search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை உயர் நீதிமன்றம்"

    • தேவைப்பட்டால் உயர் அதிகாரிகளுக்கு உதவியாளர், இருப்பிட உதவியாளர் பணியிடங்களை உருவாக்கலாம்
    • ஆர்டலிகள் பயன்படுத்தப்படுவதாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவு

    சென்னை:

    காவல்துறையில் பணியாற்றும் யு.மாணிக்கவேல் என்பவர் காவலர் குடியிருப்பில் ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், போலீஸ் உயர் அதிகாரிகள் தங்கள் கீழ் உள்ளவர்களை கட்டுப்படுத்த இயலாவிட்டால், நன்மதிப்பை இழக்கவும் நேரிடும் என கருத்து தெரிவித்ததுடன், உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லி, வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர், சொந்த வாகனங்களில் அரசு முத்திரை போன்ற விவகாரங்கள் குறித்தும் விசாரித்தார்.

    ஆர்டர்லிகளை வைத்திருக்கக் கூடாது என்கிற தமிழக உள்துறை செயலாளரின் உத்தரவை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டிஜிபி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அதையடுத்து, ஆர்டர்லி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், ஆர்டர்லி முறையை காவல்துறையினர் தவறாக பயன்படுத்துவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

    பெரும்பாலான ஆர்டர்லிகளை திரும்ப பெற்றுள்ளதாகவும், மாற்று ஏற்பாடு செய்தவுடன் மீதமுள்ளவர்களும் திரும்பப்பெறப்படுவார்கள் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கபட்டது.

    காவல்துறை பணி தவிர தனிப்பட்ட பணிகளுக்காக ஆர்டர்லியை பயன்படுத்த மாட்டோம் என அனைத்து ஐ பி எஸ் அதிகாரிகளும் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும், டிஜிபி அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். மேலும், டிஜிபி எடுத்துவரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது என்றும், பாராட்டுக்குரியது என்றும் , ஆர்டர்லி முறையை ஒழிக்க அரசு உறுதி பூண்டுள்ளது என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

    இந்த நிலையில், இந்த வழக்கில் இறுதி தீர்ப்பை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் இன்று பிறப்பித்தார். அதில், அரசு உத்தரவாதம் அளித்தபடி ஆர்டர்லி முறையை 4 மாதத்திற்குள் ஒழிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

    'தேவைப்பட்டால் உயர் அதிகாரிகளுக்கு உதவியாளர், இருப்பிட உதவியாளர் பணியிடங்களை உருவாக்க தமிழக அரசுக்கு டிஜிபி பரிந்துரைக்கலாம். எந்த பணிக்காக நியமிக்கப்பட்டார்களோ அந்த பணியை மட்டும் வழங்கி அரசியலமைப்பு சட்டம் வழங்கிய உரிமையை நிலைநாட்டவேணடும். காவலர் குடியிருப்பில் சட்டவிரோதமாக தங்கியிருப்போரை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

    • நீதிபதிகள் சதீஷ் குமார், பரத் சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை
    • தடை உத்தரவை அறிவிப்பாணையாக வெளியிடவேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    தமிழக வனப்பகுதியில் உள்ள அன்னிய மரக்கன்றுகளை அகற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் சதீஷ் குமார், பரத் சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, தமிழகத்தில் அன்னிய மரக்கன்றுகளை வளர்த்து விற்க நர்சரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த தடை உத்தரவை அறிவிப்பாணையாக வெளியிடவேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    அத்துடன், அன்னிய மரங்களை அப்புறப்படுத்தும் பணியை தமிழ்நாடு காகித நிறுவனத்திடம் ஒப்படைப்பது குறித்து 2 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.

    • அரசாணையை எதிர்த்து சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமமூர்த்தி பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
    • தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்ததைத் தொடர்ந்து, பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், முக கவசம் அணியாதவர்களிடம் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையை எதிர்த்து சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமமூர்த்தி பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

    அவர் தனது மனுவில், முக கவசம் அணிவதால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என்றும், சுவாச கோளாறு உள்ளிட்ட உடல்நல கோளாறுகளை ஏற்படுத்தும் என்றும் கூறியிருந்தார். மேலும் முக கவசம் அணியாவிட்டால் 500 ருபாய் அபராதம் விதிப்பது தவறு என்றும், 500 ரூபாய் என்பது குறைந்த தொகை அல்ல என்றும் கூறிய அவர், அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், போதிய ஆய்வுகள் எதுவும் இன்றி உரிய ஆவணங்கள் இல்லாமல் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக கூறி, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    • அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது கட்சி விதிகளுக்கு எதிரானது என ஓபிஎஸ் தரப்பு வாதம்
    • நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் எனக் கூறிவிட்டு மீண்டும் அந்த பதவியை உருவாக்கியது ஏன்? என நீதிபதி கேள்வி

