search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேப்பாக் சூப்பர் கில்லீஸ்"

    • ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 2 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம்.
    • ரூ.70 லட்சத்தில் இருந்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ்சின் கையிருப்பு தொகை ரூ.61 லட்சமாக குறைந்துள்ளது.

    சென்னை:

    8 அணிகள் இடையிலான 7-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுவரை இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கான வீரர்கள் ஒதுக்கீடு முறையில் தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஆண்டு முதல்முறையாக வீரர்கள் ஏலம் விடப்படுகிறார்கள்.

    ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 2 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம். மற்ற வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பெறுவார்கள். தக்கவைக்கப்படும் வீரர்கள் 4 வகையாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

    இதன்படி தக்கவைக்கப்படும் 'ஏ' பிரிவு வீரர்களின் (சர்வதேச போட்டியில் ஆடியவர்கள்) விலை ரூ.10 லட்சமாகவும், 'பி' பிரிவு வீரர்களின் (இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உள்ளூர் சீனியர் போட்டியில் பங்கேற்றவர்கள்) விலை ரூ.6 லட்சமாகவும், 'சி' பிரிவு வீரர்களின் (ஏ, பி, பிரிவில் இடம் பெறாதவர்கள், டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் 30 ஆட்டங்களுக்கு மேல் ஆடியவர்கள்) விலை ரூ. 3 லட்சமாகவும், 'டி' பிரிவு வீரர்களின் (மற்ற வீரர்கள்) விலை ரூ.1½ லட்சமாகவும் நிர்வாக கவுன்சில் நிர்ணயித்தது.

    ஒவ்வொரு அணிகளும் தக்கவைத்து இருக்கும் வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் என்.ஜெகதீசன் (பி பிரிவு, ரூ.6 லட்சம்), மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சசிதேவ் (சி பிரிவு, ரூ.3 லட்சம்) ஆகியோரை தக்க வைத்து இருக்கிறது. இதனால் ஒதுக்கப்பட்ட ஏலத்தொகையான ரூ.70 லட்சத்தில் இருந்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ்சின் கையிருப்பு தொகை ரூ.61 லட்சமாக குறைந்துள்ளது.

    திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஆர்.அஸ்வினையும் (ஏ பிரிவு), திருப்பூர் தமிழன்ஸ் அணி துஷர் ரஹிஜாவையும் (டி பிரிவு), கோவை கிங்ஸ் அணி ஷாருக்கான் (பி பிரிவு), சுரேஷ் குமாரையும் (டி பிரிவு), நெல்லை ராயல் கிங்ஸ் அஜிதேஷ் (பி பிரிவு), கார்த்திக் மணிகண்டனையும் (டி பிரிவு), திருச்சி வாரியர்ஸ் அந்தோணி தாசையும் (பி பிரிவு), சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி கணேஷ் மூர்த்தியையும் (சி பிரிவு), மதுரை பாந்தர்ஸ் கவுதமையும் (டி பிரிவு) தக்க வைத்துள்ளது.

    டி.என் பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் வருகிற 23, 24 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

    ஏலத்தில் வீரர்களின் அடிப்படை விலை முறையே ரூ.3 லட்சம் (ஏ பிரிவு), ரூ.2 லட்சம் (பி), ரூ.1 லட்சம் (சி), ரூ.50 ஆயிரம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    • ஆட்ட நாயகன் விருது சந்தீப் வாரியர்சுக்கு அளிக்கப்பட்டது.
    • தொடர் நாயகன் விருது சஞ்சய் யாதவுக்கு வழங்கப்பட்டது.

    கோவை:

    6வது டி.என்.பில். டி20 கிரிக்கெட் திருவிழாவின் இறுதிப்போட்டி கோவை ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் நேற்றிரவு நடந்தது. இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், கோவை கிங்ஸ் அணியும் மோதின.

    முதலில் ஆடிய கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 14 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மீண்டும் மழை பெய்ததால் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது.

    இதையடுத்து, டி.என்.பி.எல். கோப்பை சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுவதாக போட்டி நடுவர்கள் அறிவித்தனர்.

    இதன்மூலம் டி.என்.பி.எல். வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி (4 முறை) என்ற பெருமையை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தக்கவைத்தது. ஷாருக் கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி முதல் முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்து பட்டத்தை வென்றது.

