search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூரியன்"

    • பொங்கல் தினத்தன்று மறக்காமல் சூரிய வழிபாடு செய்ய வேண்டும்.
    • சூரிய நாராயண பூஜைக்குக் கோலம் போட வேண்டிது மிகவும் அவசியம்.

    பொங்கல் தினத்தன்று மறக்காமல் சூரிய வழிபாடு செய்ய வேண்டும்.

    பொங்கலிட்டு முடிந்ததும் செய்ய வேண்டிய பூஜை விவரம் வருமாறு:-

    சூர்ய நாராயண பூஜை செய்யும் போது சர்க்கரைப்பொங்கல், உளுந்து வடை, சாதம், பருப்பு, கறி வகைகள், செய்து தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், கரும்பு வைத்து சூரியனுக்கு நைவேத்யம் செய்ய வேண்டும்.

    சூரிய பூஜை திறந்த வெளி அதாவது முற்றத்திலோ அல்லது மாடியிலேயோ செய்ய வேண்டும்.

    பொங்கல் அன்று சாம்பார், மோர்க்குழம்பு செய்யக்கூடாது. கூட்டு செய்யலாம்.

    பூஜை முடிந்த பிறகு ஒரு கிண்ணத்தில் சர்க்கரைப்பொங்கல், மற்றும் சமைத்திருக்கும் யாவற்றையும் போட்டு, பால்விட்டு, கலந்து வீட்டில் உள்ள யாவரும் "பொங்கலோ பொங்கல்" என்று கூவி வீட்டின் நான்கு திக்குகளிலும், காக்கைக்கும் வைக்க வேண்டும்.

    இதற்கு பின்னர் பூஜை கிடையாது.

    சூரிய நாராயண பூஜைக்குக் கோலம் போட வேண்டிது மிகவும் அவசியம்.

    • உதாரணமாக கன்னி மாதம் என்கிற புரட்டாசியில் சூரியன் வருணனாக காட்சியளிக்கிறார்.
    • யுகத்தின் முடிவில் இந்த 12 சூரியர்களும் ஒரே சமயத்தில் உதிப்பார்களாம்.

    சூரியனின் பன்னிரெண்டு வடிவங்கள் பின்வருமாறு:-

    மேஷம் -இந்திரன்,

    ரிஷபம் -தாதா,

    மிதுனம் - பகன்

    கடகம் - மித்திரன்

    சிம்மம் - சகாயன்

    கன்னி -வருணன்

    துலாம் - அர்யமா

    விருச்சிகம் -அர்ச்சிஸ்

    தனுசு - விவஸ்வான்

    மகரம் -த்வஷ்டா

    கும்பம் -ஸவிதா

    மீனம் -விஷ்ணு

    பன்னிரெண்டு ராசிகளில் சூரியன் ஒவ்வொரு ராசியிலும் சஞ்சரிக்கும்போது ஒவ்வொரு வடிவில் தரிசனம் தருகிறார்.

    உதாரணமாக கன்னி மாதம் என்கிற புரட்டாசியில் சூரியன் வருணனாக காட்சியளிக்கிறார்.

    யுகத்தின் முடிவில் இந்த 12 சூரியர்களும் ஒரே சமயத்தில் உதிப்பார்களாம்.

    சூரியன் ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் 1 மாதம் ஆகும். ஒரு ராசி என்பது 30 பாகை கொண்டதாகும்.

    சூரியன் மேஷ ராசியில் நுழையும் தினமே புதுவருடப் பிறப்பு தினமாகும்.

    பன்னிரு ராசிகளில் சூரியன் பன்னிரு வடிவங்களில் காட்சி அளிக்கிறார்.

    • ஈசனிடம் அருள் பெற்ற இந்த சூரியன் "மயூகாதித்யர்" என்று போற்றப்பட்டார்.
    • இந்த ஆலயம் கங்கைக்கரையோரம் உள்ள பஞ்சகங்கா காட் அருகில் உள்ளது.

    முன்னொரு காலத்தில் சூரிய பகவான் காசி திருத்தலத்தில் ஈசனையும், உமையையும் ஸ்ரீமங்களகவுரி,

    ஸ்ரீகபஸ்தீஸ்வரர் என்ற திருப்பெயருடன் பிரதிஷ்டை செய்து சுமார் ஒரு லட்சம் ஆண்டுகள் கடுமையாகத் தவம் புரிந்தார்.

