search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளக்குறிச்சி வன்முறை"

    • கள்ளக்குறிச்சி சைபர் க்ரைம் காவல்நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவை மேல் விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
    • 5 பேர் சம்பந்தப்பட்ட புலனாய்வு குழு அதிகாரிகள் முன்பு ஆஜரானார்கள். அவர்களை போலீசார் விசாரணை செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி இறப்பு தொடர்பாக உண்மைக்கு புறம்பான பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.

    இவர்கள் மீது கள்ளக்குறிச்சி சைபர் க்ரைம் காவல்நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவை மேல் விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

    இந்த வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த நவீன் குமார் (வயது28), திருப்பூர் மாவட்டம் சாமுண்டிபுரம் பகுதியைச் சேர்ந்த வடிவேல் (38), சென்னை 7 கிணறு பகுதியைச் சேர்ந்த முகமது ஷபி (32), சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (22), செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (21) ஆகிய 5 பேருக்கு குற்றவியல் நடைமுறை சட்டபடி சம்மன் அனுப்பினர்.

    அதன்படி 5 பேர் சம்பந்தப்பட்ட புலனாய்வு குழு அதிகாரிகள் முன்பு ஆஜரானார்கள். அவர்களை போலீசார் விசாரணை செய்தனர். பின்னர் அவர்களை அனுப்பி வைத்தனர்.

    • கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் சென்னை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
    • பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை ரத்து செய்யக்கோரியும் மாணவி ஸ்ரீமதியின் தாயார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

    புதுடெல்லி:

    கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கும் சென்னை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

    இதை எதிர்த்தும், பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை ரத்து செய்யக்கோரியும் மாணவி ஸ்ரீமதியின் தாயார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு வருகிற 26-ந்தேதி விசாரிக்கிறது.

    • சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார்.
    • 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை சிறை அலுவலர்கள் மூலம் அவர்களிடம் வழங்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இதைதொடர்ந்து கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் போலீஸ் வாகனங்கள் மற்றும் பள்ளியில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி தீயிட்டு கொளுத்திய வழக்கில் சின்ன சேலம் அருகே வி.மாமந்தூர் லட்சாதிபதி (வயது 34), பெரிய சிறுவத்தூர் சர்புதீன் (38), உலகங்கள் தான் கிராமத்தைச் சேர்ந்த சரண்ராஜ் (34), தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த மணி (44), ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் இவர்களின் தொடர் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து லட்சாதிபதி, சர்புதீன், சரண்ராஜ், மணி ஆகிய 4 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் உத்தரவிட்டார். அதன்படி 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை சிறை அலுவலர்கள் மூலம் அவர்களிடம் வழங்கப்பட்டது.

    • தமிழகத்திலேயே சிறைத்துறை அதிகாரிகள் தான் பயங்கர அச்சுறுத்தலோடு பணியாற்றி வருகின்றனர்.
    • போதை குற்றவாளிகள் தமிழக அரசு சார்பில் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் இன்று சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலை துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி கனியாமூர் விவகாரத்தில் பள்ளி தாளாளர் உள்ளிட்ட ஐந்து பேர் ஜாமீனில் வெளியே வந்த விவகாரம் தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து ஜாமீனை ரத்து செய்வதற்கு மேல்முறையீடு செய்யப்படும்.

    தமிழகத்திலேயே சிறைத்துறை அதிகாரிகள் தான் பயங்கர அச்சுறுத்தலோடு பணியாற்றி வருகின்றனர். குற்றம் செய்து தண்டனை பெற்றவர்கள் மட்டுமே சிறையில் உள்ளதால் அவர்கள் எதற்கும் துணிந்தவர்களாக உள்ளனர்.

    இவர்கள் சிறையில் இருந்து வெளியே ஆட்களை ஏவி விட்டு பல்வேறு குற்ற செயல்களை செய்வதற்கு தயங்குவதில்லை. மிகுந்த அச்சுறுத்தலோடு பணியாற்றி வரும் சிறைத்துறை காவலர்கள் மற்றும் அதிகாரிகளை பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    ஆறுமுகசாமி அறிக்கை குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சட்ட வல்லுனர்களின் ஆலோசனை பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களோடு ஆலோசனை பெற்று மேல் நடவடிக்கை எடுத்த பின்னர் அதன் அறிக்கை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

    தமிழகத்தில் போதை பொருட்களின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். போதைப் பொருட்களின் நடமாட்டம் குறித்து மட்டுமே அவர் கூறியுள்ளார்.

