search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Gnayiru"

  • சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் சஞ்சாரம் செய்வார்.
  • மகரராசியில் பிரவேசிக்கும் நாளை மகரசங்கராந்தி என்று பெயர்.

  சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் சஞ்சாரம் செய்வார்.

  மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிகளில் மூன்று ராசிகள் குறிப்பிடத்தக்கவை.

  சித்திரை மாதத்தில் மேஷராசியில் சூரியன் உச்ச பலத்தையும், ஐப்பசி மாதத்தில் சூரியன் பலவீனத்தையும் (நீச்சத்தன்மை) பெறுகிறார்.

  மகரராசியில் பிரவேசிக்கும் நாளை மகரசங்கராந்தி என்று பெயர்.

  இம்மாதத்தில் சூரியனுக்கு பகன் என்று பெயர்.

  தை மாதம் சூரியனை வழிபட்டவர்களுக்கு எல்லா வளங்களும், பால்பாக்கியமும் (பசுக்களால் யோகம்) உண்டாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

  சூரியனுக்கு 12 பெயர்

  ஆதித்தன், பாஸ்கரன், ரவி, ஞாயிறு என்று சூரியனுக்கு பலபெயர்கள் உண்டு.

  ரஸ்மி புராணத்தில் சூரியனுக்கு பன்னிரண்டு பெயர்கள் சொல்லப்பட்டுள்ளது.

  மித்திரன், ரவி, சூரியன், பானு, ககான், பூஷ்ணன், ஹிரண்யகர்பன், மரீசி, ஆதித்யன், சவித்ரு, அர்க்கன், பாஸ்கரன் என்பவையே அவை.

  • அனுமனுக்கு பாடம் நடத்திய பெருமை சூரியனைச் சேரும்.
  • கோபமான வாயுவை இந்திரனும், சூரியனும் சமாதானப்படுத்தினர்.

  அனுமனுக்கு பாடம் நடத்திய பெருமை சூரியனைச் சேரும்.

  ஒருமுறை அனுமன் சூரியனைப் பழம் என்று நினைத்து வானமண்டலத்திற்கு தாவினார்.

  சூரியனின் இயக்கம் தடைபட்டு நின்றது.

  இதனால் உலகமே ஒருகணம் அசையாமல் நின்று போனது.

  விஷயத்தை அறிந்த இந்திரன், ஓடோடிவந்து அனுமனின் முகத்தில் தன் வஜ்ராயுதத்தால் ஓங்கியடித்தான்.

  மயங்கிய குழந்தை அனுமனைத் தாங்கிப்பிடித்தார் வாயுபகவான். (வாயுவின் மகனே அனுமன்).

  கோபமான வாயுவை இந்திரனும், சூரியனும் சமாதானப்படுத்தினர்.

  தன் தவறுக்கு பரிகாரமாக சூரியன் அனுமனுக்கு காயத்ரி மந்திரத்தை உபதேசித்ததுடன், இலக்கணங்களையும் கற்றுத் தந்தார்.

  அன்று முதல் அனுமன் சர்வவியாகரண பண்டிதன் என்னும் சிறப்புப் பெயர் பெற்றார்.

  வியாகரணம் என்றால் இலக்கணம்.

  • அயோத்தியை ஆண்ட வம்சம் சூரியவம்சம்.
  • கொடை வள்ளல் கர்ணனும் சூரியனின் பிள்ளையே.

  அயோத்தியை ஆண்ட வம்சம் சூரியவம்சம்.

  நீதி நேர்மை தவறாமல் ஆட்சிபுரியும் நல்லமன்னர்கள் பிறந்த குலம் இது.

  எவ்வளவு துன்பம் நேர்ந்தபோதும், உண்மையிலிருந்து விலகாமல் சத்தியம் பேசிய அரிச்சந்திரன்,

  சனிதோஷம் போக்கும் நளச்சக்கரவர்த்தி, பசுக்களுக்கு வாழ்வு தந்த திலீபச்சக்கரவர்த்தி,

  தசாவதாரங்களில் ஒருவராக வணங்கப்படும் ராமபிரான் ஆகியோர் சூரியகுலத்தில் தோன்றியவர்கள்.

  கொடை வள்ளல் கர்ணனும் சூரியனின் பிள்ளையே.

