search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஜிபி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டி.ஜி.பி. சைக்கிள் வாங்கி தருவார் என்று 3 வருடமாக உவேஷ்அல்தாப் காத்திருந்திருந்து உள்ளான்.
    • சிறுவனுக்கு சைக்கிள் வாங்கி கொடுக்கும் படி அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டு உள்ளார்.

    கன்னியாகுமரி:

    நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பகுதியை சேர்ந்தவர் ரஹ்மத்மீரா. இவர் மணிமுத்தாறு போலீஸ் பட்டாலியன் வளாகத்தில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த சில ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.

    இவர் கொரானா கால கட்டத்தில் தனது மகன் உவேஷ் அல்தாப் (வயது 13) மற்றும் மகளுக்கு ஆன்லைன் வகுப்பு படிக்க செல்போன் வாங்கி கொடுத்திருக்கிறார். அவர்கள், அந்த செல்போனில் யூடியூப். மூலம் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபுவின் மோட்டிவேஷனல் பேச்சுகளை பார்த்திருக்கின்றனர்.

    இதுகுறித்து உவேஷ் அல்தாப், தனது தாயாரிடம் கூறுகையில், குழந்தைகள் பப்ஜி கேம் விளையாட கூடாது. அப்படி விளையாடாமல் இருந்தால் சைக்கிள் வாங்கித்தருவேன் என்று ஒரு வீடியோவில் டி.ஜி.பி. குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளான். மேலும் டி.ஜி.பி. சைக்கிள் வாங்கி தருவார் என்று 3 வருடமாக உவேஷ்அல்தாப் காத்திருந்திருந்து உள்ளான்.

    இந்த நிலையில் கடந்த வாரம் மணிமுத்தாறு ஆய்வுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு வந்திருந்தார். அப்போது அவரை சந்தித்த உவேஷ் அல்தாப், எனக்கு எப்போது சைக்கிள் வாங்கி தருவீர்கள் என்று கேட்டு உள்ளார். இதனை தொடர்ந்து அந்த சிறுவனுக்கு சைக்கிள் வாங்கி கொடுக்கும் படி அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டு உள்ளார்.

    இதை தொடர்ந்து கன்னியாகுமரியில் நடைபெற்ற விழாவில் 8-ம் வகுப்பு மாணவனான உவேஷ் அல்தாப்புக்கு சென்னை பெருநகர போலீஸ் இணை ஆணையர் சாமுண்டீஸ்வரி, குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் சைக்கிள் பரிசளித்தனர்.

    • சைபர் பிரிவு காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கீழ் சிறப்பு குழு இயங்கும்.
    • வதந்தி பரப்புவோர் சமூக ஊடக கணக்குகளை முடக்கி நடவடிக்கை.

    தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தமிழகத்தில் யூடியூப், டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் தவறான தகவல்களையும், பொய்யான செய்திகளையும், வதந்திகளையும் பரப்பி பொதுமக்களிடையே குழப்பங்களையும், கலவரங்களையும் ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் காவல்துறைக்கு அவப்பெயரையும் ஏற்படுத்தும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.

    குறிப்பாக இணைய வழியில் பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் விற்பனை, பண மோசடி மற்றும் சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை எளிதில் கண்டறிவதற்காகவும் இந்த குழு பயன்படும். இதற்காக சென்னை உட்பட 9 மாநகரங்களிலும் தமிழகம் முழுவதும் 37 மாவட்டங்களில் 203 அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொண்ட சமூக ஊடக குழுக்கள் என்ற தலைப்பில் சிறப்பு குழுவினை தமிழக காவல்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவில் கணினி திறன் மற்றும் சைபர் தடய அறிவியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற காவலர்கள் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். இந்தக் குழு சைபர் பிரிவு காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கீழ் இயங்கும். 