    போதை பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அவர் எதுவும் கூறவில்லை. போதை குற்றவாளிகள் தமிழக அரசு சார்பில் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பள்ளி கலவர வழக்கில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் பிரபுவை முதல் குற்றவாளியாக சேர்த்து, அவரை போலீசார் கைது செய்தனர்.
    • கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் பிரபுவை முதல் குற்றவாளியாக அறிவித்து எப்.ஐ.ஆரை திருத்தி பதிவு செய்துள்ளதாக வக்கீல் வாதிட்டார்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

    இதையடுத்து பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். அந்த போராட்டம் கலவரமாக மாறி பள்ளியை பொதுமக்களே சூறையாடினர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. போலீஸ், தீயணைப்பு வாகனங்கள், பள்ளி வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டது.

    இதுகுறித்து சின்னசேலம் போலீசார், வழக்குப்பதிவு செய்து பலரை கைது செய்தனர். இந்த வழக்கில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் பிரபுவை முதல் குற்றவாளியாக சேர்த்து, அவரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் பிரபு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    மனுதாரர் சார்பில் வக்கீல் டி.அருண் ஆஜராகி, மனுதாரர் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட செய்யவில்லை. வாட்ஸ்-அப் குரூப் நிர்வாகியும் இல்லை. வழக்குப்பதிவு செய்யும்போது, அவர் பெயரை குறிப்பிடவில்லை. பின்னர், அவரை முதல் குற்றவாளியாக அறிவித்து எப்.ஐ.ஆரை திருத்தி பதிவு செய்துள்ளனர். இந்த கலவரத்துக்கும், மனுதாரருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வாதிட்டார். இதையடுத்து, மனுதாரருக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

    • போலீஸ் அதிகாரிகள், ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகியோர் கொண்டு வந்த நீதிமன்ற உத்தரவு நகலை படித்து பார்த்தனர்.
    • போலீஸ் நிலையத்தில் கையெழுத்து பதிவேட்டில் ஆசிரியைகள் இருவரும் அதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்து போட்டனர்.

    சேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை மாதம் 13-ந் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்தார். இதையடுத்து பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது. குறிப்பாக பள்ளி மாணவிகளின் டி.சி., மதிப்பெண் சான்றிதழ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பள்ளி வாகனங்கள், காவல் துறை வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கல்வீச்சு தாக்குதலில் போலீசார் காயம் அடைந்தனர்.

    இந்தநிலையில், இறந்த மாணவி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி தலைமை ஆசிரியர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரையும் சின்னசேலம் போலீசார் கைது செய்தனர்.

    இதில், பள்ளி தாளாளர் ரவிக்குமார், தலைமை ஆசிரியர் சிவசங்கரன் ஆகியோர் சேலம் மத்திய சிறையிலும் செயலாளர் சாந்தி, வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 3 பேரும் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர். இவர்கள் 5 பேருக்கும் சென்னை ஐகோர்ட்டு கடந்த 26-ந்தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

    இதையடுத்து 5 பேரும் நேற்று காலை ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தனர்.

    இதில் ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகிய இருவரும் சேலத்தில் தங்கியிருந்து 4 வாரம் செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து இருவரும் இன்று காலை செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.

    இதையடுத்து அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள், ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகியோர் கொண்டு வந்த நீதிமன்ற உத்தரவு நகலை படித்து பார்த்தனர். இதையடுத்து போலீஸ் நிலையத்தில் கையெழுத்து பதிவேட்டில் ஆசிரியைகள் இருவரும் அதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்து போட்டனர்.


    • பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்ததையொட்டி அவரது பெற்றோர் நீதி கேட்டு போராட்டம் நடத்தினர்.
    • கள்ளக்குறிச்சி கலவரத்தின்போது சேதமான பொருட்கள் குறித்தும் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்து வந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் படித்து வந்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இதையொட்டி அவரது பெற்றோர் நீதி கேட்டு போராட்டம் நடத்தினர்.

    ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி பல சமூக அமைப்புகள் கடந்த மாதம் 17-ந் தேதி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டம் கலவரமாக வெடித்தது. அப்போது போலீஸ் வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

    தகவல் அறிந்த போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரடியாக தலையிட்டு கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்தார். எனினும் கலவரத்தில் ஈடுபட்டதாகவும், தூண்டியதாகவும், இதற்கு காரணமாக இருப்பவர்களையும் கைது செய்ய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.

    இந்த குழுவினர் இதுவரை 358 பேரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து கைது நடவடிக்கை நடந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க கலவரத்தின்போது சேதமான பொருட்கள் குறித்தும் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்து வந்தனர்.