  சூரியனை வழிபட்டவர்கள் சூரியகுலத் தோன்றல்களான இந்த மன்னர்களின் நல்லாசியையும் பெறுவர் என்பது உறுதி.

  • பூலோகத்தைப் போல, தேவலோகத்திலும் பகல், இரவு உண்டு.
  • ஆறுமாதமாக தென்திசையில் பயணித்த சூரியன் வடதிசைக்கு திரும்பும் நாளே தைமுதல் நாள்.

  12 மாதங்களில் தை முதல் ஆனி வரையிலும் வடதிசையிலும், ஆடி முதல் மார்கழி வரையிலும் தென்திசையிலும் சூரியன் பயணிக்கிறார்.

  இதை உத்தராயணம், தட்சிணாயனம் என்று கூறுவர்.

  பூலோகத்தைப் போல, தேவலோகத்திலும் பகல், இரவு உண்டு.

  இதில் உத்தராயணகாலம் தேவர்களுக்கு பகல்பொழுதாகவும், தட்சிணாயணம் இரவாகவும் இருக்கும்.

  ஆறுமாதமாக தென்திசையில் பயணித்த சூரியன் வடதிசைக்கு திரும்பும் நாளே தைமுதல் நாள்.

  இந்த நாளையே மகரசங்கராந்தி என்பர். இந்நாளில் சூரியனை வழிபாடு செய்வதால் வாழ்வு செழிக்கும் என்று கூறுவர்.

  • உலகத்தின் இயக்கமே சூரியனின் இயக்கத்தைக் கொண்டு தான் நடக்கிறது.
  • ஓரறிவு முதல் ஆறறிவு வரை எல்லா உயிர்களுக்கும் ஜீவாதாரமாக சூரியன் திகழ்கிறது.

  உலகத்தின் இயக்கமே சூரியனின் இயக்கத்தைக் கொண்டு தான் நடக்கிறது.

  சூரியோதயத்திற்கு முன் காலையில் விழித்து அன்றாடக் கடமைகளைச் செய்யவேண்டும்.

  மனிதர் மட்டுமில்லாமல் எல்லா உயிர்களும் சூரியோதயத்தின் போது கண்விழிக்கின்றன.

  தாவரங்கள் சூரியஒளியின் துணையோடு ஒளிச்சேர்க்கையை நிகழ்த்துகிறது. பறவைகள் இரை தேடச் செல்கின்றன.

  மனிதர்கள் தங்கள் கடமையைச் செய்கின்றனர்.

  ஓரறிவு முதல் ஆறறிவு வரை எல்லா உயிர்களுக்கும் ஜீவாதாரமாக சூரியன் திகழ்கிறது.

  அதனால், வாரத்தின் முதல்நாளில் சூரியனுக்குரிய நாளாக ஏற்படுத்தினர்.

  தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் முதல் நூலான சிலப்பதிகாரத்தில் கடவுள் வாழ்த்தின் தொடக்கமே ஞாயிறு போற்றுதும் என்றே தொடங்குகிறது.

  மற்ற இயற்கை வழிபாடுகளான நிலா, மழை போன்ற தெய்வங்கள் சூரியனுக்கு பின்னரே குறிக்கப்படுகின்றன.

  • சூரியனுக்கு சஞ்சிகை, சாயாதேவி, சரூசினி போன்ற மனைவியர் பலர் உண்டு எனப் புராணங்கள் கூறுகின்றன.

  சூரியனுக்கு சஞ்சிகை, சாயாதேவி, சரூசினி போன்ற மனைவியர் பலர் உண்டு எனப் புராணங்கள் கூறுகின்றன.

  யமன், யமுனை, அசுவினிதேவர்கள், சனி, பத்திரை, பிருகு, வால்மீகர், கர்ணன், சுக்ரீவன் போன்ற புதல்வர்கள் உண்டு.