    சென்னை:

    அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு முன் இந்த வழக்கு விசாரணை நடைபெறுகிறது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பும், எடப்பாடி பழனிசாமி தரப்பும் கோர்ட்டில் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்து வருகின்றனர்.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு ஒப்புதல் அளிக்காததால் செயல்பட முடியவில்லை என கூறுவது தவறு என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பொதுக்குழுவை கூட்டக்கோரி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் விண்ணப்பிக்க முடியும், இது சம்பந்தமான விதிகள் பின்பற்றப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது கட்சி விதிகளுக்கு எதிரானது. கட்சியினரின் விருப்பத்தை ஏற்று நிரந்தர பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருப்பார் என 2017ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

    அப்போது நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் எனக் கூறிவிட்டு மீண்டும் அந்த பதவியை உருவாக்கியது ஏன்? பொதுக்குழு கூட்டம் கட்சி விதிப்படி நடத்தப்பட்டதா என விளக்க வேண்டும் எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினர். பெரியாரை மட்டுமே தலைவராக ஏற்று கொள்வதாக கூறியே பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

    பொதுக்குழுவின்போது கட்சி விதிகளை பின்பற்றாமல் இருந்திருந்தால், நீதிமன்றமே உத்தரவு பிறப்பிக்கும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

    • மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மாணவியின் உடலை வாங்க பெற்றோர் மறுங்பதாக அரசு வழக்கறிஞர் முறையீடு
    • 3 பேர் கொண்ட ஜிப்மர் மருத்துவக் குழு பிரேத பரிசோதனை அறிக்கைகளை ஆய்வு செய்ய உத்தரவு

    சென்னை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடல் பிரேத பரிசோதனையின்போது, தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என மாணவியின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என தெரிவித்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு திரும்பப் பெறப்பட்டது.

    அதன்பின்னர் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி சதீஷ்குமார் முன்பு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முறையீடு செய்தார் . அப்போது மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மாணவியின் உடலை பெற்றோர் வாங்க மறுப்பதாகவும், உடலை வாங்க அவர்களுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, மாணவியின் உடல் பிரேத பரிசோதனை தொடர்பான அறிக்கைகள், மற்றும் பிரேத பரிசோதனையின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் ஆகியவற்றை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஒப்படைக்க வேண்டும் என்றும், 3 பேர் கொண்ட ஜிப்மர் மருத்துவக் குழு, இந்த அறிக்கைகளை ஆய்வு செய்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும என்றும் உத்தரவிட்டார்.

    மேலும், மாணவியின் உடலை நாளை காலை 11 மணிக்குள் பெற்றுக்கொண்டு கண்ணியமாக உடலை அடக்கம் செய்யும்படி பெற்றோருக்கு நீதிபதி உத்தரவிட்டார். உடலை பெற்றுக்கொள்வது தொடர்பாக இன்று மதியம் 12 மணிக்குள் முடிவை தெரிவிக்க வேண்டும் என்றும் பெற்றோர் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார். நாளை 11 மணிக்குள் உடலை பெற்றுக்கொள்ளாவிட்டால் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

    • மாணவி மரணம் தொடர்பாக பள்ளி தாளாளர், முதல்வர், செயலாளர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • மறு பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என ஐகோர்ட் நீதிபதி உத்தரவு

    சென்னை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பெரும் போராட்டம் நடந்து வருகிறது. நேற்று நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மாணவியின் மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர், முதல்வர், செயலாளர் மற்றும் 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யக்கோரி, அவரது தந்தை தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மாணவியின் பிரேத பரிசோதனை தகுதியில்லாத மருத்துவர்களால் செய்யப்பட்டுள்ளது, எனவே மறுபிரேத பரிசோதனைக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி சதீஷ்குமார், தகுதியில்லாத மருத்துவர்கள் என எப்படி சொல்லலாம்? நீங்கள் இத்துறையின் நிபுணரா? என கேள்வி எழுப்பினார். அதேசமயம், இதுபோன்ற இயற்கைக்கு முரணான மரணங்கள் தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    மேலும் மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவு பிறப்பித்த நிதிபதி, பிரேத பரிசோதனைக்கு பின் மனுதாரர் வேறு எந்த பிரச்சினையும் செய்யாமல் மாணவியின் உடலைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

    'மறு பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும், சமூக வலைத்தளங்கள், மீடியா டிரையல் நடத்த அனுமதிக்கக்கூடாது. மறு பிரேத பரிசோதனையின்போது மனுதாரர் தனது வக்கீலுடன் இருக்கலாம் ' என்றும் நீதிபதி தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நேற்று நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது.
    • சட்டத்தை யாரும் கையில் எடுக்க முடியாது என உயர் நீதிமன்ற நீதிபதி கண்டனம்

    சென்னை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் பிளஸ்2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதியின் மரணம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நேற்று நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. பள்ளியை அடித்து நொறுக்கிய போராட்டக்காரர்கள், அங்கிருந்த பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைத்தனர். பள்ளியின் அனைத்து ஆவணங்களும் தீக்கிரையாகின. இது தொடர்பாக 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே உயிரிழந்த மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யக்கோரி அவரது தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.



