search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கனியாமூர் பள்ளி கலவரத்தில் ஈடுபட்ட 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
    X

    கனியாமூர் பள்ளி கலவரத்தில் ஈடுபட்ட 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

    • சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார்.
    • 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை சிறை அலுவலர்கள் மூலம் அவர்களிடம் வழங்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இதைதொடர்ந்து கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் போலீஸ் வாகனங்கள் மற்றும் பள்ளியில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி தீயிட்டு கொளுத்திய வழக்கில் சின்ன சேலம் அருகே வி.மாமந்தூர் லட்சாதிபதி (வயது 34), பெரிய சிறுவத்தூர் சர்புதீன் (38), உலகங்கள் தான் கிராமத்தைச் சேர்ந்த சரண்ராஜ் (34), தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த மணி (44), ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் இவர்களின் தொடர் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து லட்சாதிபதி, சர்புதீன், சரண்ராஜ், மணி ஆகிய 4 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் உத்தரவிட்டார். அதன்படி 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை சிறை அலுவலர்கள் மூலம் அவர்களிடம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×