    குறிப்பாக பொய்யான வதந்திகளை சமூக ஊடகங்களில் பரப்பும் நபர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அந்தப் பதிவினை நீக்குவது மட்டுமல்லாமல், அவர்களின் சமூக ஊடக கணக்குகளை முடக்கவும் கணினி சார் குற்ற வழக்குகள் பதிவு செய்யும் வகையில் இந்த குழு செயல்படும். சாதி மத அரசியல் மோதல்களை முழுமையாக தடுத்திடவும் வகையிலும் இந்த குழு செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கலவரத்தை கட்டுப்படுத்தும் வாகனங்களை பராமரிக்க வேண்டும்.
    • போராட்டங்களை ஒளிப்பதிவு செய்ய காவலர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

    தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு, அனைத்து மாவட்ட காவல்துறை சூப்பிரண்டுகள், கமிஷனர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    மாவட்டம் மற்றும் மாநகர ஆயுதப்படையில் உள்ள காவலர்கள், சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணிபுரியும் இளம் காவலர்களுக்கும் ஒவ்வொரு வாரமும் இரண்டு அல்லது மூன்று முறை கவாத்துப் பயிற்சி வழங்க வேண்டும். இப்பயிற்சியை ஆயுதப் படையில் உள்ள உயர் அதிகாரிகள் கண்காணிக்கவும், கலந்து கொள்ளவும் அவர்களை அறிவுறுத்த வேண்டும்.

    ஆயுதப்படையில் உள்ள காவல் துணை சூப்பிரண்டுகள் மற்றும் கமிஷனர்களுக்கு கலவர சம்பவங்களில் படையை வழி நடத்துவதற்கு அவ்வப்போது உரிய பயிற்சி அளிக்க வேண்டும். ஆயுதப்படையில் கேடயம், லத்தி, ரப்பர் தோட்டாக்கள், பிளாஸ்டிக் தோட்டாக்கள், பம்ப் ஆக்சன் கன், கேஸ் கன், கேஸ் செல்கள் மற்றும் இதர ஆயுதங்கள் போதுமான அளவில் உள்ளதா? சரியாக வேலை செய்கிறதா? என அவ்வப்போது தணிக்கை செய்வதுடன், எவ்வாறு கையாள வேண்டும்? என கவாத்து பயிற்சியின்போது உரிய பயிற்சி வழங்க வேண்டும்.

    கலவரத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் வஜ்ரா, வருண் மற்றும் இதர வாகனங்களை முறையாக பராமரித்து தயார் நிலையில் வைப்பதற்கு அறிவுறுத்தப்பட வேண்டும். ஒலி பெருக்கிகள் மூலம் போராட்டக்காரர்களை கலைப்பதற்கும், போராட்டம் நடக்கும்போது அதனை ஒளிப்பதிவு செய்யவும் காவலர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

    நகர மற்றும் மாவட்ட ஆயுதப்படை காவலர்களை தயார் நிலையில் வைத்து, முக்கிய நிகழ்வுகள் மற்றும் அவசரகால பணிகளுக்கு உட்படுத்த அனைத்து போலீஸ் கமிஷனர்கள் மற்றும் சூப்பிரண்டுகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • ஆர்டர்லியை நல்ல விதமாக சில அதிகாரிகள் பயன்படுத்துவது இல்லை.
    • ஆர்டர்லிகளும் வேறு ஆதாயம் கிடைக்கும் என்பதால், புகார் தெரிவிப்பதில்லை.

    போலீஸ் உயர் அதிகாரிகளின் வீட்டில் ஆர்டர்லியாக வேலை செய்து வரும் போலீஸ்காரர்களை திரும்பப் பெறும் நடவடிக்கை தொடர்பான வழக்கு நேற்று உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, போலீஸ் தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.குமரேசன் ஆஜராகி, ஆர்டர்லி விவகாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, காவல்துறை பணியை குறைத்து மதிப்பிடவில்லை. ஆர்டர்லியை நல்ல விதமாக சில அதிகாரிகள் பயன்படுத்துவது இல்லை. ஆர்டர்லிகளும் தங்களுக்கு வேறு ஆதாயம் கிடைக்கும் என்பதால், இதுகுறித்து புகார் சொல்வதில்லை. எல்லாருக்கும் ஒரு உதவியாளர் தேவைதான். அதற்காக பொதுமக்கள் பணம் வீணடிக்கக்கூடாது'என்று கூறினார்.

    இதையடுத்து பேசிய கூடுதல் அட்வகேட் ஜெனரல், 'பெரும்பாலான ஆர்டர்லிகளை திரும்ப பெற்றுள்ளோம். மாற்று ஏற்பாடு செய்தவுடன் மற்றவர்களும் திரும்ப பெறப்படுவார்கள் என்று கூறினார். அப்போது பேசிய நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் காவல்துறை பணி தவிர தனிப்பட்ட பணிகளுக்காக ஆர்டர்லியை பயன்படுத்த மாட்டோம் என அனைத்து ஐ.பி.எஸ். அதிகாரிகளும் உத்தரவாதம் அளித்துள்ளனர்.

