என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டிஎன்பிஎல்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருப்பூர் அணிகள் இன்று மோதல்
- இவ்விரு அணிகளும் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.
- இதில் 6-ல் சேப்பாக் சூப்பர் கில்லீசும், ஒன்றில் திருப்பூரும் வெற்றி பெற்றுள்ளன. மற்றொரு ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை.
கோவை:
9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில், கோவையில் இன்றிரவு நடக்கும் 2-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திருப்பூர் தமிழன்சை சந்திக்கிறது.
4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் புதிய சீசனை வெற்றியுடன் தொடங்கும் வேட்கையுடன் தயாராகியுள்ளது. கேப்டன் பாபா அபராஜித், என்.ஜெகதீசன், ஆல்-ரவுண்டர்கள் விஜய் சங்கர், அபிஷேக் தன்வர், சுழற்பந்து வீச்சாளர் ஸ்வப்னில் சிங் போன்ற முன்னணி வீரர்கள் கில்லீஸ் அணியில் உள்ளனர்.
சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணியில் பிரதோஷ் ரஞ்சன் பால், ராதாகிருஷ்ணன், சசிதேவ், அமித் சாத்விக், வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் என்று திறமையான வீரர்களுக்கு குறைவில்லை. அதனால் அவர்கள் கடும் சவால் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விரு அணிகளும் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 6-ல் சேப்பாக் சூப்பர் கில்லீசும், ஒன்றில் திருப்பூரும் வெற்றி பெற்றுள்ளன. மற்றொரு ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை.
இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.






