search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளக்குறிச்சி மாணவி மரணம்"

    • கடந்த ஆண்டு ஜூலை 17-ந்தேதி பள்ளி வளாகத்தில் கலவரம் வெடித்தது.
    • கலவரத்தை தொடர்ந்து சுமார் 600 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.

    விழுப்புரம்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரியநெசலூரை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மாணவி ஸ்ரீமதி பள்ளியின் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால், அவரது தாய் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறினார்.

    இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 17-ந்தேதி பள்ளி வளாகத்தில் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தை தொடர்ந்து சுமார் 600 பேர் வரை கைது செய்யப்பட்டனர். மாணவி உயிரிழந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கினை ஆகஸ்ட் 22-ந்தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • மாணவி பயன்படுத்திய செல்போன் விசாரணைக்காக ஒப்படைக்கவில்லை என்று காவல்துறை கூறியது
    • செல்போனை காவல்துறையிடம் ஒப்படைக்க முடியாது என பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தில் நியாயமான விசாரணை கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்திருந்தார். இந்த  வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது காவல் துறையின் விசாரணை அறிக்கை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டது. 4 முறை சம்மன் அனுப்பியும் மாணவி பயன்படுத்திய செல்போன் விசாரணைக்காக இன்னும் ஒப்படைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் தனது மகள் செல்போன் வைத்திருக்கவில்லை எனவும், விடுதி காப்பாளரின் செல்போனில் இருந்தே பேசியதாகவும் ராமலிங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, செல்போனை ஒப்படைப்பதில் என்ன பிரச்சினை உள்ளது? செல்போனை ஒப்படைக்கவில்லை என்றால் விசாரணை எப்படி நிறைவடையும்? என்று கேள்வி எழுப்பினார். மேலும், ஆதாரம் இருந்தும் அதனை மறைத்தால் சட்டப்படி குற்றம், அதற்காக பெற்றோரை விசாரிக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். செல்போன் இருந்தால் உடனடியாக அதனை காவல்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

    இந்நிலையில், மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் இன்று உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி, மாணவி பயன்படுத்திய செல்போனை காவல்துறையிடம் ஒப்படைக்க முடியாது எனவும், அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாவவும், இதற்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    இதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். செல்போனை அரசு வழக்கறிஞர் தரப்பில் பெற்றுக்கொள்ள முடியாது என்றும், விசாரணை நடத்தும் காவல்துறையிடம்தான் ஒப்படைக்க வேண்டும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

    இதையடுத்து, வழக்கை புலன் விசாரணை செய்து வரும் காவல்துறையிடம் செல்போனை வழங்கினால் உதை உடனடியாக தடயவியல் சோதனைக்கு அனுப்பி, அறிக்கை பெற முடியும் என்று நீதிபதி தெரிவித்ததுடன், மாணவியின் தந்தை முன்வைத்த கோரிக்கையை நிராகரித்தார். மேலும், தாமதிக்காமல் செல்போனை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பெற்றோர் தரப்புக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

    • நான்கு முறை சம்மன் அனுப்பியும் மாணவி பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்கவில்லை என காவல்துறை தகவல்
    • ஆதாரம் இருந்தும் அதை மறைத்தால் அது சட்டப்படி குற்றம் என்று நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

    சென்னை:

    கள்ளகுறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் அவரது தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம், மாணவி பயன்படுத்திய சொல்போனை விசாரணைக்காக ஒப்படைக்கும்படி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

    இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், இந்த வழக்கு தொடர்பான அறிக்கையை மூடி முத்திரயிடப்பட்ட உறைகள் மூலம் தாக்கல் செய்யப்பட்டது. நான்கு முறை இந்த வழக்கு சம்பந்தமாக சம்மன் அனுப்பியும் மாணவி பயன்படுத்திய செல்போனை விசாரணைக்காக இன்னும் ஒப்படைக்கவில்லை என்றும், இன்னும் இரண்டு மாதங்களில் இந்த விசாரணையானது முடிவடையும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அப்போது குறுக்கிட்ட ராமலிங்கம் தரப்பு வழக்கறிஞர், பள்ளி தாளாளர் உள்ளிட்டோரின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகவும், பிரேத பரிசோதனை வீடியோ பதிவு மற்றும் ஜிப்மர் மருத்துவமனையின் அறிக்கை தங்களுக்கு அளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், மாணவி ஸ்ரீமதி செல்போன் வைத்திருக்கவில்லை என்றும் விடுதி வார்டன் செல்போனில் இருந்துதான் பேசியதாகவும் ராமலிங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி, செல்போனை ஒப்படைப்பத்தில் என்ன பிரச்சனை இருக்கிறது கேட்டதுடன், செல்போனை ஒப்படைக்காவிட்டால் விசாரணை எப்படி நிறைவடையும்? என்று கேள்வி எழுப்பனார். மேலும் மாணவி பயன்படுத்திய செல்போன் இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்வியையும் நீதிபதி எழுப்பினார்.

    இது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதாக மாணவியின் தந்தை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆதாரம் இருந்தும் அதை மறைத்தால் அது சட்டப்படி குற்றம் என்றும், அதற்காக விசாரணை நடத்தும்படி உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

    இதையடுத்து செல்போன் இருந்தால் அதை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று கூறிய நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி முதல் வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளார்.

    • மாணவிக்கு உடலில் ஏற்பட்ட காயங்கள் குறித்து நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
    • மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், உடல்கூறு ஆய்வில் தெரிவிக்கப்பட்ட விவரங்களை எடுத்துரைத்தார்.

    புதுடெல்லி:

    கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண விவகாரத்தில் பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை எதிர்த்து சுப்ரீம் கோர்டில் மாணவியின் தாயார் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வு விசாரித்தது.

    அப்போது மாணவிக்கு உடலில் ஏற்பட்ட காயங்கள் குறித்து நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், உடல்கூறு ஆய்வில் தெரிவிக்கப்பட்ட விவரங்களை எடுத்துரைத்தார். அப்போது, மாடியில் இருந்து குதித்ததால் கூட காயங்கள் ஏற்பட்டிருக்கும் தானே என்று நீதிபதிகள் கேட்டனர்.

    இதனை தொடர்ந்து மாணவியின் தாயார் மேல்முறையீட்டு மனு தொடர்பாக தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளியின் முதல்வர், தாளாளர், செயலாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

    • கள்ளக்குறிச்சி சைபர் க்ரைம் காவல்நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவை மேல் விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
    • 5 பேர் சம்பந்தப்பட்ட புலனாய்வு குழு அதிகாரிகள் முன்பு ஆஜரானார்கள். அவர்களை போலீசார் விசாரணை செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி இறப்பு தொடர்பாக உண்மைக்கு புறம்பான பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.

    இவர்கள் மீது கள்ளக்குறிச்சி சைபர் க்ரைம் காவல்நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவை மேல் விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

    இந்த வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த நவீன் குமார் (வயது28), திருப்பூர் மாவட்டம் சாமுண்டிபுரம் பகுதியைச் சேர்ந்த வடிவேல் (38), சென்னை 7 கிணறு பகுதியைச் சேர்ந்த முகமது ஷபி (32), சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (22), செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (21) ஆகிய 5 பேருக்கு குற்றவியல் நடைமுறை சட்டபடி சம்மன் அனுப்பினர்.

    அதன்படி 5 பேர் சம்பந்தப்பட்ட புலனாய்வு குழு அதிகாரிகள் முன்பு ஆஜரானார்கள். அவர்களை போலீசார் விசாரணை செய்தனர். பின்னர் அவர்களை அனுப்பி வைத்தனர்.

    • கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் சென்னை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
    • பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை ரத்து செய்யக்கோரியும் மாணவி ஸ்ரீமதியின் தாயார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

    புதுடெல்லி:

    கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கும் சென்னை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

    இதை எதிர்த்தும், பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை ரத்து செய்யக்கோரியும் மாணவி ஸ்ரீமதியின் தாயார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு வருகிற 26-ந்தேதி விசாரிக்கிறது.

    • சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார்.
    • 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை சிறை அலுவலர்கள் மூலம் அவர்களிடம் வழங்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இதைதொடர்ந்து கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் போலீஸ் வாகனங்கள் மற்றும் பள்ளியில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி தீயிட்டு கொளுத்திய வழக்கில் சின்ன சேலம் அருகே வி.மாமந்தூர் லட்சாதிபதி (வயது 34), பெரிய சிறுவத்தூர் சர்புதீன் (38), உலகங்கள் தான் கிராமத்தைச் சேர்ந்த சரண்ராஜ் (34), தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த மணி (44), ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் இவர்களின் தொடர் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து லட்சாதிபதி, சர்புதீன், சரண்ராஜ், மணி ஆகிய 4 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் உத்தரவிட்டார். அதன்படி 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை சிறை அலுவலர்கள் மூலம் அவர்களிடம் வழங்கப்பட்டது.

    • கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.
    • கலவரத்தின்போது பதிவான வீடியோ காட்சியினை வைத்து அடையாளம் கண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.

    அதன்படி வழக்கினை புலனாய்வு செய்யும் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் கலவரத்தின்போது வன்முறையில் ஈடுபட்டு பள்ளியின் சொத்துக்களை சேதப்படுத்திய சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே வலையமாதேவி கிராமத்தைச் சேர்ந்த அருண் (வயது 24), அதே பகுதியைச் சேர்ந்த எழிலரசன் (20) மற்றும் கலவரத்தின் போது போலீசார் மீது கற்களை வீசி தாக்கி வன்முறையில் ஈடுபட்ட சின்னசேலம் அருகே தென்செட்டியந்தல் கிராமத்தைச் சேர்ந்த மோகன் (30), சின்னசேலம் அருகே பங்காரம் கிராமத்தைச் சேர்ந்த முத்துலிங்கம் வயது (37) ஆகிய 4 பேரையும் சம்பவத்தின்போது பதிவான வீடியோ காட்சியினை வைத்து அடையாளம் கண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • மாணவ-மாணவிகள் நலன்கருதி வகுப்புகள் நடத்த அரசு நடவடிக்கை எடுத்தது.
    • 9,10,11, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு கனியாமூர் அருகே வாசுதேவநல்லூரியில் உள்ள தனியார் பி.எட்.கல்லூரியில் நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இதற்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது.

    இந்த கலவரத்தின் போது பள்ளிக்கு தீ வைக்கப்பட்டது. அதோடு பள்ளி வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது. இந்த கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகிறார்கள்.

    எனினும் மாணவ-மாணவிகள் நலன்கருதி வகுப்புகள் நடத்த அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி 9,10,11, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு கனியாமூர் அருகே வாசுதேவநல்லூரியில் உள்ள தனியார் பி.எட்.கல்லூரியில் நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது. மற்ற மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கனியாமூர் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பள்ளியை உடனே திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

    இன்று காலை அவர்கள் கள்ளக்குறிச்சி வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பள்ளியை திறக்க கோரி கோஷம் போட்டனர். பெற்றோரின் திடீர் போராட்டத்தினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். அதன் பின்னர் மாணவ-மாணவிகளின் பெற்றோர் கலெக்டரை சந்தித்து மனு வழங்கிவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக அவதூறான தவறான தகவல்களை பரப்பியவர்கள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    • யூடியூப் சேனல்கள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். வாட்ஸ்அப், பேஸ்புக்கில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி, அந்த பள்ளியின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கலவர வீடியோவை ஆதாரமாக வைத்து சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக அவதூறான தவறான தகவல்களை பரப்பியவர்கள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக யூடியூப் சேனல்கள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். வாட்ஸ்அப், பேஸ்புக்கில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி, டி.ஜி.பி. ஆபீசில் இன்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், 'எனது மகளின் மரணம் தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றில் தொடர்ந்து அவதூறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன" என்று குற்றம்சாட்டி உள்ளார்.