    அதனை டி.ஜி.பி. (சைலேந்திரபாபு) அறிக்கையில் குறிப்பிட்டு அனைத்து அதிகாரிகள் சார்பாக உத்தரவாதம் அளித்துள்ளார். ஆர்டர்லி முறையை ஒழிக்க அவர் எடுத்துவரும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது, இதுதொடர்பான நடவடிக்கை திருப்தி அளிக்கிறது.

    ஒரு அதிகாரி 5 பயிற்சி பெற்ற போலீஸ்காரர்களை ஆர்டர்லிகளாக பயன்படுத்தும்போது, மாதம் ரூ.2.50 லட்சம் அரசுக்கு செலவு ஆகுகிறது. உயர் அதிகாரிகளுக்கு தேவைப்பட்டால் இருப்பிட உதவியாளர்களை குறைந்த ஊதியத்துக்கு நியமிக்கலாம் என்று கூறினார். தொடர்ந்து இந்த வழக்கில் அடுத்த வாரம் இறுதி உத்தரவு பிறப்பிப்பதாக கூறி 23-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டி.ஜி.பி.யின் சீருடை தோள் பட்டையில் ஐ.பி.எஸ். என்ற எழுத்து பொறிக்கப்பட்டிருக்கும்.
    • கூடுதல் டி.ஜி.பி. சீருடையிலும் இந்த அடையாளங்கள் உள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் காவலர் முதல் டி.ஜி.பி. வரை போலீசாருக்கு ஒரே மாதிரியான காக்கி சீருடைகள் வழங்கப்பட்டு உள்ள போதிலும் அவரவர் அதிகாரத்துக்கு ஏற்ப சீருடையில் சின்னங்கள் இடம் பெற்றிருக்கும்.

    டி.ஜி.பி.யின் சீருடை தோள் பட்டையில் ஐ.பி.எஸ். என்ற எழுத்து பொறிக்கப்பட்டிருக்கும். அசோக சின்னம், வாள், சிறியதடி ஆகியவையும் இடம் பெற்றிருக்கும்.

    தொப்பியில் வெள்ளி ஜரிகை, ஆலிவ் இலை வடிவிலான ஐ.பி.எஸ். சின்னம் ஆகியவையும் இடம் பெற்றிருக்கும். இதே போன்று கூடுதல் டி.ஜி.பி. சீருடையிலும் இந்த அடையாளங்கள் உள்ளன.

    தமிழக காவல் துறை இன்ஸ்பெக்டரின் சீருடையில் 3 ஸ்டார்களும், சப்-இன்ஸ்பெக்டர் சீருடையில் 2 ஸ்டார்களும் இடம் பெற்றிருக்கும். ஏட்டுவின் சீருடையில் 3 பட்டைகள் போடப்பட்டிருக்கும்.

    காவலர்கள் எந்த வகை பிரிவில் பணியாற்றுகிறார்கள் என்பதை குறிக்கும் வகையில் இதுபோன்ற அடையாளங்கள் இடம் பெற்றிருந்த போதிலும் தமிழக காவல் துறை என்பதை குறிப்பிட்டு எந்த சின்னமும் இருக்காது.

    இந்த நிலையில் "தமிழ்நாடு போலீஸ்" என்கிற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட புதிய சீருடை சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது. இது அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    இந்த புதிய சின்னத்தை காவலர் முதல் டி.ஜி.பி. வரை அனைவரும் அணிந்து கொள்வார்கள். கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆலோசனையின் முடிவிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    புதிய போலீஸ் சீருடை சின்னத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம், அசோக சின்னம், தேசிய கொடி ஆகியவை இடம் பெற்றுள்ளன. அதனுடன் காவல் என்ற வார்த்தைகள் தமிழில் இடம் பெற்றுள்ளது.

    தமிழகத்தில் உள்ள சட்டம்-ஒழுங்கு போலீசார், ரெயில்வே போலீசார், மகளிர் போலீசார், போக்கு வரத்து போலீசார் என சுமார் 1 லட்சத்து 17 ஆயிரம் காவலர்கள் விரைவில் தங்களது சீருடையில் புதிய சின்னத்தை வைத்து தைத்து பயன்படுத்திக் கொள்ள உள்ளனர்.

    இதற்கான தொடக்க விழா விரைவில் நடைபெற உள்ளது. இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.

