search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் நிறுவனம்"

    • குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
    • சேவை குறைபாடு எதிரொலி

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் புல்லுவிளையை சேர்ந்தவர் செல்வகீதா. இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மாதந்தோறும் ரூ.1000 வீதம் 64 மாதங்கள் கட்டினால் முடிவில் ரூ.94 ஆயிரம் கிடைக்கும் என்ற திட்டத்தில் சேர்ந்திருந்தார்.

    அவர் தவணை தொகையை முழுவதும் செலுத்தி விட்டு முதிர்வு தொகையான ரூ.94 ஆயிரத்தை நிறுவனத்திடம் கேட்டார். உடனடியாக அந்த நிறுவனத்தினர் ரூ.94 ஆயிரத்திற்கு காசோலை வழங்கி உள்ளனர். ஆனால் அந்த நிறுவனத்தின் வங்கி கணக்கு செயல்பாட்டில் இல்லாததால் இந்த காசோலை மூலம் அவரால் பணம் பெற முடியவில்லை.

    இதனால் பாதிப்படைந்த செல்வகீதா வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எனினும் முறையான உரிய பதில் கிடைக்காததால் அவர் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நஷ்ட ஈடாக ரூ.10 ஆயிரம், வழக்கு செலவு ரூ.5 ஆயிரம் மற்றும் முதிர்வு தொகை ரூ.94 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்தை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    • நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
    • அலைக்கழித்ததால் வழக்கு தொடர்ந்த நுகர்வோர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் குலசேக ரன்புதூர் பகுதியைச் சேர்ந்த வர் பாலமுருகன். இவர் தோவாளையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நகை அடகு வைத்து கடன் வாங்கி இருந்தார்.

    இந்த நகைைய பாலமுருக னுக்கு தெரியாமல் நிதி நிறுவனம் ஏலத்திற்கு விட முயன்றதாக கூறப்படுகிறது. இது பற்றி தெரியவந்ததும் பாலமுருகன் நகையை திருப்ப பணத்துடன் சென்றார்.

    அப்போது அவரை அலைக்கழித்ததுடன், பணம் செலுத்திய நாளில் இருந்து 20 நாட்கள் கழித்து தான் நகையை திருப்பி தரமுடியும் என நிதி நிறுவனம் கூறிய தாக தெரிகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பாலமுருகன், நிதி நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீசு அனுப்பி உள்ளார். அதன்பிறகும் உதிய பதில் கிடைக்காததால், கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், பாலமுருகன் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பி னர் சங்கர் ஆகியோர் விசாரித்தனர். தொடர்ந்து தனியார் நிதி நிறுவனத்தின் சேவை குறைபாட்டை சுட்டிக் காட்டி பாலமுருக னுக்கு ரூ.1500 நஷ்ட ஈடு மற்றும் வழக்குச் செலவு ரூ. 5 ஆயிரம் என மொத்தம் ரூ. 20 ஆயிரம் வழங்க உத்தர விட்டனர்.

    • விகான் டைரக்ட் செல்லிங் இந்தியா என்கிற தனியார் நிறுவனத்தின் வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளனர்.
    • சோதனையில் சுமார் 400 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    பொதுமக்களிடம் இருந்து பல்வேறு வழிகளில் முதலீடுகளை பெற்று மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் மும்பை அமலாக்கத்துறையினர் விகான் டைரக்ட் செல்லிங் இந்தியா என்கிற தனியார் நிறுவனம் மற்றும் அதனுடன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர்.

    சென்னை, மும்பை, பெங்களூருவில் உள்ள இந்த நிறுவனங்களில் நடந்த சோதனையில் சுமார் 400 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம் 2 ஆயிரம் கோடி அளவுக்கு பண பரிமாற்றத்தத்தில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து அந்த நிறுவனத்துக்கு சொந்தமான 36 வங்கி கணக்குகளை அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் நிறுவனங்களில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் செய்யலாம்.
    • பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பொருளா தார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் இளவேனில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம், பரமக்குடி பகுதியில் புல்லியன் பின் டெக் நிறுவனத்தின் சார்பில் சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் வசூல் செய்துள்ளனர். இந்த நிலையில் பணம் பெற்றவர்களிடம் முதிர்வு தொகையை வழங்காமல் ஏமாற்றி வருவதாக புகார் எழுந்துள்ளது.