    ஸ்ரீமதி பற்றியும் தனது குடும்பத்தினர் பற்றியும் தனிப்பட்ட முறையில் அவதூறு கருத்துக்களை யூடியூப் சேனல் தெரிவித்து வருவதாகவும், எனவே உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஸ்ரீமதியின் தாய் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக விசாரணை நடத்தி அந்த யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    • தமிழகத்திலேயே சிறைத்துறை அதிகாரிகள் தான் பயங்கர அச்சுறுத்தலோடு பணியாற்றி வருகின்றனர்.
    • போதை குற்றவாளிகள் தமிழக அரசு சார்பில் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் இன்று சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலை துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி கனியாமூர் விவகாரத்தில் பள்ளி தாளாளர் உள்ளிட்ட ஐந்து பேர் ஜாமீனில் வெளியே வந்த விவகாரம் தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து ஜாமீனை ரத்து செய்வதற்கு மேல்முறையீடு செய்யப்படும்.

    தமிழகத்திலேயே சிறைத்துறை அதிகாரிகள் தான் பயங்கர அச்சுறுத்தலோடு பணியாற்றி வருகின்றனர். குற்றம் செய்து தண்டனை பெற்றவர்கள் மட்டுமே சிறையில் உள்ளதால் அவர்கள் எதற்கும் துணிந்தவர்களாக உள்ளனர்.

    இவர்கள் சிறையில் இருந்து வெளியே ஆட்களை ஏவி விட்டு பல்வேறு குற்ற செயல்களை செய்வதற்கு தயங்குவதில்லை. மிகுந்த அச்சுறுத்தலோடு பணியாற்றி வரும் சிறைத்துறை காவலர்கள் மற்றும் அதிகாரிகளை பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    ஆறுமுகசாமி அறிக்கை குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சட்ட வல்லுனர்களின் ஆலோசனை பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களோடு ஆலோசனை பெற்று மேல் நடவடிக்கை எடுத்த பின்னர் அதன் அறிக்கை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

    தமிழகத்தில் போதை பொருட்களின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். போதைப் பொருட்களின் நடமாட்டம் குறித்து மட்டுமே அவர் கூறியுள்ளார்.

    போதை பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அவர் எதுவும் கூறவில்லை. போதை குற்றவாளிகள் தமிழக அரசு சார்பில் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பள்ளி கலவர வழக்கில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் பிரபுவை முதல் குற்றவாளியாக சேர்த்து, அவரை போலீசார் கைது செய்தனர்.
    • கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் பிரபுவை முதல் குற்றவாளியாக அறிவித்து எப்.ஐ.ஆரை திருத்தி பதிவு செய்துள்ளதாக வக்கீல் வாதிட்டார்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

    இதையடுத்து பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். அந்த போராட்டம் கலவரமாக மாறி பள்ளியை பொதுமக்களே சூறையாடினர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. போலீஸ், தீயணைப்பு வாகனங்கள், பள்ளி வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டது.

    இதுகுறித்து சின்னசேலம் போலீசார், வழக்குப்பதிவு செய்து பலரை கைது செய்தனர். இந்த வழக்கில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் பிரபுவை முதல் குற்றவாளியாக சேர்த்து, அவரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் பிரபு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    மனுதாரர் சார்பில் வக்கீல் டி.அருண் ஆஜராகி, மனுதாரர் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட செய்யவில்லை. வாட்ஸ்-அப் குரூப் நிர்வாகியும் இல்லை. வழக்குப்பதிவு செய்யும்போது, அவர் பெயரை குறிப்பிடவில்லை. பின்னர், அவரை முதல் குற்றவாளியாக அறிவித்து எப்.ஐ.ஆரை திருத்தி பதிவு செய்துள்ளனர். இந்த கலவரத்துக்கும், மனுதாரருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வாதிட்டார். இதையடுத்து, மனுதாரருக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

    ×