    தற்போது முதல்கட்ட அறிக்கையை கண்காணிப்பு குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கையில் கலவரத்தின்போது 3 கோடியே 45 லட்சத்து 83 ஆயிரத்து 72 ரூபாய் மதிப்பில் பொது சொத்துக்கள் சேதமானதாக வெளியிடப்பட்டுள்ளது.

    தொடர்ந்து கணக்கிடும் பணி நடந்து வருகிறது.

    • பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது
    • இரு ஆசிரியர்கள் அறிவுரை கூறிய நிலையில் தற்கொலைக்கு தூண்டினார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், அவரது உடல் பிரேத பரிசோதனை அறிக்கைகளை ஆய்வு செய்ய ஜிப்மர் மருத்துவக்குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஒரு மாத காலமாக ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செயதுள்ளது.

    மாணவி ஸ்ரீமதியின் மரணம் கொலை தொடர்பாக, கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

    அந்த தீர்ப்பில், மாணவி ஸ்ரீமதியின் மரணம், கொலை என்பதற்கான ஆதாரம் இல்லை எனவும், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான ஆதாரம் இல்லை என்றும் உயர் நீதிமன்றம் கூறி உள்ளது.

    இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் ஜிப்மர் குழு அளித்த அறிக்கையை சுட்டிக்காட்டி நீதிமன்றம் கூறியிருப்பதாவது:

    பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் ஜிப்மர் மருத்துவக் குழு அறிக்கையின்படி, மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பது உறுதியாகிறது.

    மாணவியின் கடிதம் மற்றும் சக மாணவிகளின் சாட்சியத்தின் அடிப்படையில், பாடம் படிப்பதில் மாணவிக்கு சிரமம் இருந்தது உறுதியாகி உள்ளது. தற்கொலைக்கு துண்டிய பிரிவில் ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்தது தவறு. இரு ஆசிரியர்கள் அறிவுரை கூறிய நிலையில் தற்கொலைக்கு தூண்டினார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. பெற்றோர் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரம் இல்லை.

    மாணவி மாடியில் இருந்து விழும்போது மரத்தில் அடிப்பட்டதாலேயே உடலின் பல பகுதிகளில் காயம் ஏற்பட்டு உள்ளதாக அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது. பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்தது மாணவி ரத்தத்தின் கறை அல்ல, அது வண்ணப்பூச்சு என நிபுணர்களின் அறிக்கை கூறுகிறது.

    இவ்வாறு நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

    உயர் நீதிமன்றத்தின் இந்த கருத்து, வழக்கில் திருப்பதை ஏற்படுத்தி உள்ளது. 

    • கள்ளக்குறிச்சி பள்ளியின் முன்பு நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது.
    • கலவரத்தின் போது போலீஸ் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி கலவரத்தின்போது கைது செய்யப்பட்ட 4 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் ஸ்ரீமதி என்ற 12ம் வகுப்பு மாணவி மரணம் அடைந்ததையடுத்து, கடந்த மாதம் 17-ந் தேதி பள்ளி முன்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. இந்த கலவரத்தின் போது பள்ளியில் இருந்த பொருட்கள் மற்றும் போலீஸ் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

    கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி, தொடர்ந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். இதுவரை 367 பேர் பேரை போலீசார் கைது செயதுள்ளனர்.

    இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கலவரத்தின்போது கைது செய்யப்பட்ட பூவசரன், பரமேஸ்வரன், வசந்தன், சஞ்சீவி ஆகிய 4 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டுக்கு சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இவர்களில் பூவரசன் என்பவர் மாடுகளை திருடியதற்காகவும், மற்ற 3 பேர் போலீசாரின் வாகனங்களுக்கு தீ வைத்ததாகவும் கைது செய்யப்பட்டவர்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாணவியின் பெற்றோர் தரப்பில் தங்களது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
    • கள்ளக்குறிச்சி வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடத்து வருகிறது.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி மரணமடைந்தார்.

    மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

    இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட 5 பேரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றம், கடந்த வாரம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    இதையடுத்து ஜாமீன் கோரி பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

    அந்த மனுவில், தங்களுக்கு எதிரான குற்றசாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும். பள்ளி தொடர்பான சி.சி.டி.வி.களின் பதிவு போலீசில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

    38 நாட்களாக விசாரணை நடைபெற்றுள்ளது. மேலும் எங்களை காவலில் வைத்து விசாரிக்க அவசியம் இல்லை என்று கூறியிருந்தனர்.

    இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆசிரியர்கள் தரப்பில் மாணவியின் உடல் இரண்டு முறை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், தங்கள் மீது என்ன வழக்கு என்றே தெரியவில்லை என்றும், மாணவி மரணத்திற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்றும் வாதிடப்பட்டது.

    மாணவியின் பெற்றோர் தரப்பில் தங்களது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    அப்போது நீதிபதி, இந்த வழக்குகளில் போலீசாரின் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பியபோது, விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் வேண்டுமென அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

    அதற்கு நீதிபதி, மனுதாரர்கள் என்ன குற்றம் செய்தனர்? ஆசிரியர், தாளாளராக இருப்பதற்காகவே கைது செய்யப்பட்டுள்ளனரா? போன்ற விவரங்களை கேட்டு வந்திருக்க வேண்டும் என அரசு வக்கீலை அறிவுறுத்தினார்.

    மனுதாரர்கள் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்ற காரணத்தை போலீசார் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் விசாரணை அதிகாரிகள் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்து வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

    • கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கலவரத்தில் ஈடுபட்டவர்களை சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்து வருகின்றனர்.
    • உளுந்தூர்பேட்டை அருகே நத்தகாளி கிராமத்தைச் சேர்ந்த சுந்தர் வன்முறையில் ஈடுபட்டு பள்ளி சொத்துகளை சேதப்படுத்தியதாக கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கலவரத்தில் ஈடுபட்டவர்களை சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்து வருகின்றனர்.

    அதன்படி வாட்ஸ் அப் குழுக்கள் அமைத்து கலவரத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவு செய்தது மற்றும் கலவரத்தில் கலந்து கொண்டதாக கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே டி.ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் (22), திட்டக்குடி அருகே எழுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சத்யராஜ், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நத்தகாளி கிராமத்தைச் சேர்ந்த சுந்தர் மற்றும் வன்முறையில் ஈடுபட்டு பள்ளி சொத்துகளை சேதப்படுத்தியதாகவும் கைது செய்தனர்.

    இதேபோல திட்டக்குடி அருகே டி.ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்த முத்தையா (23) கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சர்புதீன் (45) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதனால் கைது எண்ணிக்கை 352 ஆக உயர்ந்து உள்ளது.

    • கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை அடுத்து கடந்த ஜூலை 17-ம் தேதி போராட்டக்காரர்கள் பள்ளியை சூறையாடினர்.
    • இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டு எவரும் நுழைய கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    சென்னை:

    கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூலை 17-ம் தேதி பள்ளி மாணவி உயிரிழந்ததையடுத்து, போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு பள்ளியை சூறையாடினர். இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டதுடன் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    இந்நிலையில், பள்ளியை சீரமைக்க அரசு உத்தரவிடக் கோரி, பள்ளியை நிர்வகிக்கும் லதா, கல்விச் சங்கம் சார்பில் அதன் பொருளாளர் முருகேசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    அந்த மனுவில், கலவரத்தால் பள்ளிக்கு ரூ.25 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. சேதத்தை சரிசெய்வதற்காக வளாகத்திற்குள் அனு மதிக்கப்படுவதில்லை. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

    ஆனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதால் நேரடி வகுப்புகளைத் தொடங்க பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    வங்கிகளில் கடன் பெற்று பள்ளியில் உள்கட்டமைப்பு வசதிக மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவற்றை சரிசெய்ய அனுமதிக்காததன் மூலம் பல கோடி ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

    அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் வளாகத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, பள்ளி வளாகத்திற்குள் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். பள்ளியை திறக்க அனுமதி கோரிய மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தபோது, ​​அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, அரசு அனுமதியின் பேரில் ஏற்கனவே ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகளும், ஒன்பது முதல் 12ம் வகுப்புகள் அருகிலுள்ள பள்ளியிலும் நடைபெற்று வருகிறது என்றார்.

    அரசு தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் அசன் முஹம்மது ஜின்னாவு, இந்த விவகாரத்தில் பள்ளி முதல்வரின் மகனுக்கும் தொடர்பு இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில், சம்பவம் நடந்த பகுதியில் ஆதாரங்களை சேகரிக்க வேண்டியுள்ளதால், பள்ளியை சீரமைக்கும் பணியை தொடங்க அனுமதி வழங்கப்படவில்லை.

    முதல்கட்டமாக பள்ளி சீரமைப்பு பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த பிறகே பள்ளியை மீண்டும் செயல்பட அனுமதிக்க முடியும் என தெரிவித்தார்.

    இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பள்ளி நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை 10 நாட்களுக்குள் பரிசீலனை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    ×