  சூரியன் வழிபட்ட சிவாலயங்கள்:

  பரிதி நியமம்,

  வைதீஸ்வரன் கோவில்,

  தலை ஞாயிறு மயேந்திரப்பள்ளி,

  மாந்துறை,

  மங்கலக்குடி,

  குடவாசல்,

  நெல்லிக்கா,

  ஆடானை,

  கண்டியூர்,

  சோற்றுத்துறை,

  மீயச்சூர்,

  மேலைத் திருக்காட்டுப்பள்ளி,

  திருச்சுழியல்,

  வலிவலம்,

  தேவூர்,

  வாய்மூர்,

  திருப்புனவாயில்,

  நன்னிலம்,

  பூந்துருத்தி,

  காஞ்சீபுரம்,

  கேதாரம்

  உள்பட இன்னும் பல சிவாலயங்களில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் சிவபெருமானை வழிபட்டு கிரகபதமும், ஆயிரம் கிரணங்களோடு விளங்கும் பேற்றினையும் பெற்றான்.

  சூரியன் சிவபெருமானது வலது கண்ணாகவும் திகழ்பவன்.

  • ஞாயிறு திருத்தலம் சென்னையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
  • சென்னையில் உள்ள நவக்கிரக தலங்களில் இந்த தலம் சூர்ய தலம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.

  ஞாயிறு கோவில் பற்றிய 25 பயனுள்ள தகவல்கள்

  1.ஞாயிறு திருத்தலம் சென்னையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

  செங்குன்றத்தில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் இருக்கிறது.

  2. சோழ மன்னர் கட்டிய இந்த கோவிலில் பல்லவ மன்னர்கள், சேர அரசர்கள், விஜயநகர மன்னர்கள் திருப்பணி செய்து வழிபட்டுள்ளனர்.

  3. இத்தலத்து ஈசன் தாமரைப்பூவில் இருந்து தோன்றியவர் என்பதால் புஷ்பரதேஸ்வரர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

  4. இத்தலத்தில் 14 செப்பு திருமேனிகள் உள்ளன.

  அவை அனைத்தும் சோழர் கால படைப்புகளாகும்.

  ஆலயத்தில் தனி அறையில் இந்த செப்பு சிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

  5. சென்னையில் உள்ள நவக்கிரக தலங்களில் இந்த தலம் சூர்ய தலம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.

  6. இங்குள்ள சூரிய பகவானுக்கு கோதுமை பொங்கல் அல்லது கோதுமை பாயாசம் படைத்து வழிபட்டால்

  கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் ஊடல்கள் தீரும்.

  பிரிந்து போன தம்பதிகளை மீண்டும் ஒன்று சேர்க்கும் ஆற்றலும் இத்தலத்துக்கு உண்டு.

  7. வேண்டுதல் நிறைவேறிய பிறகு இத்தலத்துக்கு வந்து சூரிய பகவானுக்கு வஸ்திரம் சார்த்தி வழிபாடு செய்கிறார்கள்.

  8. இத்தலத்தின் தலமரமாக நாகலிங்க மரம் உள்ளது. தல புஷ்பமாக செந்தாமரை மலர் போற்றப்படுகிறது.

  9. இத்தலத்துக்கு செல்லும் போது, பஞ்சேஷ்டி, ஆண்டார் குப்பம், சிறுவாபுரி ஆகிய இடங்களுக்கும் சென்று வரும்

  வகையில் பயணத்தை அமைத்துக் கொண்டால், அன்றைய தினம் மிகச்சிறந்த ஆன்மிக பயண தினமாக அமையும்.

  10. ஞாயிறு கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகள் ஒரு காலத்தில் செல்வ வளம் பெற்று திகழ்ந்தன.

  இதனால் அந்த பகுதி, 'ஞாயிறு நாடு' என்று பெயர் பெற்றிருந்தது.

  11. மூர்ததி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புகளும் ஒருங்கிணைந்த தலமாக ஞாயிறு தலம் உள்ளது.

  12. கருவறையில் மூலவர் புஷ்பரதேஸ்வர் பஞ்சாசனத்தில் அமர்ந்துள்ளார்.

  இவர் சுயம்புவாக தோன்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  13. சித்திரை மாதம் 1ந்தேதி முதல் 5ந்தேதி வரை ஈசன் மீதும் அம்பிகை மீதும் சூரிய ஒளிவிழும்.

  தமிழ்ப்புத்தாண்டை சூரிய பகவான் இத்தலத்து ஈசன் காலடியில் பட்டு ஆசி வாங்கி தொடங்குவதாக ஐதீகம்.