    இந்நிலையில், சிறப்பாக விளையாடிய அணியுடன் கோப்பையைப் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது என சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பா.சிவந்தி ஆதித்தன் அளித்த பேட்டியில், 5 முறை இறுதிப்போட்டிக்கு சென்றிருக்கிறோம். 4 முறை கோப்பையை வென்றிருக்கிறோம். சிறப்பாக விளையாடிய அணியுடன் கோப்பையை பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி என தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய கோவை அணி 138 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய சேப்பாக் அணி 4 ஓவர் மட்டுமே ஆடியது.

    கோவை:

    6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசும், கோவை கிங்சும் பலப்பரீட்சையில் இறங்கின.

    டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 17 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

    அதன்படி, முதலில் பேட் செய்த கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 138 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியின் சாய் கிஷோர் 45 பந்தில் 65 ரன்கள் குவித்தார். கங்கா ஸ்ரீதர் ராஜு 27 ரன்னும், ஷாருக் கான் 20 ரன்னும் எடுத்தனர்.

    சேப்பாக் அணி சார்பில் சந்தீப் வாரியர் 4 விக்கெட், சாய் கிஷோர் 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் கவுசிக் காந்தி ஒரு ரன்னிலும், ஜெகதீசன் 2 ரன்னிலும் அவுட்டாகினர்.

    4 ஓவர்கள் முடிந்த நிலையில் சேப்பாக் அணி 2 விக்கெட் இழப்புக்கு 14 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது.

    இதையடுத்து, டிஎன்பிஎல் கோப்பை சேப்பாக் மற்றும் கோவை அணிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

    • மழை காரணமாக போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
    • முதலில் ஆடிய கோவை அணி 138 ரன்களை எடுத்தது.

    கோவை:

    6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசும், கோவை கிங்சும் பலப்பரீட்சையில் இறங்கின.

    டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 17 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

    அதன்படி, முதலில் பேட் செய்த கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 138 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியின் சாய் கிஷோர் 45 பந்தில் 65 ரன்கள் குவித்தார். கங்கா ஸ்ரீதர் ராஜு 27 ரன்னும், ஷாருக் கான் 20 ரன்னும் எடுத்தனர்.

    சேப்பாக் அணி சார்பில் சந்தீப் வாரியர் 4 விக்கெட், சாய் கிஷோர் 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் அணி களமிறங்குகிறது.

    • முதலில் விளையாடிய நெல்லை அணி 140 ரன்கள் அடித்தது.
    • சேப்பாக் அணி வீரர் சாய் கிஷோர் 43 ரன்கள் குவித்தார்.

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் நெல்லை ராயல் கிங்ஸ், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின.

    இந்த நிலையில் சேலத்தில் இன்று நடைபெற்ற முதலாவது தகுதிச் சுற்று போட்டியில் பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ், கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் விளையாடின.

    டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் ஆடிய நெல்லை அணி, 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பாபா அபராஜித் 33 ரன்கள் சேர்த்தார்.

    ஷாஜகான் 25, சஞ்சய் யாதவ் 21, கேப்டன் பாபா இந்திரஜித் 20, சூர்யபிரகாஷ் 19 ரன்கள் எடுத்தனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் மணிமாறன் சித்தார்த், சந்தீப் வாரியர், சோனு யாதவ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பின்னர் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் கேப்டன் கவுசிக் காந்தி 40 ரன் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். ஜெகதீசன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் டக் அவுட்டானார்கள். சாய் கிஷோர் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார். சசியாதவ் 4 ரன்னுடன் வெளியேற பின்னர் ஜோடி சேர்ந்த ராஜகோபால் சதீஷ், ஹரிஷ்குமார் ஜோடி அணியின் வெற்றிக்கு போராடியது.

    அதிரடி காட்டிய சதீஷ் 19 பந்துகளில் 31 ரன்கள் குவித்ததுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹரீஷ்குமார் 13 ரன்கள் அடித்து களத்தில் இருந்தார். இதனையடுத்து சேப்பாக் அணி 19.2 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் குவித்ததுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி.என்.பி.எல்.இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றது.

    • சேப்பாக் அணியின் சாய் கிஷோர் வெறும் 2 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.
    • சேப்பாக் அணி சார்பில் சசிதேவ் அதிகமாக 45 ரன்களை எடுத்தார்.