    • இதுவரை கலவரத்தில் ஈடுபட்ட 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • பொதுமக்கள் எந்த வன்முறையிலும் ஈடுபட வேண்டாம், வதந்திகளை நம்ப வேண்டாம்.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவியின் உயிரிழப்பை கண்டித்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதனால் கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், நயினார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கலவரக்காரர்களால் சூறையாடப்பட்ட தனியார் பள்ளி வளாகத்தை தமிழக உள்துறை செயலாளர் பனீந்தர் ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை அவர்கள் சந்தித்தனர்.

    அப்போது பேசிய பனீந்தர் ரெட்டி, உயிரிழந்த மாணவியின் பெற்றோர்களுக்கு அரசு சார்பில் ஆழ்ந்த அனுதாபம் தெரிவிப்பதாக கூறினார். இந்த நிகழ்வில் அனைத்து சந்தேகங்களும் கலையப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றார்.

    அனைத்து கோணங்களிலும் சரியாக விசாரணை செய்து முடிவு எடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது, பொதுமக்கள் எந்த வன்முறையிலும் ஈடுபட வேண்டாம், வதந்திகளை நம்ப வேண்டாம், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளதாவது:

    மாணவி உயிரிழப்பு தொடர்பாக உடனடியாக வழக்குப் பதிவு செய்து சிசிடிவி கேமிரா காட்சிகள் உதவியுடன் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் அந்த பகுதியில் டிஐஜி தலைமையில் 530 போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    கலவரம் தொடர்பாக 70 பேரை கைது செய்துள்ளனர். கலவரம் அடங்கி உள்ளது. கலவரக்காரர்கள் தாக்கியதில் டிஐஜி, எஸ்பி உள்பட 52 காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். காயம் ஏற்பட்டாலும் அவர்கள் அமைதி காத்தனர்.

    இந்த வழக்கில் பள்ளியின் தாளாளர், செயலாளர், பள்ளி முதல்வர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு மேல் விசாரணைக்காக சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ள அனைத்து சந்தேகங்களையும் குற்றப் புலனாய்வுத்துறை விசாரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி கலவரத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் காவலர்களை டிஜிபி சைலேந்திரபாபு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

    தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இருந்த 277 அரசு ஊழியர்களை காப்பாற்றவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக போலீஸ் டிஜிபி டி.கே ராஜேந்திரன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். #ThoothukudiShooting
    சென்னை:

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், தமிழக டிஜிபி டி.கே ராஜேந்திரன்பதில் இன்று பதில் தாக்கல் செய்தார். 

    அதில், துப்பாக்கிச்சூடு நடந்த அன்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கூடினர். அவர்களை கலைக்க எடுக்க முயன்ற அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. அலுவலகத்தில் இருந்த 277 ஊழியர்களை காப்பாற்றவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், ஸ்டெர்லைட் வளாக குடியிருப்பில் இருந்த 150 குடும்பங்களையும் பாதுகாக்கும் பொருட்டு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணை நியாயமான முறையில் நடக்கிறது; அதனால் சிபிஐ விசாரணை தேவையில்லை எனவும் அந்த பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
    ஸ்டெர்லைட் போராட்டத்தில் காயமடைந்துள்ளவர்கள் தூத்துக்குடி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களை போலீஸ் டி.ஜி.பி டி.கே ராஜேந்திரன் பார்வையிட்டார். #SterliteProtest
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான கடந்த 22-ம் தேதி ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

    அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது.

    இதனை அடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.  பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், காவல்துறை தலைமை இயக்குநர் (டி.ஜி.பி) டி.கே ராஜேந்திரன் இன்று தூத்துக்குடிக்கு வருகை தந்தார்.

    காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், பின்னர் அரசு பொது மருத்துவமனைக்கு சென்றார். அங்கு, சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்த அவர், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    இதனை அடுத்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

    துப்பாக்கிச்சூடு சம்பவம் துரதிர்ஷ்டவசமானது, கவலை அளிக்க கூடியது. அமைதியை நிலைநாட்ட மக்கள், வணிகர்கள் என அனைவரும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

    மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். நிலைமை சீராக சீராக போலீசாரின் எண்ணிக்கை குறைக்கப்படும்.

    இதனை அடுத்து, நான்கு மண்டல டிஐஜி, மாவட்ட எஸ்.பி ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார். போலீசாரை படிப்படியாக குறைப்பது, நள்ளிரவு முதல் இணையசேவையை மீண்டும் வழங்குவது ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
    ×