில் தொடர்புடைய 2 பேர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
    • மேற்கண்ட தகவலை மதுரை தெற்குவாசல் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜக்குபாய் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை கீழவெளி வீதி, சுங்கம் பள்ளி வாசல், பதிமுத்து இல்லத்தை சேர்ந்தவர் அப்துல்ஹமீது. இவரது மகன் சம்சுதீன் (வயது30). இவர் 2003-ம் ஆண்டு கீழவாசல் பஸ் நிறுத்தம் முன்பு 4 ½ பவுன் நகை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.

    அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார். பல இடங்களில் தேடி பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    மேலும் கோர்ட்டில் ஆஜராகாததால் சம்சுதீனை மதுரை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர், தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளார். இந்த வழக்கில் வருகிற 12-ந் தேதி சம்சுதீன் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    மற்றொரு வழக்கு

    திருப்பூர் முருகப்பாளையபுரம், குமார் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் ஸ்டீபன் (37). இவர் 2008-ம் ஆண்டு மதுரை தெற்காவணி மூல வீதி எம்.எஸ். தங்க மாளிகை நகை கடை முன்பு நின்ற இருசக்கர வாகனத்தின் மீது வைத்திருந்த சுமார் 520 கிராம் தங்க நகைகள் கொண்ட பையை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.

    அதன்பிறகு கடந்த 10 ஆண்டுகளாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமைறைவாகி விட்டார்.பல இடங்களில் தேடி பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    மேலும் கோர்ட்டில் ஆஜராகாததால் ஸ்டீபனை மதுரை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர், தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளார். இந்த வழக்கில் வருகிற 12-ந் தேதி ஸ்டீபன் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    மேற்கண்ட தகவலை மதுரை தெற்குவாசல் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜக்குபாய் தெரிவித்துள்ளார்.

    • கடந்த பிப்ரவரி 27-ம் தேதி வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை திருடு போனது.
    • அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    பல்லடம் :

    பொங்கலூர் எஸ். ஏ. பி ஸ்டார் ரெசிடென்சி பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன்(வயது 60) என்பவரது வீட்டில் கடந்த பிப்ரவரி 27-ம் தேதி வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை திருடு போனது. அதுபோல் கொடுவாய், வெள்ளியம்பாளையத்தைச் சேர்ந்த அருணகிரி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து இரண்டேகால் பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போனது. மேலும் பொங்கலூர் ஏ.எல்.ஆர் லே-அவுட் பகுதியைச் சேர்ந்த கௌதம் என்பவரது வீட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ந் தேதி வீட்டின் பூட்டை உடைத்து ஐந்தரை பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.90 ஆயிரம் திருடு போனது.

    அதுபோல் ஆண்டிபாளையத்தை சேர்ந்த தங்கவேல் என்பவர் மொபட்டில் சென்று கொண்டிருந்தபோது கத்தியை காட்டி மிரட்டி மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் அவினாசி பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசனுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் இந்த திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட கோவை வெள்ளமடை, வையம்பாளையத்தை சேர்ந்த நாச்சிமுத்து என்பவரது மகன் பால்கார செந்தில் (52), திருப்பூர், சந்திராபுரம் பகுதியைச் சேர்ந்த சென்னியப்பன் என்பவரது மகன் சுரேந்திரன் (38) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

    அது போல் இந்த திருட்டுச் சம்பவத்தில் நகைகளை வாங்கிய கோவை பிரபு நகரை சேர்ந்த பழனியப்பன் என்பவரது மகன் செந்தில்குமார் (49) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 10.50 தங்க நகைகள் மற்றும் மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்றத்தில் 3 பேரையும் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். மேலும் திருட்டுக்கு பயன்படுத்திய பால்கார செந்திலின் காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • சொரத்தூர் பிரிவு ரோடு அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரு சிலர் நடமாடுவதாக துறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீசார் அவர்களை துரத்தி சென்று பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    திருச்சி

    திருச்சி மாவட்டம் துறையூர் பைபாஸ் சாலையில் உள்ள சொரத்தூர் பிரிவு ரோடு அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரு சிலர் நடமாடுவதாக துறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து போலீசார் அங்கு சென்ற போது, 3 பேர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை துரத்தி சென்று பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர்கள் துறையூர் விநாயகர் தெருவை சேர்ந்த சரனிஷ் (22), போண்டா கார்த்திக் (எ) கார்த்திக் (20), செங்காட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த பரத் (24) என்பதும், 3 பேரும் சேர்ந்து துறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டாத்தூர், உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மங்கப்பட்டி மற்றும் எரகுடி ஆகிய பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு,திருடிய நகைகளை திருச்சி செங்குளம் காலனியை சேர்ந்த மூர்த்தி (36) என்பவரிடம் கொடுத்து வைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

    இதனையடுத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சரனிஷ், பரத், கார்த்திக் மற்றும் திருட்டு நகைகளை விற்க உதவிய மூர்த்தி உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்த துறையூர் போலீசார், அவர்களிடம் இருந்து சுமார் 20 பவுன் எடையுள்ள தங்க நகைகளை மீட்டனர்.

    மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ஆரல்வாய்மொழி பகுதியில் நடந்த மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் அரவிந்துக்கு தொடர்பு உள்ளதாக போலீசார் அவரை தேடி வந்துள்ளனர்.
    • கடந்த 5 நாட்களுக்கு முன் வெளியே சென்ற அரவிந்த் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் போலீசாருக்கு அங்குள்ள கிளாக்குளம் குளத்துக்கரையில் வாலிபர் ஒருவர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த வாலிபர் உடலை மீட்டு யார் அவர்? எந்த ஊரைச் சார்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    மேலும் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதால் அவர் இறந்து 4 அல்லது 5 நாட்கள் ஆகி இருக்கலாம் என்றும் தெரியவந்தது. இதன் பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில் இறந்து கிடந்த வாலிபர் கூடங்குளம் அருகே உள்ள சவுந்தரலிங்கபுரத்தை சேர்ந்த அரவிந்த் (வயது 29) என்பதும், அவருக்கு 2 வருடங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது என்பதும் தெரிய வந்தது. அரவிந்த் டிரைவர் வேலை பார்த்து வந்துள்ளார்.

    ஆரல்வாய்மொழி பகுதியில் நடந்த மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் அரவிந்துக்கு தொடர்பு உள்ளதாக போலீசார் அவரை தேடி வந்துள்ளனர். இதனால் போலீசார் எப்படியாவது தன்னை பிடித்து விடுவார்கள் என்ற பயத்தில் அரவிந்த் தலைமறைவாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன் வெளியே சென்ற அரவிந்த் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

    இந்நிலையில்தான் அவர் குளத்துக்கரையில் உடல் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். எனவே அவர் போலீசாருக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

    ×