    சூரியனின் தவத்தினை போற்றிய சிவபெருமான் சூரியனுக்கு மயூகன் என்று பெயர் சூட்டி, சூரியன் கேட்ட வரத்தை அருளினார்.

    ஈசனிடம் அருள் பெற்ற இந்த சூரியன் "மயூகாதித்யர்" என்று போற்றப்பட்டார்.

    இந்த ஆலயம் கங்கைக்கரையோரம் உள்ள பஞ்சகங்கா காட் அருகில் உள்ளது.

    சூரிய ஹோரையின் பலன்கள்

    உத்தியோகம், வியாபாரம் செய்ய ஒருவருடைய தயவு பெற ஒதடதியோகஸாட உயில் சாசனம் முதலியவைகள் செய்வதற்கு நலம்.

    இந்த நேரத்தில் சூரிய பகவானை வழிபட்டு அவரை நினைத்து பிரார்த்தனை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    ஹோரையின் கால அளவு 1 மணி நேரம் ஆகும்.

    • கங்கை நதி காசிக்குள் பிரவேசித்ததை அறிந்த சூரிய பகவான், கங்கையையும் வழிபட்டுப் பேறுகள் பெற்றான்.
    • இங்குள்ள சூரிய பகவானை “கங்காதித்யர்” என்று போற்றுவர்.

    பகீரதன், தன் மூதாதையர் புனிதமடைவதற்காக கடுமையாக தவம் புரிந்து பூலோகத்திற்கு கங்கை நதியை வரவழைத்தான்.

    அந்த வேளையில் சூரிய பகவான் பூமிக்கு வந்து காசி விஸ்வநாதரை வழிபட்டு கொண்டிருந்தான்.

    கங்கை நதி காசிக்குள் பிரவேசித்ததை அறிந்த சூரிய பகவான், கங்கையையும் வழிபட்டுப் பேறுகள் பெற்றான்.

    அதன் நினைவாக காசி திருத்தலத்தில் லலிதாகாட் படித்துறை அருகில் ஒரு சூரியன் ஆலயம் உள்ளது.

    இங்குள்ள சூரிய பகவானை "கங்காதித்யர்" என்று போற்றுவர்.

    ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹிரண்யகர்ப்ப மரீசிப்யா மரீசிப்யா நம!

    1. ஓம் ஸ்ரீகணேசாய நம:

    2. ஓம் ஸ்ரீ குருப்யோ நம:

    3. ஓம் ஹ்ராம் மித்ராய நம:

    4. ஓம் ஹ்ரீம் ரவயே நம:

    5. ஓம் ஹ்ரூம் சூர்யாய நம:

    6. ஓம் ஹ்ரைம் பானவே நம:

    7. ஓம் ஹ்ரௌம் ககாய நம:

    8. ஓம் ஹ்ர பூஷ்ணே நம:

    9, ஓம் ஹ்ராம் ஹிரண்யகர்ப்பாய நம:

    10. ஓம் ஹ்ரீம் மரீசயே நம:

    11. ஓம் ஹ்ரூம் ஆதித்யாய நம:

    12. ஓம் ஹ்ரைம் ஸவித்ரே நம:

    13. ஓம் ஹ்ரௌம் அர்க்காய நம:

    14. ஓம் ஹ்ர பாஸ்கராய நம:

    15. ஓம் ஹ்ராம் ஹ்ரீம் மித்ரரவிப்யாம் நம:

    16. ஓம் ஹ்ரூம் ஹ்ரைம் சூர்யபானுப்யாம் நம:

    17. ஓம் ஹ்ரௌம் ஹ்ரசக பூஷப்பயாம் நம:

    18. ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹிரண்யகர்ப்ப மரீசிப்யா மரீசிப்யா நம:

    19. ஓம் ஹ்ரூம் ஹ்ரைம் ஆதித்ய ஸவித்ரப்பாயாம் நம:

    20. ஓம் ஹ்ரௌம் ஹ்ர அர்க்க பாஸ்கராப்யாம் நம:

    21. ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரைம் மித்ர ரவி சூர்ய பானுப்யோ நம:

    22. ஓம் ஹ்ரௌம் ஹ்ர ஹ்ராம்ஹ்ரீம் கக பூஷ ஹிரண்யகர்ப்ப மரீசிப்யோ நம:

    23. ஓம் ஹ்ரூம் ஹ்ரைம் ஹ்ரௌம் ஹர ஆதித்ய ஸவித்ரார்க்க பாஸ்கரேப்யோ நம:

    24. ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரைம் ஹ்ரௌம் ஹ்ர மித்ர ரவிசூர்ய, பானு கக பூஷப்யோ நம:

    25. ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரைம் ஹரௌம் ஹிரண்ய கர்ப்ப மரீசி ஆதித்ய ஸவித்ர அர்க்க பாஸ்கரேப்யோ நம:

    26. ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரௌம் ஹர மித்ர ரவி சூர்ய பானு கக பூஷ ஹிரண்யகர்ப்ப மரீசி ஆதித்ய ஸவித்ர அர்க்க பாஸ்கரேப்யோ நம:

    27. பானோ பாஸ்கர மார்த்தாண்ட கண்ட ரச்மீ ப்ரபாகரா ஆயுர் ஆரோக்கிய ஐஸ்வர்ய பக்திம் தேஹி திவாகரா.

    • பஞ்ச பாஸ்கர ஸ்தலம் என்பது சூரியனை மையமாக வைத்து புராணங்களில் குறிப்பிட்டுள்ள ஸ்தலங்களாகும்.
    • வாரங்களில் முதல் நாளை ஞாயிறு என்றும், மாதங்களில் முதல் நாளை ஆதித்ய என்றும் குறிப்பிடுவார்கள்.

    1. ஞாயிறு - சென்னைக்கு அருகில்

    2. திருச்சிறுகுடி- நன்னிலம் அருகில்

    3. திருமங்களகுடி- ஆடுதுறை அருகில்

    4. திருப்பரிதி நியமம்- நீடாமங்கலம் அருகில்

    5. தலைஞாயிறு- திருவாரூர் அருகில்

    பஞ்ச பாஸ்கர ஸ்தலம் என்பது சூரியனை மையமாக வைத்து புராணங்களில் குறிப்பிட்டுள்ள ஸ்தலங்களாகும்.

    அதில் ஒன்று ஞாயிறு ஸ்தலம். சூரிய பகவான் பூசித்தால் இத்திருநாமம் பூண்டது.

    வாரங்களில் முதல் நாளை ஞாயிறு என்றும், மாதங்களில் முதல் நாளை ஆதித்ய என்றும் குறிப்பிடுவார்கள்.

    முதல் மாதமான சித்திரை முதல் நாளிலிருந்து 7 நாட்களுக்கு ஆதித்தன் அலை கடலெழுந்து தன் ஆயிரம் கிரணங்களால் ஈசன் அம்மை இருவருக்கும் பாதசேவை புரிவது போன்று காலடியில் ஒளியைப் படரவிட்டு இறைவி, இறைவன் இருவரையும் சூரிய பகவான் வணங்குகிறார்.

    ஒவ்வொரு தமிழ்ப் புத்தாண்டு தினத்திலும், தை மாதப் பிறப்பு அன்றும் சிறப்பு சூரிய வழிபாடு நடைபெறுகிறது.

    • ராமாயணத்தில் அகத்தியர் ராமருக்கு உபதேசித்த மந்திரம்-ஆதித்ய ஹிருதயம் யுத்த காண்டத்தில் வருகிறது.
    • இந்த மந்திரத்தை பாராயணம் செய்து சூரிய பகவானை வழிபட்டால் தொழு நோய் நீங்கும்.

    ராமாயணத்தில் அகத்தியர் ராமருக்கு உபதேசித்த மந்திரம்-ஆதித்ய ஹிருதயம் யுத்த காண்டத்தில் வருகிறது.

    ராமபிரான் இந்த மந்திரத்தை உபாசனை செய்து ராவணனை வென்றார்.

    இப்போதும் சூரிய உபாசனை செய்பவர்கள் பாராயணம் செய்கிறார்கள்.

    இத்தலத்தில் இந்த மந்திரத்தை உபாசனை செய்வது மிகவும் விசேஷம்.

    மகாபாரதத்தில் கிருஷ்ணனுடைய மகன் சாம்பன் சூரியனைப் பாடிய செய்யுள் ஐம்பது உள்ளது.

    ஸாம்ப பஞ்சாசத் இந்த மந்திரத்தை பாராயணம் செய்து சூரிய நமஸ்காரம் செய்து ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும், கண்பார்வையும் பெறுவதற்கு ஏற்ற மந்திரமாகும்.

    போஜ ராஜனின் சபையில் பாண கவியுடன் விளங்கிய மயூர கவியின் "சூரிய சதகம்" தனிச் சிறப்பு வாய்ந்தது.