    சேலம்:

    சேலத்தில் இன்று நடைபெறும் 25-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி முதலில் ஆடிய சேப்பாக் அணி 9 விக்கெட்டுக்கு 133 ரன்களை எடுத்தது. சசிதேவ் அதிரடியாக ஆடி 45 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். ராதாகிருஷ்ணன் 24 ரன்னும், சாய் கிஷோர் 19 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 134 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது. சேப்பாக் அணி வீரர்கள் துல்லியமாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் திருப்பூர் அணி விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    குறிப்பாக, சாய் கிஷோர் 4 ஓவர்கள் வீசி 3 மெய்டன் எடுத்து, வெறும் 2 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

    இறுதியில் திருப்பூர் அணி 73 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் சேப்பாக் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • இந்த ஆட்டத்தில் வென்றால் பிளேஆப் சுற்று வாய்ப்பை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் உறுதி செய்துவிடும்.
    • சேப்பாக் அணி சார்பில் சசிதேவ் அதிகமாக 45 ரன்களை எடுத்தார்.

    சேலம்:

    சேலத்தில் இன்று நடைபெறும் 25-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, சேப்பாக் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் டக் அவுட்டானார். கேப்டன் கவுசிக் காந்தி 2 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய ராதாகிருஷ்ணன் 24 ரன்னும், சாய் கிஷோர் 19 ரன்னும் ராஜகோபால் சதீஷ் 5 ரன்னும், சோனு யாதவ் 12 ரன்னும், ஹரீஷ்குமார் 16 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    இறுதியில், சேப்பாக் அணி 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்களை எடுத்தது. சசிதேவ் கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடி 45 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 134 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்குகிறது.

    • முதலில் ஆடிய கோவை அணி 170 ரன்களை எடுத்தது.
    • சேப்பாக் அணியில் நாராயணன் ஜெகதீசன் 75 ரன்களை குவித்தார்.

    6-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட்டின் அடுத்தகட்ட போட்டிகள் கோவையில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற 17-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி கோவை அணி முதலில் பேட்டிங் செய்தது.

    தொடக்க ஆட்டக்காரரான அஷ்வின் வெங்கட்ராமன் 6 ரன்னில் அவுட்டானார். சுரேஷ்குமார் 22 பந்தில் 1 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 32 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். சாய் சுதர்சன் 25 ரன், ஷிஜித் சந்திரன் 17 ரன், முகிலேஷ் 2 ரன் எடுத்து வெளியேறினர். செல்வகுமார் டக் அவுட்டானார். அபிஷேக் தன்வார் 28 ரன்னில் அவுட்டானார். ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் கேப்டன் ஷாருக் கான் பொறுப்புடன் ஆடினார். அரை சதமடித்த அவர் 51 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், கோவை அணி 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களை எடுத்தது. இதையடுத்து, களம் இறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 18.5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்ததுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் கேப்டன் கவுசிக் காந்தி 9 ரன் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ராதா கிருஷ்ணன் 8 ரன்னுடனும், சசிதேவ் 1 ரன்னுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் சாய் கிஷோர் - நாராயணன் ஜெகதீசன் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதிபட்சமாக நாராயணன் ஜெகதீசன் 51 பந்துகளில் 75 ரன்களை குவித்தார். சாய் கிஷோர் 33 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். 

    • முதலில் ஆடிய கோவை அணி 170 ரன்களை எடுத்தது.
    • கேப்டன் ஷாருக் கான் 28 பந்தில் 51 ரன்களை குவித்தார்.

    கோவை:

    6-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட்டின் அடுத்தகட்ட போட்டிகள் கோவையில் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடைபெறும் 17-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதி வருகிறது. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.

    அதன்படி கோவை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான அஷ்வின் வெங்கட்ராமன் 6 ரன்னில் அவுட்டானார். சுரேஷ்குமார் 22 பந்தில் 1 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 32 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    சாய் சுதர்சன் 25 ரன், ஷிஜித் சந்திரன் 17 ரன், முகிலேஷ் 2 ரன் எடுத்து வெளியேறினர். செல்வகுமார் டக் அவுட்டானார். அபிஷேக் தன்வார் 28 ரன்னில் அவுட்டானார்.

    ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் கேப்டன் ஷாருக் கான் பொறுப்புடன் ஆடினார். அரை சதமடித்த அவர் 51 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், கோவை அணி 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 171 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்குகிறது.

    • நெல்லை அணியில் அபாரமாக ஆடிய சூரியபிரகாஷ் 62 ரன்களும், சஞ்சய் யாதவ் 87 ரன்களும் குவித்தனர்.
    • பரபரப்பான கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற நிலையில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 14 ரன்கள் எடுத்து சமன் செய்தது.

    நெல்லை:

    ஆறாவது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நெல்லை சங்கர் நகரில் நடைபெற்றது. இதில் கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீசும், பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்சும் மோதின.

    முதலில் ஆடிய நெல்லை அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. அபாரமாக ஆடிய சூரியபிரகாஷ் 62 ரன்களும், சஞ்சய் யாதவ் 87 ரன்களும் குவித்தனர்.

    இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில், கேப்டன் கவுசிக் காந்தி, ஜெகதீசன் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். ஜெகதீசன் 25 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் ராதாகிருஷ்ணன் ஒரு ரன்னிலும், சசிதேவ் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அவர்களைத் தொடர்ந்து கவுசிக்குடன் இணைந்த சோனு யாதவ் அதிரடியாக ஆடினார். அவர் 23 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 34 ரன்கள் சேர்த்த நிலையில், ஆட்டமிழந்தார். சதீஷ் 5 ரன்கள் மட்டுமே சேர்த்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிய கேப்டன் கவுசிக் அரை சதம் கடந்தார். தொடர்ந்து ஆடிய அவர் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 43 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரி 2 சிக்சருடன் இந்த இலக்கை எட்டினார்.

    பரபரப்பான கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற நிலையில், அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ஹரிஷ் ரன் எடுக்கவில்லை. 2வது பந்தில் பவுண்டரி, 3வது பந்தில் ரன் எடுக்கவில்லை. 4வது பந்தில் சிக்சர், கடைசி பந்தில் 4 ரன்கள் எடுக்க, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 14 ரன்கள் எடுத்து சமன் செய்தது. 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

    முதலில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங் செய்தது. அதிசயராஜ் வீசிய அந்த ஓவரில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 9 ரன் சேர்த்தது. இதையடுத்து சூப்பர் ஓவரை எதிர்கொண்ட நெல்லை அணி, 10 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. 

    • துவக்க வீரர் சூரியபிரகாஷ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
    • அதிரடியாக ஆடிய சஞ்சய் யாதவ் ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 87 ரன்கள் விளாசினார்.

    நெல்லை:

    ஆறாவது டி.என்.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கியது. இத்தொடரில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி வாரியர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

    முதல் நாளான இன்று நெல்லை சங்கர் நகரில் தொடக்க ஆட்டம் நடைபெறுகிறது. இதில் கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீசும், பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்சும் மோதுகின்றன. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, நெல்லை அணி முதலில் பேட்டிங் செய்தது.

    நெல்லை அணியின் ரஞ்சன் பால் (7), பாபா அபராஜித் (2), பாபா இந்திரஜித் (3) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். மறுமுனையில் துவக்க வீரர் சூரியபிரகாஷ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் சஞ்சய் யாதவ் பவுண்டரி, சிக்சர் என அதிரடி காட்டினார். இருவரும் அரை சதம் கடக்க, அணியின் ஸ்கோர் வெகுவாக உயர்ந்தது.

    சூரியபிரகாஷ் 62 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், தொடர்ந்து ஆடிய சஞ்சய் யாதவ் ஆட்டமிழக்காமல் 87 ரன்கள் விளாசினார். அவர் 47 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் இந்த ரன்னை எட்டினார்.

    இதனால் நெல்லை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. அஷிதேஷ் 16 ரன்களுடன் களத்தில் இருந்தார். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் சந்தீப் வாரியர், மணிமாறன் சித்தார்த், சோனு யாதவ், ஹரீஷ் குமார் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்கியது.

    • டி.என்.பி.எல். முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
    • ஏற்கனவே 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

    சென்னை:

    2022ம் ஆண்டுக்கான டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி வரும் 23-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

    கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக ரசிகர்கள் போட்டிகளை காண முடியாத நிலையில், இந்த ஆண்டு பல்வேறு ஏற்பாடுகளுடன் பிரமாண்டமான நெல்லை கிரிக்கெட் மைதானத்தில் போட்டி தொடங்குகிறது.

    முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்நிலையில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்களின் பட்டியல் டி.என்.பி.எல் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு கெளசிக் காந்தி கேப்டனாக செயல்படவுள்ளார். மேலும் அந்த அணியில் அலெக்சாண்டர், அருண், அருண் குமார், ஹரிஷ் குமார், ஜெகதீசன், ஜெகன்நாத் ஸ்ரீனிவாஸ், கவுசிக் காந்தி, நிலேஷ் சுப்பிரமணியம், பிரசித் ஆகாஷ்,ராதாகிருஷ்ணன், ராகுல், சாய் கிஷோர், சாய் பிரகாஷ், சந்தீப் வாரியர், சசிதேவ், சதீஷ், சித்தார்த், சோனு யாதவ், சுஜய், விஜய் குமார், கார்த்திக், மதன் குமார் ஆகிய 22 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    இந்த தொடரின் இறுதிப் போட்டி கோவையில் ஜூலை 31-ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

    ×