என் மலர்
நீங்கள் தேடியது "திருப்பூர் தமிழன்ஸ்"
- இறுதிப்போட்டி திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர்.கல்லூரி மைதானத்தில் இன்று நடக்கிறது.
- சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.50 லட்சமும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.30 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.
9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர்.கல்லூரி மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் திருப்பூர் தமிழன்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.
சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் அணி லீக் சுற்றில் 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்து பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. அடுத்து முதலாவது தகுதி சுற்றில் 79 ரன் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு அதிர்ச்சி அளித்து முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டியது.
திருப்பூர் அணியில் பேட்டிங்கில் துஷர் ரஹேஜா (411 ரன்), அமித் சாத்விக், பிரதோஷ் ரஞ்சன் பால், சசிதேவும், பந்து வீச்சில் இசக்கிமுத்து (12 விக்கெட்), டி.நடராஜன், சிலம்பரசனும் நல்ல நிலையில் உள்ளனர். கேப்டன் சாய் கிஷோர் (128 ரன், 12 விக்கெட்) ஆல்-ரவுண்டராக அசத்துகிறார்.
ஆர்.அஸ்வின் தலைமையிலான நடப்பு சாம்பியன் திண்டுக்கல் அணி லீக் சுற்றில் 4 வெற்றி, 3 தோல்வி கண்டு 8 புள்ளிகளுடன் 3-வது இடம் பெற்றது. இதைத்தொடர்ந்து வெளியேற்றுதல் சுற்றில் 6 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சியையும், 2-வது தகுதி சுற்றில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசையும் வீழ்த்தி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
திண்டுக்கல் அணியில் பேட்டிங்கில் ஷிவம் சிங் (327 ரன்), விமல் குமார், பாபா இந்திரஜித், ஹன்னி சைனியும், பந்து வீச்சில் ஜி.பெரியசாமி (11 விக்கெட்), வருண் சக்ரவர்த்தி (10 விக்கெட்), சசிதரணும், ஆல்-ரவுண்டராக கேப்டன் அஸ்வினும் (296 ரன், 13 விக்கெட்) வலுசேர்க்கின்றனர்.
லீக் ஆட்டத்தில் திருப்பூர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கலை தோற்கடித்து இருந்தது. இதனால் அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதேநேரத்தில் லீக் ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொள்ள திண்டுக்கல் அணி தீவிரம் காட்டும். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு அந்த அணிக்கு அனுகூலமாக இருக்கும். இரு அணிகளும் சமபலத்துடன் மல்லுக்கட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.
ஒட்டுமொத்தத்தில் இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 5-ல் திண்டுக்கல்லும், ஒன்றில் (நடப்பு சீசனில்) திருப்பூரும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.1.7 கோடியாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.50 லட்சமும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.30 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.
இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
திருப்பூர்: அமித் சாத்விக், துஷர் ரஹேஜா, சாய் கிஷோர் (கேப்டன்), முகமது அலி, சசிதேவ், பிரதோஷ் ரஞ்சன் பால், மோகன் பிரசாத், சிலம்பரசன், மதிவாணன், டி.நடராஜன், இசக்கிமுத்து, அனோவன்கர்.
திண்டுக்கல்: ஆர்.அஸ்வின் (கேப்டன்), ஷிவம் சிங், பாபா இந்திரஜித், மான் பாப்னா, விமல் குமார், ஹன்னி சைனி, தினேஷ், கார்த்திக் சரண், புவனேஷ்வர், வருண் சக்ரவர்த்தி, சசிதரண், ஜி.பெரியசாமி.
இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- திருப்பூர் அணியின் அசத்தல் பந்துவீச்சால் திண்டுக்கல் 93 ரன்னுக்கு சுருண்டது
- திருப்பூர் அணி சார்பில் இசக்கிமுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 4 ஆவது போட்டி கோவையில் நடைபெற்று வருகிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய திண்டுக்கல் அணி திருப்பூர் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இறுதியாக 16.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 93 ரன்களுக்கு திண்டுக்கல் அணி ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக சிவம் சிங் 30 ரன்கள் அடித்தார்.
திருப்பூர் அணி சார்பில் இசக்கிமுத்து 4 விக்கெட்டுகளும், மதிவண்ணன் 3 விக்கெட்டுகளும் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 94 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருப்பூர் அணி 11.5 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் அடித்து எளிதாக வெற்றி பெற்றது. அதிகபட்சமாக துஷார் ரஹேஜா 65 ரன்கள் அடித்தார். திண்டுக்கல் அணி சார்பில் கணேசன் பெரியசாமி 1 விக்கெட் வீழ்த்தினார்.