    இந்த மந்திரத்தை பாராயணம் செய்து சூரிய பகவானை வழிபட்டால் தொழு நோய் நீங்கும்.

    அவ்வளவு வலிமை வாய்ந்த மந்திரமாகும்.

    • கண்களின் மூலம் சூரியனின் ஆற்றல் உடலுக்குள் சென்றடையும்.
    • கண் நோய் நீங்குதல் உள்ளிட்ட ஏராளமான பலன்களைப் பெறலாம்.

    சூரியனை உதய காலத்தில் வெறுங்கண்ணால் பார்த்து தரிசித்து சூரியனின் காயத்ரி, தியான மந்திரம், அஷ்டோத்ரம் ஆகியவற்றை சொல்லி வணங்க வேண்டும்.

    உதயகால சூரியன் அதிக வெப்பமின்றி, ஒளிக்கதிர்கள் இன்றி முழுவட்ட வடிவில் இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிப்பார், இத்தரிசனம் அளப்பறிய சூரிய ஆற்றலை பெற்றுத் தரும்.

    கண்களின் மூலம் சூரியனின் ஆற்றல் உடலுக்குள் சென்றடையும்.

    இதனால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்.

    ஆத்ம பலம், மன பலம், தேக பலம், எதிர்ப்பு சக்தி, நோய் நிவர்த்தி, எதையும் சந்திக்கும் மன தைரியம், ஆண்மை,

    வீரியம் அதிகரித்தல், அறிவாற்றல், நினைவாற்றல், சிந்தனாசக்தி அதிகரித்தல், நிர்வாகத்திறன் கூடுதல்,

    மனத்தூய்மை, முகத்தில் தேஜஸ் (ஒளி), வசீகரம், பேச்சாற்றல், எதிலும் வெற்றி பெறும் மன நிலை,

    நம்மால் முடியும் என்ற நம்பிக்கை, தாழ்வு மனப்பான்மை விலகுதல், ஆக்கப்பூர்வமான சிந்தனைகள்,

    எண்ணங்களுக்கு வலிமை உண்டாகும், சத்ருக்களை ஜெயித்தல், எத்தகைய பிரச்சினைகளிலிருந்தும்

    வெற்றி பெறுதல், கண் பார்வை சக்தி அதிகரித்தல், கண் நோய் நீங்குதல் உள்ளிட்ட ஏராளமான பலன்களைப் பெறலாம்.

    • தைப்பொங்கல் விழா தமிழர்களின் திருநாள்.
    • சூரிய பகவான் ஆன்மாவை பிரதிபலிப்பவன்.

    காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்

    பூசுர உலகோர் போற்றப் பொசிப்புடன் சுகத்தை நல்கும்

    வாசியேழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த

    தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி

    தைப்பொங்கல் விழா தமிழர்களின் திருநாள்.

    உழவர்களின் இன்பம் பொங்கும் பெருநாள்.

    பூமியில் இயற்கை வளங்களை நிலைக்கச் செய்து உயிரினங்களை வாழவைக்கும் சூரியபகவானுக்கு தமிழர்கள் நன்றி செலுத்தும் இனிய நன்நாள்.

    சூரிய பகவான் ஆன்மாவை பிரதிபலிப்பவன்.

    ஓருவருக்கு ஆத்மபலம் அமையவேண்டுமானால் சூரியபலம் ஜாதகத்தில் அமையவேண்டும்.

    தமிழர்கள் வாழும் நாடுகளில் பொங்கல் பண்டிகை, மிகவும் பிரபலமானது.

    பண்டைக் காலத்திலிருந்தே சூரிய வழிபாட்டை தமிழர்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர்.

    சூரியன் தரும் சாரத்தைக் கொண்டு நாம் விளைவித்த பயிர்களை அறுவடை செய்யும் நேரம் அது.

    அந்த அறுவடையை சூரியன் நமக்களிக்கும் காரணத்தால், அதற்கு நன்றி செலுத்தும் விதமாக சூரியனை நாம் வழிபடுகிறோம்.

    இதனால்தான் பொங்கல் பண்டிகை "உழவர் திருநாள்" என கொண்டாடப்படுகிறது.

    பொங்கல் திருநாளன்று பசும்பாலில் உலை வைத்து, அதில் புத்தரிசியும் புதுவெல்லமும் சேர்த்துப் பொங்கல் செய்து சூரியனுக்குப் படைக்கிறோம்.

    அச்சமயத்தில் புதிய அறுவடையாகக் கிடைக்கும் புதுமஞ்சள், புது இஞ்சி ஆகியவற்றைக் கொத்தோடு படைக்கிறோம்.