    கற்பகவல்லி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நிதி நிறுவனத்தின் மீது பொருளாதார குற்றப்பிரிவில் ஆனந்தன், நீதிமணி, மேனகா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.

    அதே போல் ராமநாதபுரம் மாவட்டம், முத்துபுரம், அக்ரஹாரம் என்ற முகவரியில் செயல்பட்டு வந்த வி.கே.எல்.டயரீஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த வாசுகிநாதன், கார்த்திக் கணேஷ், காஜா முகைதீன் ஆகிய நபர்கள் சேர்ந்து பரமக்குடி மற்றும் அந்தப்பகுதியைச் சுற்றி பொதுமக்களை சிறுசேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய வைத்து முதிர்வு காலம் முடிந்த நிலையில் அதற்கான முதிர்வுத்தொகையை குறிப்பிட்ட தேதியில் வழங்காமல் மோசடி செய்து ஏமாற்றி வருவதாக சண்முகசுந்தரம், என்பவர் புகார் செய்துள்ளார்.

    எனவே ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் இந்த நிறுவனத்தின் சிறுசேமிப்பு திட்டத்தில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டு இருந்தால் அவர்கள் உரிய அசல் ஆவணங்களுடன் ராமநாதபுரம் நேருநகர் பகுதியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் தங்கள் புகார்களை அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் ஆய்வு செய்ய வந்தபோது செல்போன் டவர் அந்த இடத்தில் இல்லை என்பது தெரியவந்தது.
    • செல்போன் டவர் அமைந்திருந்த இடத்தில் கான்கிரீட் தூண்கள் மட்டுமே காட்சி அளித்துள்ளது. இதை கண்டு திடுக்கிட்ட அவர்கள் தனியார் நிறுவன மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    விளாத்திகுளம்:

    சினிமா ஒன்றில், 'வெட்டிவெச்சிருந்த கிணத்தை காணோம்' என்று வடிவேல் போலீசில் பரப்பரப்பான புகார் கொடுப்பதுபோல, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் போலீஸ் நிலையத்தில் செல்போன் டவர் காணோம் என்று ஒரு புகார் வந்துள்ளது.

    விளாத்திகுளம் அம்பாள் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). இவருக்கு, காமராஜ் நகர் ரோஸ்லின் மருத்துவமனைக்கு பின்புறம் சொந்தமாக இடம் இருக்கிறது. இந்த நிலத்தில் கடந்த 2003-ம் ஆண்டு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் சார்பில் செல்போன் டவர் ஒன்று அமைக்கப்பட்டது. இதற்காக 20 வருடங்கள் ஒப்பந்தம் போடப்பட்டு, ரூ.20 லட்சம் அந்நிறுவனம் சார்பில் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் ஆய்வு செய்ய வந்தபோது செல்போன் டவர் அந்த இடத்தில் இல்லை என்பது தெரியவந்தது. செல்போன் டவர் அமைந்திருந்த இடத்தில் கான்கிரீட் தூண்கள் மட்டுமே காட்சி அளித்துள்ளது. இதை கண்டு திடுக்கிட்ட அவர்கள் தனியார் நிறுவன மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் நில உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் டவரின் மதிப்பு ரூ.21 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

    • புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
    • இவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிபுலியூர் மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 19). இவர் புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று வழக்கம் போல் வேலைக்கு செல்வதாக சென்றவர், மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த இவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளார்.
    • மேற்கண்ட தகவலை மதுரை பொருளாதார குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

    மதுரை

    மதுரை பெத்தானியாபுரம் சின்னசாமி பிள்ளை தெருவை சேர்ந்தவர்கள் தமிழ்மாறன், நிறைமாறன், வேல்முருகன். இவர்கள் 3 பேரும் சேர்ந்து தனியார் நிதி நிறுவனத்தை ஆரம்பித்தார்கள். இதில் பல கவர்ச்சிகரமான திட்டத்தினை தொடங்கி விளம்பரம் செய்தார்கள். மேற்படி திட்டத்தில் முதலீடு செய்தால் அதிகம் லாபம் ஈட்டலாம் என அந்த நிதி நிறுவனம் தெரிவித்தது.