- சாய் கிஷோர் பந்துவீச்சில் LBW முறையில் அஸ்வின் ஆட்டமிழந்தார்.
- அஸ்வின் தனது கிளவுஸை கழட்டி வெளியே வீசினார்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 4 ஆவது போட்டி கோவையில் நடைபெற்று வருகிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய திண்டுக்கல் அணி திருப்பூர் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இறுதியாக 16 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 93 ரன்களுக்கு திண்டுக்கல் அணி ஆல் அவுட்டானது.
இப்போட்டியில் சிறப்பான ஆடிய அஸ்வின், சாய் கிஷோர் பந்துவீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்தார். ரீபிளேவில் பந்து லெக் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆனது தெளிவாக தெரிந்தது. ஆனால் ஏற்கனேவே 2 ரெவியூக்களையும் இழந்ததால் அவரால் அந்த விக்கெட்டுக்கு ரெவியூ எடுக்க முடியவில்லை.
இதனால் பெண் நடுவரிடம் முறையிட்ட அஸ்வின், பின்னர் கடுப்பாகி தனது பேட்டை கொண்டு தனது தொடையை அடித்தார். பின்னர் தனது கிளவுஸை கழட்டி வெளியே வீசினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
- அதிகபட்சமாக சிவம் சிங் 30 ரன்கள் அடித்தார்.
- திருப்பூர் அணி சார்பில் இசக்கிமுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 4 ஆவது போட்டி கோவையில் நடைபெற்று வருகிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய திண்டுக்கல் அணி திருப்பூர் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இறுதியாக 16.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 93 ரன்களுக்கு திண்டுக்கல் அணி ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக சிவம் சிங் 30 ரன்கள் அடித்தார்.
திருப்பூர் அணி சார்பில் இசக்கிமுத்து 4 விக்கெட்டுகளும், மதிவண்ணன் 3 விக்கெட்டுகளும் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 94 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கவுள்ளது.
- இவ்விரு அணிகளும் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.
- இதில் 6-ல் சேப்பாக் சூப்பர் கில்லீசும், ஒன்றில் திருப்பூரும் வெற்றி பெற்றுள்ளன. மற்றொரு ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை.
கோவை:
9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில், கோவையில் இன்றிரவு நடக்கும் 2-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திருப்பூர் தமிழன்சை சந்திக்கிறது.
4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் புதிய சீசனை வெற்றியுடன் தொடங்கும் வேட்கையுடன் தயாராகியுள்ளது. கேப்டன் பாபா அபராஜித், என்.ஜெகதீசன், ஆல்-ரவுண்டர்கள் விஜய் சங்கர், அபிஷேக் தன்வர், சுழற்பந்து வீச்சாளர் ஸ்வப்னில் சிங் போன்ற முன்னணி வீரர்கள் கில்லீஸ் அணியில் உள்ளனர்.
சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணியில் பிரதோஷ் ரஞ்சன் பால், ராதாகிருஷ்ணன், சசிதேவ், அமித் சாத்விக், வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் என்று திறமையான வீரர்களுக்கு குறைவில்லை. அதனால் அவர்கள் கடும் சவால் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விரு அணிகளும் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 6-ல் சேப்பாக் சூப்பர் கில்லீசும், ஒன்றில் திருப்பூரும் வெற்றி பெற்றுள்ளன. மற்றொரு ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை.
இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- முதலில் ஏ பிரிவு வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டது.
- ஒவ்வொரு அணிக்காக மொத்த ஏலத்தொகை ரூ.70 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் உள்ளூர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் விதமாக ஐபிஎல் போன்றே, டிஎன்பிஎல் போட்டிகள் ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. சர்வதேச வீரர்களும், உள்ளூர் வீரர்களும் இணைந்து ஆடும் இப்போட்டி, தமிழகத்தில் பிரபலமானது. வரும் ஆண்டிற்கான டிஎன்பிஎல் போட்டிக்கான வீரர்கள் தேர்வு குறித்த ஏலம் பற்றி, டிஎன்பிஎல் நிர்வாகம் அறிவித்திருந்தது.
அதன்படி செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில் இன்று மற்றும் நாளை விளையாட்டு வீரர்களுக்கான ஏலம் நடைபெற உள்ளது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், ஐடீரிம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா சூப்பர் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், மதுரை என 8 அணிகள் களத்தில் உள்ளன.
மேலும் இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் டிஎன்பிஎல் போட்டியில் முதல்முறையாக வீரர்கள் ஏலம் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஏற்கனவே டிஎன்பிஎல் நிர்வாகக் குழு, ஒவ்வொரு உரிமையாளரும் 2 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம் அதில் ஒரு வீரர், ஏ அல்லது பி பிரிவில் இருந்து மற்றும் மற்றொரு வீரர் சி அல்லது டி பிரிவில் இருந்து.
