என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு"

    • சின்னசேலம் அடுத்த கனியாமூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
    • சிசிடிவி ஆதாரங்களில் சந்தேகத்திற்கிடமாக எதுவும் இல்லை.

    கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் வசித்த 17 வயது சிறுமி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர், கடந்த 13-7-20222-ந்தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு, ஜூலை 17-ம் தேதி மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

    இதனிடையே, மாணவி மர்மம் தொடர்பான வழக்கு விசாரணை முறையாக நடைபெறவில்லை என மாணவியின் தாய் கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இம்மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

    விசாரணை சட்டப்படி நடைபெற்றது. சிசிடிவி ஆதாரங்களில் சந்தேகத்திற்கிடமாக எதுவும் இல்லை. விசாரணையில் தவறு காணப்படவில்லை என கூறிய நீதிபதி, தற்கொலை செய்து கொண்டதற்கான முகாந்திரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் ஏற்கனவே கூறியிருப்பதால் இம்மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தனர்.

    3 ஆண்டுகளாக மனு மீது விசாரணை நடைபெற்ற நிலையில் வழக்கை தள்ளுபடி செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • 4 வாரங்களுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் முன்பு கையெழுத்திட வேண்டும்.
    • விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் ரூ.10 ஆயிரம் செலுத்தி, அதே தொகைக்கு இருநபர் உத்தரவாதம் அளிக்கவும் உத்தரவு.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தை அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை மாதம் 13-ந் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்தார்.

    இதையடுத்து பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது. குறிப்பாக, பள்ளி மாணவ, மாணவிகளின் டி.சி., மதிப்பெண் சான்றிதழ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பள்ளி வாகனங்கள், காவல் துறை வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கல்வீச்சு தாக்குதலில் போலீசார் காயம் அடைந்தனர்.

    இந்தநிலையில், இறந்த மாணவி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி தலைமை ஆசிரியர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரையும் சின்னசேலம் போலீசார் கைது செய்தனர்.

    இதில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், தலைமை ஆசிரியர் சிவசங்கரன் ஆகியோர் சேலம் மத்திய சிறையிலும், செயலாளர் சாந்தி, வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 3 பேரும் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

    இவர்கள் 5 பேருக்கும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை கீழ்கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் அவர்கள் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி முன்பு கடந்த 26-ந்ேததி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், பள்ளித் தாளாளர் உள்பட 5 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

    பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, தலைமை ஆசிரியர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரும் விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் ரூ.10 ஆயிரம் செலுத்தி, அதே தொகைக்கு இருநபர் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

    பின்னர் ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகிய இருவரும் சேலத்தில் தங்கியிருந்து செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையத்திலும், தாளாளர் உள்ளிட்ட 3 பேர் மதுரையில் தங்கியிருந்து தல்லாகுளம் போலீஸ் நிலையத்திலும் 4 வாரத்துக்கு கையெழுத்திட வேண்டும். அதன்பிறகு 4 வாரங்களுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் முன்பு கையெழுத்திட வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.

    இதையடுத்து அவர்களுக்கான ஜாமீன் உத்தரவு மற்றும் விழுப்புரம் கோர்ட் வழங்கிய பினைய பத்திரங்களை சேலம் மத்திய சிறை அதிகாரிகளிடம் வழக்கு விசாரணை தொடர்பான அதிகாரிகள் மற்றும் போலீசார் வழங்கினர். அவை அனைத்தும் சேலம் சிறை அதிகாரிகளால் சரி பார்க்கப்பட்டது.

    இதையடுத்து சேலம் சிறையில் இருந்த பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, தலைமை ஆசிரியர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் காரில் அழைத்து சென்றனர். இதையொட்டி சேலம் மத்திய சிறை முன்பு இன்று காலை முதலே கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

    ×