    அப்போது, மாணவியின் பிரேத பரிசோதனை தகுதியில்லாத மருத்துவர்களால் செய்யப்பட்டுள்ளது, எனவே மறுபிரேத பரிசோதனைக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தகுதியில்லாத மருத்துவர்கள் என எப்படி சொல்லலாம்? நீங்கள் நிபுணரா? என மனுதாரருக்கு கேள்வி எழுப்பினார்.

    மேலும் நிதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். நீதிபதி கூறியதாவது:-

    சட்டத்தை யாரும் கையில் எடுக்க முடியாது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்? போராட்டம் நடத்த அனுமதித்தது யார்? மாணவியின் இறப்புக்கு என்ன காரணம்? இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

    இது திடீர் கோபத்தில் வெடித்த வன்முறையல்ல: திட்டமிட்டு நடத்தப்பட்டது போல் தெரிகிறது. வன்முறையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை சிறப்புப் படை அமைத்து கண்டுபிடிக்க வேண்டும். வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும்.

    இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.

    தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மாற்றம் என்பது பொதுநலன் அடிப்படையிலா அல்லது சிறந்த நீதி பரிபாலனத்துக்கா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளதாக வழக்கறிஞர்கள் கூறி உள்ளனர்.
    சென்னை:

    சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் முடிவு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதேபோல, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்து வரும் முனீஸ்வர் நாத் பண்டாரியை, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

    இந்நிலையில், சென்னை உயர்  நீதிமன்ற தலைமை நீதிபதியை மேகாலயாவுக்கு மாற்றுவதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

    சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி இடமாற்ற பரிந்துரையை திரும்பப் பெற வேண்டும் என சென்னை பார் அசோசியேஷன் மூத்த வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற கொலிஜியத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்ற கொலிஜியத்தில் அங்கம் வகிக்கும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா உள்ளிட்ட ஐந்து நீதிபதிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

    அதில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி பதவியேற்று 10 மாதங்கள் கடந்துள்ள நிலையில், அவரது மாற்றம் என்பது பொதுநலன் அடிப்படையிலா அல்லது சிறந்த நீதி பரிபாலனத்துக்கா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    எந்த பாகுபாடும் இல்லாமல் துணிச்சலாக செயல்படும் நீதிபதியை முக்கியத்துவம் இல்லாத இடத்துக்கு மாற்றுவது என்பது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட காலத்தில் நடந்தது எனவும், இந்த மாற்றம் என்பது நீதிபதியின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி இடமாற்ற பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வழக்கறிஞர்கள் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

    சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் இடமாறுதலை ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.
    தீயினால் சேதமடைந்து பின்னர் முழுவதும் இடிக்கப்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டுமான பணிக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. #ChennaiSilks
    சென்னை:

    சென்னை தி நகரில் இருந்த சென்னை சில்க்ஸ் கட்டிடம் கடந்தாண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த சேதமடைந்தது. பின்னர், கட்டிடம் முழுமையாக இடிக்கப்பட்டது. தற்போது, அங்கு புதிய கட்டிடத்தை கட்டும் பணி நடந்து வருகிறது.

    இது தொடர்பான வழக்கை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள், “எதன் அடிப்படையில் கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது?” என அரசுக்கு கேள்வி எழுப்பினர். 

    கட்டட அனுமதி வழங்கிய பின்னர் 20 நாளில் 40% கட்டடம் கட்டப்பட்டது ஆச்சரியமளிக்கிறது என கூறிய நீதிபதிகள், கட்டுமான பணிக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். இது தொடர்பாக அரசு பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்துள்ளது. #GutkaScam #CBI
    புதுடெல்லி:

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா தொடர்ந்து விற்பனை செய்யப்படுவதாகவும், அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் குட்கா நிறுவனம் மூலம் லாபம் பெற்றதாகவும். எனவே இந்த வழக்கை அதை சி.பி.ஐ. விசாரிக்க பவேண்டும் என திமுக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    இதனை விசாரித்த நீதிபதிகள் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டனர். ஆனால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவக்குமார் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார். அவரது மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் பாலி நாரிமன், கவில்ன்கர், சிபிஐ விசாரிக்க தடையில்லை என்று கூறி சிவக்குமாரின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
    ×