    வாழைப் பழம், வெற்றிலை, பாக்கு போன்றவற்றையும் ஆதவனுக்கு நிவேதனம் செய்து, அகம் மகிழ்கின்றோம்.

    பொங்கல் தினத்துக்கு முன் தினம், பழையன கழித்துப் புதியன புகுத்திப் போகிப் பண்டிகையும், மறுநாள் உழவுக்குத் துணை நின்ற மாடுகளுக்கான மாட்டுப் பொங்கல் மற்றும் கனு எனும் கன்னிப் பொங்கலும் இந்தியாவில் கொண்டாடப்படுகின்றன.

    • ரத சப்தமி புண்ணியம் மிக்க நாளாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
    • எருக்கன் இலை என்பது அருக்கன் இலை என்பதில் இருந்து மருவி வந்துள்ளது.

    ரத சப்தமி புண்ணியம் மிக்க நாளாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து கிழக்கு நோக்கி சூரியனை பார்த்து வணங்கியபின்,

    தாய், தந்தையரை வணங்கி ஆசி பெறுவது இந்துக்களின் முக்கிய வழிமுறையாகும்.

    அன்றைய தினம் குளிப்பதற்கு முன்பு ஏழு எருக்கம் இலைகளை தலை முதல் கை, தோள்பட்டைகள்,

    காதுகள் என வைத்து சூரிய பகவானை பிரார்த்தித்து தலையில் நீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

    எருக்கன் இலை என்பது அருக்கன் இலை என்பதில் இருந்து மருவி வந்துள்ளது.

    அருக்கன் என்றால் சூரியன்.

    இந்த இலையில் சூரியனின் சாரம் உள்ளது.

    எனவேதான் ஆண்டுக்கு ஒருமுறை எருக்கன் இலை வைத்து குளிக்கும் வழிபாடு ஏற்பட்டது.

    • சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் சஞ்சாரம் செய்வார்.
    • மகரராசியில் பிரவேசிக்கும் நாளை மகரசங்கராந்தி என்று பெயர்.

    சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் சஞ்சாரம் செய்வார்.

    மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிகளில் மூன்று ராசிகள் குறிப்பிடத்தக்கவை.

    சித்திரை மாதத்தில் மேஷராசியில் சூரியன் உச்ச பலத்தையும், ஐப்பசி மாதத்தில் சூரியன் பலவீனத்தையும் (நீச்சத்தன்மை) பெறுகிறார்.

    மகரராசியில் பிரவேசிக்கும் நாளை மகரசங்கராந்தி என்று பெயர்.

    இம்மாதத்தில் சூரியனுக்கு பகன் என்று பெயர்.

    தை மாதம் சூரியனை வழிபட்டவர்களுக்கு எல்லா வளங்களும், பால்பாக்கியமும் (பசுக்களால் யோகம்) உண்டாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    சூரியனுக்கு 12 பெயர்

    ஆதித்தன், பாஸ்கரன், ரவி, ஞாயிறு என்று சூரியனுக்கு பலபெயர்கள் உண்டு.

    ரஸ்மி புராணத்தில் சூரியனுக்கு பன்னிரண்டு பெயர்கள் சொல்லப்பட்டுள்ளது.

    மித்திரன், ரவி, சூரியன், பானு, ககான், பூஷ்ணன், ஹிரண்யகர்பன், மரீசி, ஆதித்யன், சவித்ரு, அர்க்கன், பாஸ்கரன் என்பவையே அவை.

    • அக்காலத்தில் மார்கழியில் பெரும்பாலும் அறுவடை முடிந்துவிடும்.
    • அதனால், உழவர்கள் கையில் தை மாதம் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

    அக்காலத்தில் மார்கழியில் பெரும்பாலும் அறுவடை முடிந்துவிடும்.

    அதனால், உழவர்கள் கையில் தை மாதம் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

    இதைப் பயன்படுத்தி கல்யாணச் செலவு செய்யலாம் என்பதால் தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழி உண்டானது.

    இப்பழமொழிக்கு வேறொரு பொருளும் சொல்வதுண்டு.

    வயலில் அறுவடை முடிந்து விட்டதால், பயிர்பச்சை இல்லாமல் வரப்பு நடப்பதற்கு ஏதுவாக காலியாக இருக்கும்.

    அதனையும் தைபிறந்தால் வழி பிறக்கும் என்பர்.

    ×