search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கனியாமூர் பள்ளி சம்பவம்- சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்பியதாக 5 பேரிடம் விசாரணை
    X

    கனியாமூர் பள்ளி சம்பவம்- சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்பியதாக 5 பேரிடம் விசாரணை

    • கள்ளக்குறிச்சி சைபர் க்ரைம் காவல்நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவை மேல் விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
    • 5 பேர் சம்பந்தப்பட்ட புலனாய்வு குழு அதிகாரிகள் முன்பு ஆஜரானார்கள். அவர்களை போலீசார் விசாரணை செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி இறப்பு தொடர்பாக உண்மைக்கு புறம்பான பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.

    இவர்கள் மீது கள்ளக்குறிச்சி சைபர் க்ரைம் காவல்நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவை மேல் விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

    இந்த வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த நவீன் குமார் (வயது28), திருப்பூர் மாவட்டம் சாமுண்டிபுரம் பகுதியைச் சேர்ந்த வடிவேல் (38), சென்னை 7 கிணறு பகுதியைச் சேர்ந்த முகமது ஷபி (32), சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (22), செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (21) ஆகிய 5 பேருக்கு குற்றவியல் நடைமுறை சட்டபடி சம்மன் அனுப்பினர்.

    அதன்படி 5 பேர் சம்பந்தப்பட்ட புலனாய்வு குழு அதிகாரிகள் முன்பு ஆஜரானார்கள். அவர்களை போலீசார் விசாரணை செய்தனர். பின்னர் அவர்களை அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×