search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "investing"

    • தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளார்.
    • மேற்கண்ட தகவலை மதுரை பொருளாதார குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

    மதுரை

    மதுரை பெத்தானியாபுரம் சின்னசாமி பிள்ளை தெருவை சேர்ந்தவர்கள் தமிழ்மாறன், நிறைமாறன், வேல்முருகன். இவர்கள் 3 பேரும் சேர்ந்து தனியார் நிதி நிறுவனத்தை ஆரம்பித்தார்கள். இதில் பல கவர்ச்சிகரமான திட்டத்தினை தொடங்கி விளம்பரம் செய்தார்கள். மேற்படி திட்டத்தில் முதலீடு செய்தால் அதிகம் லாபம் ஈட்டலாம் என அந்த நிதி நிறுவனம் தெரிவித்தது.

    இதை நம்பி பொதுமக்கள் பலர் லட்சக்கணக்கான ரூபாயை அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இந்த நிலையில் பல பேரின் தவணை முதிர்வு காலம் முடிந்த நிலையிலும் அந்த நிதி நிறுவனம் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்தது.

    இதுகுறித்து நிதி நிறுவனத்திடம் கேட்டபோது உரிய பதிலில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதலீட்டாளர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் மேற்கண்ட நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்கள் தங்கள் சம்பந்தப்பட்ட அசல் ஆவணங்களுடன் மதுரை தபால் தந்தி நகர் விரிவாக்கம், பார்க் டவுன் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி புகார் மனு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது மனுதாரர்கள் அளிக்கும் புகாரின் பேரில் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேற்கண்ட தகவலை மதுரை பொருளாதார குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

    ×