    இதை நம்பி பொதுமக்கள் பலர் லட்சக்கணக்கான ரூபாயை அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இந்த நிலையில் பல பேரின் தவணை முதிர்வு காலம் முடிந்த நிலையிலும் அந்த நிதி நிறுவனம் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்தது.

    இதுகுறித்து நிதி நிறுவனத்திடம் கேட்டபோது உரிய பதிலில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதலீட்டாளர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் மேற்கண்ட நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்கள் தங்கள் சம்பந்தப்பட்ட அசல் ஆவணங்களுடன் மதுரை தபால் தந்தி நகர் விரிவாக்கம், பார்க் டவுன் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி புகார் மனு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது மனுதாரர்கள் அளிக்கும் புகாரின் பேரில் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேற்கண்ட தகவலை மதுரை பொருளாதார குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

    • காமில் சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட நகரங்களிலிருந்து 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்றன.
    • முகாமில் 2,960 போ் பல்வேறு பணிகளுக்கு தோ்வு செய்யப்பட்டனா். இவா்களில் 2,401 பேருக்குப் பணி நியமன ஆணைகள் உடனடியாக வழங்கப்பட்டன.

    காங்கயம்:

    திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியன சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் காங்கயத்தில் நடைபெற்றது. இம்முகாமில் சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட நகரங்களிலிருந்து 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்றன. படித்த இளைஞா்கள், இளம்பெண்கள் என 11,306 போ் கலந்து கொண்டனா்.

    முகாமில் 2,960 போ் பல்வேறு பணிகளுக்கு தோ்வு செய்யப்பட்டனா். இவா்களில் 2,401 பேருக்குப் பணி நியமன ஆணைகள் உடனடியாக வழங்கப்பட்டன. இரண்டாம் கட்டத்தோ்வுக்கு 559 போ் தகுதி பெற்றனா். திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் 260 நபா்கள் தோ்வு பெற்றனா். வெளிநாடுகளில் பணிபுரிய 187 போ் தோ்வு பெற்றனா்.

    வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு பெற்றவா்களுக்குப் பணி நியமன ஆணைகளை வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வழங்கினா்.

    நிகழ்ச்சியில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் பேசியதாவது:-

    படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவோம் என்ற உறுதிமொழியோடுதான் இந்த அரசு பொறுப்பேற்றுள்ளது. அரசுத் துறையின் சாா்பில் பலருக்கு வேலை வாய்ப்பை வழங்கி வந்தாலும், தனியாா் துறையிலும் வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும் என்பதற்காக தமிழகத்தில் கடந்த ஓராண்டில் 62 இடங்களில் தனியாா் துறையினா் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாமை நடத்தி 90,643 இளைஞா்கள், இளம்பெண்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தந்துள்ளோம்.

    படித்த இளைஞா்களுக்காக தனியாா் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, திறன் பயிற்சி அளித்து, அந்த நிறுவனமே அவா்களுக்கு வேலை தரக்கூடிய திட்டத்தையும் அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த முகாமில் வேலை கிடைக்காத இளைஞா்களுக்கு அடுத்த முகாமில் வேலைவாய்ப்பை உருவாக்கி, வேலை இல்லை என்ற நிலை தமிழ்நாட்டில் இல்லை என்ற உன்னத நிலையை உருவாக்குவோம் என்றாா்.

    நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் கொ.வீரராகவ ராவ், மாவட்ட கலெக்டர் வினீத், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மண்டல இணை இயக்குநா் ஞானசேகரன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலா் சுரேஷ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    ×