  சூரியனின் இந்த வழிப்பாட்டை அந்த 5 நாட்களும் காலை 6.10 மணி முதல் 6.30 மணி வரை பக்தர்கள் காணலாம்.

  14. இத்தலம், கண்நோய், சூரியப்புத்தி தோஷம், பித்ரு சாபம் ஆகிய மூன்றையும் தீர்ப்பதில் புகழ் பெற்றது.

  15. சங்கிலி நாச்சியாருக்கு இத்தலத்தில் தனி சன்னதி உள்ளது.

  அமாவாசை தினத்தன்று இந்த சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

  16. இத்தலத்துக்கு விருட்சமான நாகலிங்க மரம் சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கணிக்கப்பட்டுள்ளது.

  குழந்தை வரம் வேண்டுபவர்கள் இந்த நாகலிங்க மரத்தில் தொட்டில் கட்டி தொங்க விடுவதுண்டு.

  17. தல விருட்சமான நாகலிங்க மரம் அருகே மூன்று நாகர்சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

  திருமண தடையால் தவிக்கும் இளம் பெண்கள், அந்த நாகர் சிலைகளை சுற்றி மஞ்சள் கிழங்கு சேர்த்து, மஞ்சள் கயிற்றை சுற்றி கட்டினால் உடனடியாக பலன் கிடைக்கிறது.

  18. ஞாயிறு தலத்தில் தினமும் சிவாகம முறைப்படி பூஜைகள் நடத்தப்படுகிறது.

  19. ஆவணி மாதம் சூரிய பகவானுக்கு இத்தலத்தில் 108 சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது.

  20. கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை புஷ்பரமேஸ்வரருக்கு ருத்ர ஹோமம், ஏசதின லட்சார்ச்சனை நடத்தப்படுகிறது.

  21. புராதன பழமை சிறப்பு மிக்க இந்த ஆலயத்தில் பிரம்மோற்சவம் நடத்தப்படாமல் உள்ளது.

  இது உண்மையிலேயே மிகப்பெரும் குறையாகும்.

  பக்தர்கள் முன் வந்து ஒத்துழைப்புக் கொடுத்தால் ஆண்டுதோறும் ஜாம்... ஜாம்... என்று பிரம்மோற்சவம் நடத்தலாம்.

  22. ஞாயிறு ஆலயத்தில் வாகனங்கள் ஒன்று கூட இல்லாதது பெரும் குறையாகும்.

  வசதி வாய்ப்புள்ள பக்தர்கள் தங்களால் இயன்ற வாகனங்களை செய்து ஆலயத்துக்கு அன்பளிப்பாக கொடுத்தால் பெரும் புண்ணியம் வந்து சேரும்.

  23. ஞாயிறு ஆலய கருவறை விமானம் 'அஷ்டாங்க விமானம்' என்ற முறைப்படி கட்டப்பட்டுள்ளது.

  மிக, மிக பழமையான ஆலயங்களில் மட்டுமே இத்தகைய அஷ்டாங்க விமான அமைப்பை காண முடியும்.

  24. தினமும் இந்த தலத்தில் 2 கால பூஜை நடத்தப்படுகிறது.

  காலை 8 மணிக்கு ஒரு தடவையும், மாலை 6 மணிக்கு மற்றொரு தடவையும் அபிஷேகம் நடத்தப்படுகிறது.

  25. ஞாயிறு கோவில் தினமும் காலை 7.30 மணி முதல் மதியம் 11.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் திறந்து இருக்கும்.

  ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனத்துக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்படுகிறது.

  • அந்த எண்ணெய்யை ஞாயிறு புஷ்பரதேஷ்வரர் ஆலயத்தில் விளக்கு எரிக்க பயன்படுத்தினார்கள்.
  • இதுபோல பல தாழிகள் இந்த ஆலயத்தில் இருந்ததாக தெரிகிறது.

  ஞாயிறு புஷ்பரதேஷ்வரர் ஆலயத்துக்கு சென்றால் சுற்று பிரகாரத்தில்,

  திருக்குளத்துக்கு செல்லும் வழியில் மிகப்பெரிய பானை ஒன்று இருப்பதை நீங்கள் பார்க்க முடியும்.

  பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் இந்த தாழி தயாரிக்கப்பட்டுள்ளது.

  அந்த காலத்தில் ஞாயிறு ஊரிலும், அதைச் சுற்றிலும் உள்ள ஊர்களிலும் ஏராளமான இலுப்பை மரங்கள் இருந்தன.

  அந்த மரங்களில் இருந்து எண்ணெய் கிடைத்தது.

  அந்த எண்ணெய்யை ஞாயிறு புஷ்பரதேஷ்வரர் ஆலயத்தில் விளக்கு எரிக்க பயன்படுத்தினார்கள்.

  இலுப்பை எண்ணெய்யை ஆலயத்தில் சேமித்து வைப்பதற்காக இந்த பெரிய தாழி (பானை)யை நம் முன்னோர் உருவாக்கி இருந்தார்கள்.

  இதுபோல பல தாழிகள் இந்த ஆலயத்தில் இருந்ததாக தெரிகிறது.

  இந்த ஒரு பெரிய பானையே மிஞ்சி உள்ளது.

  இவ்வளவு பெரிய பானையில் இலுப்பை எண்ணெய்யை நம் முன்னோர்கள் சேமித்து வந்ததைப் பார்க்கும்போது,

  ஞாயிறு புஷ்பரதேஷ்வரர் ஆலயம், எவ்வளவு பெரிய ஆலயமாக இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது

  • சீதாசமேத சொர்ண கல்யாணராமருக்கு அடிக்கடி அபிஷேக அலங்காரப் பூஜைகள் நடக்கும்.
  • அபிஷகேத்திற்கு சந்தனம் வழங்கினால், சொர்க்க வாழ்வு கிடைக்கும்.

  சீதாசமேத சொர்ண கல்யாணராமருக்கு அடிக்கடி அபிஷேக அலங்காரப் பூஜைகள் நடக்கும்.

  இந்த அபிஷேகத்துக்கான பொருள்களாக எந்தெந்த பொருட்களை வழங்குவதன் மூலம் என்னென்ன பலன்கள் பெறலாம் என்ற விபரம் வருமாறு:-

  பஞ்சாமிர்தம் - வெற்றி

  பால் - நீண்ட ஆயுள்

  தேன் - இசை ஞானம்

  நெய் - சுகமான வாழ்வு

  பன்னீர் - புகழ்

  சந்தனம் - சொர்க்க வாழ்வு

  பூக்கள் - மகிழ்ச்சி

  குங்குமம் - மங்களம்

  தண்ணீர் அபிஷேகம்- மனசாந்தி

  நல்லெண்ணை - பக்தி

  வாசனை திரவியம் - ஆயுள் வலிமை

  மஞ்சள்பொடி - ராஜவசியம்

  வாழைப்பழம் - பயிர் விருத்தி

  மாம்பழம் - சகல வசியம்

  பலாப்பழம் - உலக வசியம்

  திராட்சைபழம் - பயம் நீங்குதல்

  மாதுளைப்பழம் - பகை நீங்குதல்

  தேங்காய்த்துருவல் - அரசுரிமை

  தயிர் - சந்தான (மக்கள்) விருத்தி

  இளநீர் - நல்ல புத்திரபேரு

  கருப்பஞ்சாறு - சாஸ்திரத் தேர்ச்சி

  பஞ்சகவ்யம் - ஆத்மசுத்தி பால நிவர்த்தி

  எலுமிச்சைப்பழம் - யம பயம் நீக்கும்

  நெல்லி முள்ளிப்பொடி- நோய் நீக்கம்

  வஸ்திரம் - ராஜயோகம்

  புஷ்பம் - மகிழ்ச்சி

  சந்தனம் - செல்வம் சுவர்க்கயோகம்

  கஸ்தூரி - வெற்றி உண்டாகுதல்

  கும்பம் (ஸ்நாயணம்)- அசுவமேத யாகப்பலன்

  • அப்போது சீதா சமேத சொர்ண கல்யாணராமர், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர் சிலைகள் கிடைத்தன.
  • முழுவதும் பச்சை நிற மரகத கல்லால் அந்த சிலை வடிவமைக்கப்பட்டு இருந்தது.

