search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி காவத்துறை"

    • டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தில் வைத்து அவரின் தனிச் செயலாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி மாநிலங்களவை பெண் எம்.பி ஸ்வாதி மலிவால் குற்றம் சாட்டியிருந்தார்
    • இந்த விவகாரம் குறித்து மவுனம் காத்து வந்த ஆம் ஆத்மி கட்சி தற்போது ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்டது உண்மைதான் என விளக்கமளித்துள்ளது

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தில் வைத்து அவரின் தனிச் செயலாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி மாநிலங்களவை பெண் எம்.பி ஸ்வாதி மலிவால் குற்றம் சாட்டியிருந்தார். இதுதொடர்பாக நேற்று (மே 13) ஸ்வாதியிடம் இருந்து வந்த போன் அழைப்புகளை அடுத்து சம்பவ கெஜ்ரிவால் இல்லத்துக்கு விரைந்த டெல்லி காவல்துறை 2 வது நாளாக இன்று (மே 14) விசாரணை நடத்தி வருகிறது.

    2 நாட்களுக்குள் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று டெல்லி காவல் துறையை மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள டெல்லி பாஜக, ஆம் ஆதமியினரை கடுமையாக விமர்சித்து வருகிறது.

    இந்த விவகாரம் குறித்து மவுனம் காத்து வந்த ஆம் ஆத்மி கட்சி தற்போது ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்டது உண்மைதான் என விளக்கமளித்துள்ளது. ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் ராவத் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், கெஜ்ரிவாலின் இல்லத்தில் வைத்து ஸ்வாதி மலிவால் பிபவ் குமாரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுவது உண்மை தான் என்றும் இது மிகுந்த கண்டனத்துக்குரிய சம்பவம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்றும் அவர் தெரிவித்துள்துளார். பிபவ் குமார் மீது ஏற்கனவே இதுபோன்ற தாக்குதல் குற்றச்சாட்டுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை பெண் எம்.பி ஸ்வாதி மலிவால், அரவிந்த் கெஜ்ரிவாலின் பி.ஏ பிபவ் குமார், இன்று காலை தன்னை தாக்கியதாக போலீசிடம் முறையிட்டார்.
    • இதைத்தொடர்ந்து கெஜ்ரிவால் இல்லத்துக்கு விரைந்த காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை பெண் எம்.பி ஸ்வாதி மலிவால் அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் (பி.ஏ) பிபவ் குமார், இன்று காலை கெஜ்ரிவாலின் இல்லத்தில் வைத்து தன்னை தாக்கியதாக டெல்லி போலீசிடம் முறையிட்டார்.

    இதைத்தொடர்ந்து கெஜ்ரிவால் இல்லத்துக்கு விரைந்த காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து முதற்கட்ட அறிக்கை வெளியிட்டுள்ள டெல்லி காவத்துறை, இன்று காலை 9.34 மணியளவில் கெஜ்ரிவாலின் இல்லத்திலிருந்து தங்களுக்கு 2 முறை போன் அழைப்பு வந்ததாகவும் ஆனால், சம்பவ இடத்துக்கு சென்றபோது அங்கு ஸ்வாதி இல்லை என்றும் கூறியுள்ளது. மேலும் இதுதொடர்பாக தங்களுக்கு இன்னும் எழுத்துபூர்வமான எங்த புகாரும் வரவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த புகார் குறித்து விசாரித்து இன்னும் 3 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

    இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விமர்சித்துள்ள டெல்லி பாஜக, கெஜ்ரிவால் சிறையில் இருந்த போது நாட்டிலேயே இல்லாத ஸ்வாதி மீது தற்போது நடந்துள்ள தாக்குதல் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் ஆம் ஆத்மி கட்சி இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×