மேலும் ஒவ்வொரு அணிக்காக மொத்த ஏலத்தொகை ரூ.70 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஏ பிரிவு வீரருக்கு ரூ. 10 லட்சம், பி பிரிவு வீரருக்கு ரூ. 6 லட்சம், சி பிரிவு வீரருக்கு ரூ. 3 லட்சம் மற்றும் டி பிரிவு வீரருக்கு ரூ. 1.50 லட்சம் அடிப்படை தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று 12 மணிக்கு வீரர்கள் ஏலம் தொடங்கப்பட்டது. முதலில் ஏ பிரிவு வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டது. விஜய் சங்கரை திருப்பூர் தமிழன்ஸ் ரூ.10.25 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது.
ஐடீரிம் திருப்பூர் தமிழன்ஸ் - துஷார் ரஹீஜா (பிரிவு டி) தக்க வைக்கப்பட்ட வீரர் ஆவர்.
- கேரளாவை சேர்ந்த சந்தீப் வாரியரை நெல்லை அணி ரூ.8.5 லட்சத்துக்கு விலைக்கு வாங்கியது.
- வாஷிங்டன் சுந்தரை மதுரை பாந்தர்ஸ் அணி ரூ.6.75 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது.
சென்னை:
டிஎன்பிஎல் போட்டியில் முதல்முறையாக வீரர்கள் ஏலம் முறையில் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே டிஎன்பிஎல் நிர்வாகக் குழு, ஒவ்வொரு உரிமையாளரும் 2 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம் அதில் ஒரு வீரர், ஏ அல்லது பி பிரிவில் இருந்து மற்றும் மற்றொரு வீரர் சி அல்லது டி பிரிவில் இருந்து.
இந்நிலையில் இன்று 12 மணிக்கு வீரர்கள் ஏலம் தொடங்கப்பட்டது. முதல் வீரராக அறிவிக்கப்பட்ட விஜய் சங்கரை 10.25 லட்சத்துக்கு திருப்பூர் தமிழன்ஸ் ஏலம் எடுத்தது. அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணிக்காக விளையாடும் வாஷிங்டன் சுந்தரை மதுரை பாந்தர்ஸ் அணி ரூ.6.75 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. மூன்றாவது வீரராக நடராஜனை 6.25 லட்சத்துக்கு திருச்சி அணி ஏலம் எடுத்தது.
கேரளாவை சேர்ந்த சந்தீப் வாரியரை நெல்லை அணி ரூ.8.5 லட்சத்துக்கு விலைக்கு வாங்கியது. ஏ பிரிவில் கடைசி வீரரான சிவி வருணை மதுரை பாந்தர்ஸ் அணி ரூ.6.75 லட்சத்துக்கு வாங்கியது.
இதனை தொடர்ந்து பி பிரிவு வீரர்கள் ஏலம் நடந்து கொண்டிருக்கிறது.
- அபாரமாக ஆடிய சாய் சுதர்சன் ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் விளாசினார்
- திருப்பூர் அணி தரப்பில் விஜய் சங்கர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
டி.என்.பி.எல். என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ள நிலையில், 7வது சீசன் இன்று கோவையில் கோலாகலமாக தொடங்கியது. கோவையில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருப்பூர் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. துவக்க வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்த நிலையில், மூன்றாவது வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்தார். அரை சதம் கடந்த அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் விளாசினார்.
முகிலேஷ் 33 ரன்கள், கேப்டன் ஷாருக் கான் 25 ரன்கள் சேர்த்தனர். திருப்பூர் அணி தரப்பில் விஜய் சங்கர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சாய் கிஷோர் 2 விக்கெட் எடுத்தார்.
இதையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் தமிழன்ஸ் அணி களமிறங்குகிறது.
- முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது.
- திருப்பூர் அணி 17.5 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் மட்டுமே எடுத்தது.
டி.என்.பி.எல். என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ள நிலையில், 7வது சீசன் இன்று கோவையில் கோலாகலமாக தொடங்கியது.
கோவையில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருப்பூர் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது.
துவக்க வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்த நிலையில், மூன்றாவது வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்தார்.
அரை சதம் கடந்த அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் விளாசினார். முகிலேஷ் 33 ரன்கள், கேப்டன் ஷாருக் கான் 25 ரன்கள் சேர்த்தனர். திருப்பூர் அணி தரப்பில் விஜய் சங்கர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சாய் கிஷோர் 2 விக்கெட் எடுத்தார்.
இதையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் தமிழன்ஸ் அணி களமிறங்குகியது.