  ஞாயிறு புஷ்பரதேஸ்வரர் ஆலயத்தின் நுழைவாயில் இடது பக்கம் சீதா சமேத சொர்ண கல்யாணராமர் ஆலயம் உள்ளது.

  இது சமீபத்தில் உருவான ஆலயம்தான்.

  ஆனால் இந்த ஆலயத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் இறை மூர்த்தங்கள் அனைத்தும் பல நூற்றாண்டுகள் முற்பட்டவை.

  கடந்த 2002-ம் ஆண்டு ஞாயிறு கிராமத்தில் பள்ளிக்கூடத்தை சீரமைக்க பள்ளம் தோண்டினார்கள்.

  அப்போது சீதா சமேத சொர்ண கல்யாணராமர், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர் சிலைகள் கிடைத்தன.

  அந்த சிலைகளை தொல்பொருள் துறையினர் ஆய்வு செய்தபோது பல ஆச்சரியமான தகவல்கள் தெரியவந்தன.

  குறிப்பாக சக்கரத்தாழ்வார் சிலை சுமார் 800 ஆண்டுகள் பழமையானது என்று தெரியவந்தது.

  முழுவதும் பச்சை நிற மரகத கல்லால் அந்த சிலை வடிவமைக்கப்பட்டு இருந்தது.

  பல்லவ மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இந்த சிலை உருவாக்கப்பட்டிருப்பதும் தெரிந்தது.

  இந்த சக்கரத்தாழ்வார் சிலையின் ஒரு பக்கத்தில் சுதர்சனரும், பின்பக்கத்தில் யோக நரசிம்மரும் வீற்றுள்ளனர்.

  இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையும், கடைசி ஞாயிற்றுக்கிழமையும் "இத்தலத்தில் சுதர்சன ஹோமம்" நடத்தப்படுகிறது.

  காலை 9 மணி முதல் 12 மணி வரை இந்த சுதர்சன ஹோமம் நடைபெறும்.

  பக்தர்களும் இந்த ஹோமத்தில் பங்கேற்கலாம்.

  வசதி உள்ளவர்கள் சுதர்சன ஹோமத்திற்கு நெய், பால், தயிர், தேன் போன்றவற்றை வாங்கிக் கொடுக்கலாம்.

  சுதர்சன ஹோமம் செய்தாலோ அல்லது பங்கேற்றாலோ ராகு-கேது தோஷம் உடனே விலகி விடும்.

  இத்தலத்து ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.

  ஞாயிறு புஷ்பரதேஸ்வரர் ஆலயத்தில் சிவபெருமான், சூரியனை வழிபட்ட பிறகு மறக்காமல் அருகில் உள்ள சீதா சமேத கல்யாணராமரையும் வழிபடவும்.

  மனதுக்கு அமைதி கிடைக்கும்.

  • ஓம் என்பது பிரணவம், இந்த பிரணவமே வேதத்தின் மூலம்.
  • வி+நாயகன் என்றால், வேறு தலைவர் இல்லாதவர் என்பது பொருள்.

  ஓம் என்பது பிரணவம், இந்த பிரணவமே வேதத்தின் மூலம்.

  ஓம் என்ற ஒலியின் வடிவமே பிள்ளையார்.

  பிள்ளையார் ஒப்பாரும் மிக்கவரும் இல்லாதவர்.

  தனக்கு மேல் தலைவன் இல்லாதவர்.

  வடமொழியில் இவர் பெயர் விநாயகன்.

  வி+நாயகன் என்றால், வேறு தலைவர் இல்லாதவர் என்பது பொருள்.

  அவர் இவ்வாலயததின் முதற் கடவுளாக எழுந்தருளியிருக்கிறார்.

  கி.பி. 7 நூற்றாண்டு இவருக்கு காசியில் துண்டி வினாயகர் என்ற பெயர்.

  பல்லவர் காலத்து சிற்பம் என்ற பெருமையும் உண்டு.

  இவரைச் சிறப்பாக வழிபடும் நாட்கள், வெள்ளிக்கிழமை, மாதந்தோறும் வளர்பிறை சதுர்த்தி, ஆவணி சதுர்த்தி, செவ்வாய்க்கிழமை.

  பிரம்மாவிடம் ஓம் என்ற பிரணவத்தின் விளக்கம் கேட்டுத் தெர