இதில், அதிகபட்சமாக துஷார் ரகாஜே 33 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, விஷால் வைத்யா 16 ரன்களும், அஜித் ராம் 11 ரன்களும், ராஜேந்திர விவேக் 6 ரன்களும், என்எஸ் சத்துர்வேத் 4 ரன்களும் எடுத்தனர்.
பால்சந்தர் அனிருத் 3 ரன்களும், விஜய் சங்கர் 2 ரன்களும், கணேஷ் மற்றும் சாய் கிஷோர் ஆகியோர் தலா ஒரு ரன்னும் எடுத்தனர்.
இந்நிலையில் திருப்பூர் அணி 17.5 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் மட்டுமே எடுத்தது.
திருப்பூர் அணி 12 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வந்தது.
இதில் புவனேஷ்வரன் 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மணிகண்டன் 8 ரன்களில் அவுட்டானார்.
இந்நிலையில், திருப்பூர் தமிழன் அணி 20 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.
இதன்மூலம், கோவை அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளது.
- திருப்பூர் தமிழன்ஸ் முதல் ஆட்டத்தில் கோவையுடன் மோசமாக தோற்றதால் இன்றைய ஆட்டத்தில் திறமையை வெளிப்படுத்த போராடும்.
- சேலம் ஸ்பார்டன்சுக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர்.
கோவை:
7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவை எஸ்.என்.ஆர்.கல்லூரி மைதானத்தில் கடந்த 12-ந் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் 70 ரன் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்சை தோற்கடித்தது. நேற்று முன்தினம் நடந்த 2-வது போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 52 ரன் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்டன்சை வீழ்த்தியது.
நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 6 விக்கெட்டில் மதுரை பாந்தர்சையும், திண்டுக்கல் டிராகன்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் பால்சி திருச்சியையும் வென்றன.
டி.என். பி.எல். போட்டியின் 5-வது லீக் ஆட்டம் கோவையில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் -சாய்கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இது 2-வது போட்டியாகும்.
4 முறை டி.என்.பி.எல். கோப்பையை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திருப்பூர் தமிழன்சை வீழ்த்தி தொடர்ந்து 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. சேலம் ஸ்பார்டன்சுக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர்.
தொடக்க ஆட்டக்காரரான பிரதோஷ் ரஞ்சன் பால், கேப்டன் ஜெகதீசன், சஞ்சய் யாதவ் ஆகியோர் பேட்டிங்கிலும் , ஹரீஷ்குமார், ராக்கி பாஸ்கர், விஜூ அருள், ரஹில் ஷா ஆகியோர் பந்துவீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர். ஆல்-ரவுண்டர் பணியில் பாபா அபராஜித் சிறப்பான நிலையில் இருக்கிறார். இது தவிர ஆர்.சதீஷ், சசிதேவ் போன்ற திறமையான வீரர்களும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் உள்ளனர்.
திருப்பூர் தமிழன்ஸ் முதல் ஆட்டத்தில் கோவையுடன் மோசமாக தோற்றதால் இன்றைய ஆட்டத்தில் திறமையை வெளிப்படுத்த போராடும். முதல் வெற்றியை பெறும் வேட்கையில் அந்த அணி இருக்கிறது.
கேப்டன் சாய் கிஷோர் , விஜய் சங்கர் போன்ற சிறந்த வீரர்கள் திருப்பூர் அணியில் உள்ளனர்.
- சேலம் ஸ்பார்டன்சுக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர்.
- திருப்பூர் தமிழன்ஸ் முதல் ஆட்டத்தில் கோவையிடம் தோல்வி அடைந்தது.
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் ஆட்டம் கோவையில் இன்று இரவு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சாய்கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இது 2-வது போட்டியாகும். டாஸ் வென்ற திருப்பூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
4 முறை டி.என்.பி.எல். கோப்பையை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திருப்பூர் தமிழன்சை வீழ்த்தி தொடர்ந்து 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. சேலம் ஸ்பார்டன்சுக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர்.
அதேசமயம், திருப்பூர் தமிழன்ஸ் முதல் ஆட்டத்தில் கோவையிடம் தோல்வி அடைந்ததால், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற கடுமையாக போராடும்.
- டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.
- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் ஹரிஷ் குமார், ரகில் ஷா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் ஆட்டம் கோவையில் இன்று இரவு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சாய்கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணிக்கு, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி அளித்தனர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழக்க, ராதாகிருஷ்ணன் 36 ரன்களும், விஜய் சங்கர் 28 ரன்கள், ராஜேந்திரன் 26 ரன்களும் (நாட்அவுட்) எடுத்து ஆறுதல் அளித்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்தது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் ஹரிஷ் குமார், ரகில் ஷா தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்குகிறது.






